Posts

Showing posts with the label health tips

விரதம்:பட்டினி மருத்துவம்

Image
  Health Care: அதிகாலையில் எழும் நல்ல பழக்கத்தைப் போலவே, மூன்று வேளை உண்பதைத் தவிர்ப்பது என்ற பட்டினி மருத்துவம் மூலம் மனித உடலில் கழிவு அகற்றும் வேலை இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டே உள்ளது. நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் இருந்து நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதைப் போல, அந்த உணவுப் பொருட்களின் மிச்சத்தைத் திட மற்றும் நீர்க் கழிவுகளாக நம் உடல் வெளியேற்ற சிறுநீரகம், கல்லீரல், தோல், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் பிறந்ததிலிருந்து ஒரு நொடி கூடி ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும். இந்த உடல் உறுப்புகளை, நாம் கரிசனத்துடன் கையாள வேண்டும். அதன் இயக்கங்களுக்கு ஓரளவிற்கு ஒய்வு தர வேண்டும். நாக்கு ருசிக்கு மட்டுமே முன்னுரிமை தந்து, இவை உடல் நலத்திற்குக் கேடானவை, கழிவு நிறைந்தவை எனத் தெரிந்தே பல உணவுகளை திணித்து குடல் இயக்கத்திற்கு கேடு செய்கிறோம். நச்சு நிறைந்த உணவை உண்பதால் உடல் பாதிப்படைகிறது. நம் வீட்டில் கழிவுநீர் தொட்டி நிறைந்து தூர்நாற்றம் ஏற்படுவது போல குடல் கெட்டு, அழுகி, மலம் தங்கி நாற்றமெடுக்கிறது. இதைச் சரிசெய்ய விரதம், பட்டினி போடு...

Food is Medicine:(Siddha)சித்தர் நெறியில் உணவே மருந்து | கண்டிப்பா பாருங்க!...

Image
Siddha Care :இதய நோய், அண்மைக்கால மருத்துவத்திற்குக் கட்டுப்படுத்த இயலாத ஒரு நோயாக சவால் விடுகிறது. இந்நோய்க்கு 200க்கும் மேலான காரணங்களும், 12 விதமான ஆபத்துக்களும் சொல்லப்படுகின்றன. நோய் அறிகுறிகளை வைத்து, மருத்துவ வல்லுநர்கள் இதய நோயைக் கண்டுபிடிக்கவும், நோயின் தீவிர நிலை மற்றும் அதன் விளைவுகளைத் தீர்மானிக்கவும் செய்கிறார்கள். பூரிதக் கொழுப்பும், அதிகபட்சக் கொழுப்பும் இதய நோய்க்குக் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பும், தொழில் மயமான வளர்ந்த நாடுகளில் கூட, உணவுப் பழக்க வழக்கங்கள் இதய நோய்க்கு எப்படிக் காரணங்கள் ஆகுகின்றன என்பதைப் பற்றி சிந்திக்க மறுக்கின்றனர். இது மிகப் பெரும் அவலம். இதய நோய்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஆக்சிஜன் மயமான கொழுப்பு உணவில் அதிகமாவதும், பாலிகோசனால் உணவில் இல்லாததுமே அவ்விரண்டு காரணங்கள்.   முதலில் செயற்கைச் சர்க்கரை(White Sugar)பயன்பாடு குறித்தும் இயற்கையான கரும்புச் சாற்றில் உள்ள, ஆரோக்கியத்திற்கு உதவுகிற மூலக்கூறுகள் எவ்விதம் இழக்கப்படுகின்றன என்பது குறித்தும் நாம் ஆராயலாம். அதாவது, பாலிகோசனால் இல்லாதது பற்றி யோசிப்போம்...

Natural foods that protect the heart:இதயம் காக்கும் இயற்கை உணவுகள்!...

Image
Health Care Tips in Tamil :மானுட உடலின் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்புகளின் முன்னோடியாய் இதயத்தைக் குறிப்பிடலாம். தாயின் கருப்பையிலேயே இதயத்தின் வேலை ஆரம்பமாகி விடுகிறது. இரவு, பகல் பாராது இடைவிடாது மனிதனின் ஆயுட்கா லம் முழுவதும் இயங்கிக் கொண்டே இருக்கும் இனிய தோழன்தான் இந்த இதயம். இதன் துடிப்பு நின்றுவிட்டால், நாடித்துடிப்பு ஏற்படவில்லை என்றால் வாழ்க்கை முடிந்துவிட்டதாய் அர்த்தம்.  நேற்று நானும் அவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மதிய உணவு ஒன்றாகச் சாப்பிட்டோம். லேசாய் நெஞ்சு வலிப்பதாய் சொன்னார். மருத்துவமனை செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது.  இதுபோன்ற நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகளை நாம் கண்கூடாய் கண்டும் கேட்டும் வருகிறோம். இப்பொழுது இதயம் காக்கும் இயற்கை உணவுகளைப் பற்றி அறிவோம். இதயத்தின் செயல்பாடுகள் என்ன? 'இதயம்' என்பது உடலின் அனைத்து உறுப்புக்களும் ஒழுங்கே இயங்க உதவி புரியும் உற்ற நண்பன். அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான இரத்தத்தை இரத்த நாளங்கள் வழியாகத் தொடர்ச்சியாக இறைந்து விடும் ஒரு அற்புதக் கருவி.  ஒவ்வொருவரின் இறுக  மூடிய கையளவே கொண்ட இதயத்தில் (1) இதய வ...

Knee Pain:மூட்டு வலினால ரொம்ப கஷ்டப்படுறீங்களா???இந்த பதிவு உங்களுக்கு தான்!...

Image
Health Care Tips :வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாரையும் பாதிக்கிற இந்த முதுகுவலி எதிர்பாராத நேரத்தில் வருகிற திடீர் விருந்தாளி மாதிரி எப்போது வேண்டுமானாலும் வரும். இதனை சரியான முறையில் கையாண்டால் முதுகு வலியை துரத்தி விட்டு விடலாம்.கீழே அதற்க்கான தெளிவான விளக்கங்களை பார்க்கலாம். வாருங்கள்!... வலிக்கான காரணங்கள்: முதல் காரணம் உட்கார்கிற, நிற்கிற நிலை, எப்போதுமே முதுகு வளையக் கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய வேலை என்றால் உங்கள் இருக்கை. முதுகுக்கு சப்போட்டாக இருக்க வேண்டும். அடி முதுகை ஒட்டினாற் போல ஒரு குஷன் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கொரு முறை ஓய்வு அவசியம்.  அடிக்கடி டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள்? அதுகூட முதுகு வலியை உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மன உளைச்சல் முதுகு மற்றும் கழுத்துத் தசைகளின் ஒருவிதப் பிடிப்பை உண்டாக்கி, முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முதுகெலும்பு தசைகளில் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. விளைவு? லேசாக குனிந்தால் கூட உயிர் போகிற அளவுக்கு முதுகுவலி! தீர்வு என்ன? தியானம் செய்யுங்கள். யோகாவும் பலன் தரும். எடுத்த எடு...

Cervical Cancer:பெண்களே!...கண்டிப்பாக பாருங்க.உங்களுக்கான பதிவுதான் இது

Image
கர்ப்பப்பை புற்றுநோய்  உலகளவில் புற்றுநோய் ஆண்களை விட பெண்களுக்குத்தான் வருகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்(WHO) இத்தகைய பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் அதிகமாக வருவது செர்விக்ஸ் கேன்சர்தான்.   அதென்ன செர்விக்ஸ் கேன்சர்? பெண்களின் கருப்பை நுழைவாசலில் வருகிற ஒரு ஆபத்துதான் செர்விக்ஸ் கேன்சர். பெண்களின் தொப்புகளுக்குச் சற்றே மேலிருக்கும் பெல்விஸ் பகுதியில்தான் இந்த உறுப்பு இருக்கிறது.  பெண்ணின் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் எல்லாம் இந்த செர்விக்ஸில்தான் நடைந்தேறுகின்றன. ஆம். இனிமையான தாம்பத்ய உறவுக்குப் பின்னால் கர்ப்பமடைதல். அவ்வாறு கருவில் உருவான அவளின் இன்னோரு உயிர் வெளி உலகத்திற்கு வந்து உதிப்பதும் அந்த செர்விக்ஸ் வழியாகத்தான். இது மட்டும்மல்ல. மாதவிலக்கு வெளியேறும் வழியான வஜினாவையும், கருப்பையையும் இணைக்கும் பாலமாகவும் செர்விக்ஸ்தான் செயல்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்தான் இன்று ஏராளமான பெண்களுக்குப் புற்றுநோய் வருகிறது. செர்விக்ஸ் கேன்சர் வர காரணங்கள் என்ன? ஆண், பெண் இருவருமே சுத்தமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பெண்களுக்கு மாதவிலக்கு எ...

Papaya Fruit: பப்பாளிப்பழத்தை பற்றிய சில முக்கியமான தகவல்கள் இதோ!...

Image
  பப்பாளி பழம்(Papaya Fruit) Benefits of Papaya :பப்பாளி பழம் சுவையான  ஆரோக்கியம் நிறைந்த  மற்றும் ஊட்டச்சத்து உடைய  பழமாகும். இது பொதுவாக மஞ்சள் நிறத்தில் காட்சியளித்து, இனிப்பும் மென்மையும் நிறைந்த சுவையுடன் இருக்கும். பப்பாளி பழத்தில் வைட்டமின்சி, ஏ, இ மற்றும் பி காம்ப்ளெக்ஸ், பீட்டா-கரோட்டின், பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து மிகுந்த அளவில் காணப்படுகிறது. இதனுள் உள்ள பபெயின் (Papain) என்ற என்சைம் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றுப் புண் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவி புரியும். பப்பாளி பழம், தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். முகத்திலுள்ள கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றை குறைக்க இதன் பேஸ்டு பயன்படுகிறது.  தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் இது மிகவும் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் உணவாகும். எனவே, பப்பாளி பழம் இயற்கையான மருந்து என கூறுவது மிகையாகாது. உடலுக்கு இயற்கையான அழகையும், ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும் பப்பாளிப்பழத்தை பற்றி இன்னும் விரிவாகப் பார்க்கலாம். உடல் எடையை கட்டுப்படுத்த ...