Summer Time Best Fruits:வெயில் காலத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கிறீர்களா?இந்த பழத்தை சாப்பிடுங்க...
வெயில்காலம் இயற்கையில் ஒரு மாற்றம் மட்டுமே. ஆனால் அதில் இருந்து நம்மை பாதுகாக்கும் முறைகள் எளிமையானவையாகவே இருக்கின்றன. காலச்சுழற்சி காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வுகளுக்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும், பசுமைச் சூழலை அதிகரிக்க மரங்களை நடுதல் போன்ற முயற்சிகள், வெப்பத்தை குறைக்கும் வகையில் பெரும் பங்களிப்பை செய்யும். மிகவும் வெயிலாக இருக்கும் நேரங்களில் (மதியம் 12 மணி முதல் 3 மணி வரை), வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கலாம். அவசியமான வேலைக்காக வெளியே செல்லும்போது, தடையில்லா துணிகள், தொப்பி, கண்ணாடி, குடை போன்றவற்றை பயன்படுத்தி சூரிய ஒளியைத் தவிர்க்கலாம். வெயில் காலத்தில் (சமர் சீசனில்) முகத்துக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தரக்கூடிய சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும் இந்த பருவத்தில், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க அதிக தண்ணீர், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவை சருமத்தை உள்ளிருந்து பாதுகாக்கவும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இப்பொது ...