Top 5 Face pack:முகம் பளபளப்பாக இருக்க 5 இயற்கை ஃபேஸ் பேக் ரெசிபிகள்!...


View This Image


அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு இயற்கை முறைகள் மிகவும் முக்கிய பங்கு வகுக்கின்றனர். அவற்றில் மிக முக்கியமான ஒன்று ஃபேஸ் பேக் (Face Pack) பயன்படுத்துவது. வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் இயற்கை பொருட்களான மஞ்சள், தயிர், தேன், கற்றாழை, கடலைமாவு, சந்தனம் போன்ற பலவற்றை  கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு பல நன்மைகளை  வாரி வழங்குகின்றனர்.

ஃபேஸ் பேக் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

ஃபேஸ் பேக்குகள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள்,எண்ணெய் வடிதல், இறந்த செல்கள் முதலியவற்றை  நீக்கி முகத்தை புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. மேலும், முகப்பரு, கரும்புள்ளிகள், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள்போன்ற  பல்வேறு சருமப் பிரச்சினைகளைக் குறைக்கவும் ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவுகின்றன.

ஒவ்வொரு சரும வகைக்கும் (எண்ணெய் சருமம்(Oil Skin), வறண்ட சருமம்(Dry Skin), கலப்பு சருமம்(Combination skin), உணர்திறன் கொண்ட சருமம்(Sensitive skin) ஏற்ற ஃபேஸ் பேக்குகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது மிக மிக முக்கியம். சரியான முறையில் தொடர்ந்து பயன்படுத்தினால், சருமம் ஆரோக்கியமாகவும், எந்த வித பாதிப்பும் இல்லாமல் இயற்கையான பிரகாசத்துடனும் இருக்கும்.

இந்த பதிவின் மூலம், உங்கள் சருமத்தை பாதுகாக்கவும் அழகுபடுத்தவும் உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள இயற்கை ஃபேஸ் பேக் ரெசிபிகளைப் பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.

1)உளுந்து பேஸ்பேக்

தேவையான பொருட்கள்:

உளுந்து  பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 

கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் 

எலுமிச்சை பழ சாறு  - பாதி

மஞ்சள் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன் 

தயிர்  - தேவையான அளவு 

செய்யும் முறை: 

ஒரு பௌலில் அரைத்து வைத்த உளுந்து பவுடர் 2 டேபிள் ஸ்பூன், கடலை மாவு  ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். பின் அதில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பவுடர், தேவையான அளவு தயிர் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேருமாறு ஐந்து நிமிடம் நன்கு கலந்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான் உளுந்து பேஸ்பேக் தயார். குளிக்க செல்லும்முன் இந்த பேஸ்பேக்-யை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். முகம் மென்மையாகவும், பளப்பளவென்றும் இருக்கும்.

2.முல்தானி மிட்டி பேஸ்பேக் 

தேவையானப் பொருட்கள்:

முல்தானி மிட்டி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 

தக்காளி - 1/2 பழம் 

உருளைக்கிழங்கு - 1/2 கிழங்கு 

எலுமிச்சை பழம் - 1/2 பழம் 

ரோஸ் வாட்டர் - 2 டேபிள்ஸ்பூன் 

செய்யும் முறை:

மிக்ஸி ஜாரில் தக்காளி பழம் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் பாதி வெட்டி வைத்து கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி பவுடர் எடுத்து அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் மென்மையாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு, அரைத்ததை பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கொண்டால் முல்தானி மிட்டி பேஸ்பேக் தயார். வாரத்திற்கு ஒருமுறை இந்த பேஸ்பேக்-யை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

3)பச்சை பயிறு பேஸ்பேக் 

தேவையானப் பொருட்கள்:

பச்சை பயிறு - 2 டேபிள் ஸ்பூன் 

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் - 1/2 டேபிள் ஸ்பூன் 

பால் - தேவையான அளவு 

செய்யும் முறை:

பச்சை பயிறு, கடலை பருப்பு, வெந்தயம் ஆகிய மூன்றையும் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்தால் பாசிப்பயிறு பேஸ்பேக் தயார். வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேஸ்பேக் பயன்படுத்தினால் முகம் வெள்ளையாவது உறுதி.

4) பீகே பேஸ்பேக் 

செய்யும் முறை:

பீட்ருட் - 1

கேரட் - 1

எலுமிச்சை பழம் - 1

தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 

அரிசி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்யும் முறை:

மிக்ஸி ஜாரில் பீட்ருட் மற்றும் கேரட் இரண்டையும் அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். சாறுடன் எலுமிச்சை பழம், தயிர் மற்றும் அரிசி பவுடர் சேர்த்தால் பீகே பேஸ்பேக் தயார். இந்த பேஸ்பேக்-யை ஒரு முறை முகத்தில் பயன்படுத்தினால் போதும் முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி முகம் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

5) கற்றாழை பேஸ்பேக் 

தேவையான பொருட்கள்:

கற்றாழை - 2(பெரிய துண்டு)

கோதுமை மாவு - 1/2 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் 

தண்ணீரில் ஊறவைத்த அரிசி - 2 டேபிள் ஸ்பூன் 

அரிசி கழுவிய தண்ணீர் - தேவையான அளவு 

செய்யும் முறை:

கற்றாழையை சுத்தம் செய்து 2 துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். பின், அதனுடன் அரிசி மற்றும் அதன் தண்ணீரையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்ததுடன்  கோதுமை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான் கற்றாழை பேஸ்பேக் தயார். இந்த பேஸ்பேக் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள் முகம் இயற்கையான பொலிவுடனும், தோல் மென்மையாகவும் காணப்படும். 


மேலே குறிப்பிட்டுள்ள 5 சிறந்த பேஸ்பேக்-யை  அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான அழகை வீட்டில் இருந்து கொண்டே பெறலாம். எந்த அழகு நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.










 

Post a Comment

0 Comments

Women

Responsive Advertisement