Papaya Fruit: பப்பாளிப்பழத்தை பற்றிய சில முக்கியமான தகவல்கள் இதோ!...
பப்பாளி பழம்(Papaya Fruit) Benefits of Papaya :பப்பாளி பழம் சுவையான ஆரோக்கியம் நிறைந்த மற்றும் ஊட்டச்சத்து உடைய பழமாகும். இது பொதுவாக மஞ்சள் நிறத்தில் காட்சியளித்து, இனிப்பும் மென்மையும் நிறைந்த சுவையுடன் இருக்கும். பப்பாளி பழத்தில் வைட்டமின்சி, ஏ, இ மற்றும் பி காம்ப்ளெக்ஸ், பீட்டா-கரோட்டின், பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து மிகுந்த அளவில் காணப்படுகிறது. இதனுள் உள்ள பபெயின் (Papain) என்ற என்சைம் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றுப் புண் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவி புரியும். பப்பாளி பழம், தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். முகத்திலுள்ள கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றை குறைக்க இதன் பேஸ்டு பயன்படுகிறது. தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் இது மிகவும் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் உணவாகும். எனவே, பப்பாளி பழம் இயற்கையான மருந்து என கூறுவது மிகையாகாது. உடலுக்கு இயற்கையான அழகையும், ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும் பப்பாளிப்பழத்தை பற்றி இன்னும் விரிவாகப் பார்க்கலாம். உடல் எடையை கட்டுப்படுத்த ...