Ad Code

Free & Affordable Price Canva Editable Template

Recent Posts

Responsive Advertisement

Pimples Solution: முகத்தில் அடிக்கடி அதிகப்படியான பருக்கள் வருகிறதா? இதை மட்டும் செய்தால் போதும்.முகப்பரு காணாமல் போய்விடும்


View This Image



Mugaparu neenga tips tamil:முகப்பரு பொதுவாக முகத்தில் ஏற்படும் சிறிய அழற்சி மற்றும் கொப்பளிப்பு கொண்ட தோல் பிரச்சனையாகும்.  இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஏற்படும் பொதுவான  பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு காரணம் முகத்திற்கு பெரும்பாலும் ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பேஸ் வாஷ்,பேஸ் கிரீம் மற்றும் பல முகத்திற்கு பயன்படுத்தும் செயற்கை பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவதாலும் முகத்தில் பருக்கள் மற்றும் அலர்ஜி அறிகுறிகள் ஏற்படும். சில பேர் என்ன செய்வார்கள் என்றால் முகத்திற்கு ஏற்ற  பேஸ் வாஷ்,பேஸ் கிரீம் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் அதனை பற்றி தெரியாமல் பயன்படுத்துவார்கள். அதன் பின்விளைவின் அறிகுறி பரு மற்றும் முகத்தில் சிவப்பு நிறைந்த அலர்ஜி குறிகள் மேலும் பல பிரச்சனைகள் முகத்தில் ஏற்படலாம்.அதனால் சிறந்த தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.

இதனை சரியான முக தூய்மை, சீரான உணவு பழக்கங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் மூலம்  எளிதில் கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் விட்டுவிடும்போது முகத்தில் நிறமிழப்பு மற்றும் தடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முகப்பருவை  தடுக்கும் வழிமுறைகள்

தோலை சுத்தமாக வைத்தல்:

தோல் சுத்தமாக இருப்பது  அழகு பராமரிப்பு மட்டுமல்ல, ஆரோக்கியமான தோலுக்கும்  அடித்தளமாக இருக்கும். தினமும் இரண்டில் இருந்து மூன்று முறை  முகத்தை கழுவுவது மிகவும் அவசியம். இது தோலில் தேங்கிய இருக்கும் எண்ணெய், மாசு, இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை அகற்ற உதவுகிறது.தோலை தோலை சுத்தமாக வைப்பதற்கு வீட்டுமுறை பயன்படுத்துவது சிறந்தது.

முகத்திற்கு பாசிப்பயிறு பவுடர் மற்றும் கடலை மாவு போன்றவற்றை பேஸ் வாஷ் ஆக பயன்படுத்தலாம்.தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முகம் பளிச்சென்று மாறும்.மேலும், பருக்கள் உருவாவதையும் தடுக்கலாம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்:

முகப்பருவை தடுக்கும் வழிகளில்  தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கிய பங்கு வகுக்கிறது. தண்ணீர் உடலின் உள்ளேயுள்ள நச்சுகளை வெளியேற்றி, தோலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தோலின் ஈரப்பதத்தை பேணுவதுடன், எண்ணெய் சுரப்பை சமநிலையில் வைத்திருக்கவும்  துணை புரிகிறது. தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலம் முகத்தில் பருக்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறைவடைகிறது. மேலும், தண்ணீர் குடிப்பது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தோலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை விரைவாக எடுத்துச் செல்ல உதவுகிறது. இதனால் தோல் பளபளப்பாகவும், நீடித்த சுத்தத்துடனும்  இருக்கும்.

முடியை முகத்தில் விழாமல் தடுப்பது:

முடி எண்ணெய் மற்றும் அழுக்கு நிறைந்ததாக இருக்கக்கூடிய பகுதியாக இருப்பதால், முகத்தில் தலைமுடி தொடர்ந்து தொடும்போது தோல் துளைகள் அடைந்து முகப் பருக்கள் (acne) ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக நீளமான முடி வைத்திருப்பவர்கள் அல்லது எண்ணெய் பூசிய பிறகு முகத்தில் முடி விழுவதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது, தோலில் எண்ணெய் மற்றும் அழுக்கு சேர்ந்து கிருமிகள் உருவாகலாம். இதைத் தவிர்க்க, முடியை பின்னி கட்டி வைத்தல்,அல்லது ஹேர் கிளிப் பயன்படுத்துதல், தூங்கும் போது முடியை பின்புறமாக கட்டி வைப்பது போன்றவை முக்கியம் ஆகுகிறது. முடி சுத்தமாகவும் எண்ணெய் இல்லாதபடி வைத்திருக்கவும் செய்ய வேண்டும் . இவ்வாறு கவனத்தோடு இருந்தால் முகத்தில் முடி விழுவதால்  ஏற்படும் பருக்களைத் தடுக்கலாம்.

மிகவும் எண்ணெய் கொண்ட அழகு தயாரிப்புகளை தவிர்க்கவும்:

முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பதை தடுப்பதற்காக அதிக எண்ணெய் (oil-based) கொண்ட அழகு தயாரிப்புகள் பயன்படுத்தும் போது தோல் துளைகள் அடைபட்டு, பாக்டீரியாக்கள் பரவி பருக்கள் உருவாக காரணமாக இருக்கிறது. குறிப்பாக மெக்கப், மாய்ச்சரைசர், சன்ஸ்கிரீன் போன்றவை "non-comedogenic" என குறிக்கப்பட்டிருப்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் அவை தோல் துளைகளை அடைக்காது. எண்ணெய் வகைகள் அதிகம் உள்ள தயாரிப்புகள் தோலுக்கு மிகவும் பாதிப்பாக இருக்கலாம். எனவே, ஆயில்ஃப்ரீ மற்றும் லைட் வெயிட் தயாரிப்புகளை தேர்ந்தெடுத்து, தோலை சீராக பராமரிக்கலாம். இது பருக்களை தடுப்பது மட்டும் இல்லாமல் தோலின் இயற்கை சமநிலையை பேணவும்  உதவியாக இருக்கும்.

சரியான உணவுப் பழக்கங்கள்:

முகப் பருக்கள் (acne) உணவுப் பழக்கங்களுடன் நேரடி தொடர்பு கொண்டது. அதிக எண்ணெய், காரம், இனிப்பு போன்றவை ஹார்மோன் மாற்றங்களை தூண்டும் வாய்ப்பு இருப்பதால் பருக்களை அதிகரிக்கச் செய்யும். பருக்களை கட்டுப்படுத்த, சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்க்க வேண்டும். இதில் பழங்கள், கீரை வகைகள், மூலிகைகள்,தேநீர், முழுதானியங்கள், பச்சை காய்கறிகள் முக்கியமானவையாக இருக்கின்றனர். ஓமேகா–3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், வேர்க்கடலை, அவகாடோ போன்றவை தோலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.உணவுகளின் நேரம் மற்றும் அளவையும் கட்டுப்படுத்துவது அவசியம். இந்த நல்ல உணவுப் பழக்கங்கள் பருக்களை குறைத்து, தோலை சுத்தமாகவும் பளபளப்பாகவும் தொற்றுகள் பரவாமலும் வைத்திருக்க உதவுகிறது.

மன அழுத்தம் இருக்க வேண்டாம்:

மனஅழுத்தம்(ஸ்டிரெஸ்) பருக்களை ஏற்படுத்தும் முக்கியமான உள்சார் காரணமாகக் இருக்கிறது. அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டால், உடலில் கார்டிசால் (Cortisol) போன்ற ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. இது தோலில் எண்ணெய் சுரப்பை அதிகரித்து, தோல் துளைகள் அடையும் நிலையை உருவாக்கி பருக்களை உண்டாக்கும். மன அமைதியை இழந்த நிலையில், தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கம், தோல் பராமரிப்பை தவரவிடல்  போன்றவை கூட ஏற்படலாம். எனவே, தினசரி யோகா, தியானம், தினசரி வேலைகளில் ஈடுபாடு, நல்ல தூக்கம் போன்றவற்றை கடைப்பிடிப்பது மன அழுத்தத்தை குறைத்து, பருக்களை கட்டுப்படுத்த உதவும். 

கைகள் மூலம் முகத்தை அதிகம் தொட வேண்டாம்:

நாம் அறிந்தோ அறியாமலோ பல முறை கைகளை முகத்தில் வைத்துக் கொள்வோம். ஆனால் கைகளில்  இருக்கும் பலவிதமான கிருமிகள், மாசுகள் முகத்தில் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. இது தோல் துளைகளை அடைத்து முகப் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உருவாகச் செய்யும். குறிப்பாக கைகளை கழுவாமல் முகத்தை தொடுவது முகத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தில் ஏற்கனவே உள்ள பருக்களை பிய்ப்பதோ அல்லது உடைப்பதோ செய்தால்,பருக்கள் அதிகமாகபரவக்கூடிய வாய்ப்பு உள்ளது மேலும், தடயங்களாக மாறவும் செய்யலாம். எனவே, சுத்தமான கைகளை மட்டுமே முகத்திற்கு பயன்படுத்த வேண்டும், அதிலும் அவசியமில்லாமல் முகத்தை தொட வேண்டாம் என்பது முக்கியமானது ஒன்றாக உள்ளது.

முகப் பராமரிப்பு பொருட்களை பகிர்ந்து பயன்படுத்த வேண்டாம்:

முகப்பருவை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்று, முகப்பராமரிப்பு பொருட்களை (பிரஷ்கள், க்ரீம், மேக்கப் ஸ்பாஞ்ச் போன்றவை) மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துவது. இதனால் ஒருவரின் தோலில் உள்ள பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. முகத்தில் ஏற்கனவே பருக்கள் உள்ளவர்களின் பொருட்களை பயன்படுத்தினால், அது மேலும் பரவலாக பருக்களை ஏற்படுத்தலாம். தனிப்பட்ட சுத்தமான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். மேக்கப் பிரஷ்கள், ஃபேஸ் டவல்கள் போன்றவை தனிப்பயனுக்கு வைத்திருக்க வேண்டும். இந்த பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் முகத்தின் சுத்தமும் பாதுகாப்பும் மேம்படுகிறது.

தோல் மருத்துவரை அணுகுதல்:

பருக்கள், மிக அதிகமாக மற்றும் அடிக்கடி முகத்தில் ஏற்படுகிறதெனில், அது சாதாரணமான தோல் பிரச்சனையைவிட ஆழமான காரணங்களைக் கொண்டிருக்கலாம். இவ்வகையிலான நிலைகளை வீட்டிலேயே சிகிச்சை செய்ய முயற்சிப்பது தவறான முடிவுகளை தரக்கூடும். தவறான பொருட்கள் பயன்பாடு,பருக்களை கைகளால் அழுத்தி உடைத்தல் போன்றவை முகத்தில் தழும்புகள்  ஏற்படச் செய்யும். எனவே பருக்கள் தொடர்ந்து அஅதிகரிக்கிறது எனில், தாமதிக்காமல் தகுதியான டெர்மடாலஜிஸ்ட் (தோல் மருத்துவர்)யை அணுகுவது மிகவும் முக்கியம் ஆகுகிறது. மருத்துவர் பருக்களின் காரணத்தை கண்டறிந்து, சரியான மருந்துகள், கிரீம்கள் அல்லது சிகிச்சைகளை பரிந்துரைப்பார். இது விரைவில் பருக்களை குறைத்து, தோலின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கிறது.



Post a Comment

0 Comments

Responsive Ad

Free & Affordable Price Canva Editable Template

Ad Code