Blackheads Removal Pack:மூக்கு பகுதியில் கரும்புள்ளிகளால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரு பேக்கை மட்டும் பயன்படுத்திப் பாருங்க. கரும்புள்ளி போய் விடும்
Blackheads Removal Home Remedies : முகத்தின் அழகை வெளிப்படுத்துவதில் மூக்கிற்கு அதிகப் பங்கு உண்டு. மூக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் மூக்கின் அழகை கெடுப்பது மட்டும்மில்லாமல் முகத்தின் அழகையும் சேர்த்து கெடுக்கும். நிறைய பேர்களுக்கு மூக்கில் கரும்புள்ளிகள் இருப்பதுண்டு.மூக்கில் அதிகமாகத் தோன்றும் கரும்புள்ளிகள் கோமெடோ (Comedo) வகையாகும். இவை முகத்தின் அழகை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் சுத்தமாக இல்லாதது போல தோற்றமளிக்கும்.இதனை சரி செய்வது மிகவும் சுலபம்.வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து பேக் தயாரித்து கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடலாம். கரும்புள்ளிகள் உருவாகும் விதம்: நம் முகச்சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) எண்ணெய் (Sebum) சுரக்கின்றன.அந்த எண்ணெய், இறந்த செல்கள், தூசி மற்றும் அழுக்கு சேர்ந்து சருமத் துளைகள் (pores) அடைபடுகிறது.இவ்வாறு அடைந்த துளைகள் காற்றில் வெளிப்படும்போது ஆக்ஸிடேஷன் (oxidation) ஏற்பட்டு கருப்பு நிறமாக( Blackheads ) மாறுகிறது.அதை தான் கரும்புள்ளிகள் என்று நாம் கூறுகிறோம். அதிகமாக மூக்கில் தோன்றக் காரணங்கள்: மூக்கு...