Palmyra root tuber: நாவை சுவையால் நடனமாட வைக்கும் பனங்கிழங்கு ரெசிபி!...
பனங்கிழங்கு ரெசிபி பனங்கிழங்கு ( Root Panangkizhangu ): பனம் பழங்களை முளைக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் முளைத்தண்டே பனங்கிழங்கு. இக்கிழங்கு அதிகப்பற்றமாக தென் இந்திய பகுதிகளில் காணப்படுகிறது. மலிவான விலையில் சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கும் இந்த கிழங்கை கிராமப்புறங்களில் இக்கிழங்கை ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுகிறார்கள்.வேகவைக்கப்பட்டு தீயில் சுடப்பட்ட கிழங்கானது சித்த மருத்துவத்தில் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.முதிர்ச்சியடைந்த விதைகள் எவ்வித பயனைத் தராத போதிலும் அவற்றை முளைக்க வைத்து மாவுச்சத்து மிகுந்த முதல் இலையுடன் கூடிய தரை கீழ் தண்டான பனங்கிழங்குகளை பல விதங்களில் சுவையான முறையில் சாப்பிடுவதற்கு பயன்படுத்தலாம். பனங்கிழங்கை வைத்து நாவை நாட்டியம் ஆட வைக்கும் சுவையான ரெசிபி வகைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம். 1.பனங்கிழங்கு லட்டு தேவையானப் பொருட்கள்: பனங்கிழங்கு - 100 கிராம் பாசிப்பருப்பு - 100 கிராம் நெய் - 50 கிராம் சர்க்கரை - 200 கிராம் பால் - 50 மில்லி லிட்டர் செய்முறை: பாசிப்பருப்பை க...