Posts

Showing posts from November, 2025

Patha Vedippu tips:ஒரு வாரத்தில் பாதவெடிப்பு போக எளிய கை வைத்தியம்

Image
Patha Vedippu Neenga Tips in Tamil : இப்பொது இருக்கும் காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர்க்கும் பாதவெடிப்பு எளிதில் வந்து விடுகிறது.ஆனால் பல பேர் இதனை சாதாரணமாக நினைத்து கொண்டு அதனை சரி செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.பாதவெடிப்பு எதனால் வருகிறது என்று தெரியுமா? பாதவெடிப்பு காலில் ஈரப்பதம் குறைவது, நின்று கொண்டே அதிக நேரம்  வேலை செய்வது மற்றும்  சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால்  பாத வெடிப்புகள் ஏற்படுகிறது. மேலும், பாதத்தில் தோல் உலர்ந்து வலி, எரிச்சல் மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு கூட பாதங்களில் ஏற்படலாம். இதனை சரியாக பராமரிக்காமல் விட்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளனர்.  உடலின் உள்புற பராமரிப்பு: பாதவெடிப்பு நீங்க  உடலின் உள்புற பராமரிப்பு மிக மிக அவசியம் ஆகுகிறது. உடலுக்குள் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தோல் உலர்ச்சி அதிகரித்து பாதத்தில் பிளவுகள் எளிதில் தோன்றும். எனவே குறைந்தது 8–10 கண்ணாடி(Glass) தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.பால், தயிர், கீரைகள், பழங்கள், காய்கறிகள், பாதாம்...

Silky and Straight Hair Care:சில்க்கியான கூந்தல் வேண்டுமா? இந்த இயற்கையான ஹேர் பேக்கை மட்டும் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தி பாருங்க ஹேர் பளபளன்னு இருக்கும்

Image
Hair Care Tips in Tamil : பலருக்கும், தங்களது தலைமுடி நேராகவும் பளபளப்பாகவும் இருப்பதே பெரிய ஆசையாக இருக்கும்.ஆனால் இந்த ஆசை சிலக்  காரணங்களால் நிறைவேறாத ஆசைகளாக போய் விடுகின்றனர். ஏனென்றால் இதற்கு காரணம்  வீட்டிலோ அல்லது வெளியிலோ அதிக வேலை இருப்பதால் தலைமுடியை சரியாக பராமரிக்க நேரம் இல்லாமல் போய் விடுவது. இதிலும் சில பேர் வேலையை எளிதாக்குவதற்காக அழகு நிலையத்திற்கு சென்று முடிக்கு சிகிச்சை அளிப்பதுண்டு.இதன் பக்க விளைவு முதலில் முடி பளபளப்பாகத்தான் இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிகிச்சையின் பின் விளைவுகளை காட்ட  ஆரம்பிக்கும். முதலில் தலை முடி கழிய ஆரம்பிக்கும் பின் முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமான நிலைக்கு தலைமுடிக்கு  சேதாரம் ஆகி விடும். பின் சேதாரத்தை சரிசெய்வது சிக்கலில் சென்று முடியலாம். அதனால் தலை முடியை பராமரிப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது.  முகம், தலைமுடி மற்றும் உடலில் வெளிப்புறத்தில்  எந்த பாகத்தை பராமரிப்பதற்கும் முதலில் இயற்கை முறையை பயன்படுத்துங்கள். ஏனென்றால், இயற்கை முறை தான் எந்த பக்கவிளைவுகளையும்  தராது மற்றும்...

Sweet Potato: ஒரு சிறு கிழங்கில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Image
சக்கரைவள்ளிக்கிழங்கு(Sweet Potato) Sweet Potato Benefits in Tamil : உலகம் முழுவதும் முக்கியமாக பயிரிடப்படும் கிழங்கு வகைகளில் சக்கரைவள்ளிக்கிழங்கும்(Sweet Potato)  ஒன்றாகும்.இக்கிழங்கு எளிதில் வளரக்கூடியது. அதுவும் இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகின்றனர்.  குறைந்த விலையில் அதிக சத்துக்களை சர்க்கரைவள்ளிக்கிழங்கு தருவதால் மக்கள் அதிகமாக வாங்கியும்  சாப்பிடுகின்றனர். இக்கிழங்கு அதிகப்பற்றமாக வறட்சி மற்றும் வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு வளரும் திறன் கொண்டதால், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக மகசூல் தரக்கூடியதாக சக்கரைவள்ளிக்கிழங்கு (Sweet Potato) அமைந்திருக்கிறது.இக்கிழங்கு மத்திய மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.  சக்கரைவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவாக மட்டுமில்லாமல், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவற்றில் சிறந்தாக இருக்கிறது.  இக்கிழங்கு  எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டதால், அனைவர்க்கும் ஏற்ற உணவாகவும் காணப்படுகிறது.சக்கரைவள்ளிக்கிழங்கை சுட்டு, வேக வைத்து, இனிப்புகள், சிப்...

Natural Pink Lips at Home: உதடு கருமையாக இருக்கிறது என்று கவலைப்படுறீங்களா? உங்கள் கவலையை போக்க இதோ வந்துடிச்சி!...

Image
Get Pink Lips Naturally : ஒருவர் மற்றவரிடம் பேசும்போது முதலில் கண்களை பார்த்துதான் பேசுவார்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. கண்களுக்கு அடுத்தப்படியாக பார்ப்பது உதட்டை தான்.அதனால் உதட்டின் அழகும் முக்கியமானதாக உள்ளது. உதடு வறண்டு கருப்பாக  இருந்தால் உங்களின் முகம் பார்ப்பதற்கு அழகு குறைந்து   அழகில்லாமல் காணப்படும்.சில பேர் உதட்டின் அழகை பாதுகாக்க ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட, லிப் ஸ்டிக், லிப் க்ளாஸ், லிப் பாம் போன்ற  ரசாயன பொருட்களை பயன்படுத்துவார்கள். இதை உதட்டில் பயன்படுத்தும் போது  நீங்கள் பேசும்போதும்  அல்லது உணவு அருந்தும்போதும்  உங்கள் வாய் வழியாக வயிற்றுக்குள் செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் நோய்கள் ஏற்படவும் செய்யலாம்.இந்த ரசாயன பொருட்களை தவிர்த்துவிட்டாலும்  உதட்டின் கருமை நிறத்தை எப்படி போக்குவது என்ற கேள்வி உங்களிடம் வரலாம். கவலையை விடுங்க. நான் கீழே குறிப்பிடுவதை செய்தால் போதும். இயற்கையாகவே உங்களின் உதட்டை இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றி விடலாம். உதட்டின் கருமை  நிறத்தை மாற்றும் ஸ்கிரப் தேவையானப் பொருட்கள்: எலும...

Hair Care: தலை முடி குறைவாக இருக்கிறது என்று கவலையில் இருக்கிறீர்களா? இதை மட்டும் செய்து பாருங்க. முடி காடு போல் வளரும்!...

Image
Hair Care Tips in Tamil : பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதனால் தலை முடி கழிகிறது என்று தெரியுமா?உடல்நல குறைபாடுகள், மனஅழுத்தம், தவறான உணவுப் பழக்கம், ஹார்மோன் மாற்றங்கள், முறையற்ற தலை முடி பராமரிப்பு  போன்ற காரணங்களால் தான். இதனை சரிசெய்வது மிகவும் சுலபமான விஷயம் தான். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு இருந்தால் முடிக் கழிவதை எளிதில் வென்றுவிடலாம். தலைமுடி கழிவதற்கான முக்கிய காரணங்கள்: ஹார்மோன் மாற்றங்கள் (Hormonal Imbalance): பெண்களுக்கு கர்ப்பம், பிரசவம், ரத்தவிருப்பம் முடிவடைந்து போதல்(menopause) போன்ற நேரங்களில் ஹார்மோன் மாற்றம் வரலாம். அதனால் தலை முடி குறையலாம்.தைராய்டு (Thyroid) ஏற்படுவதாலும்  முடி உதிர்வு ஏற்படலாம். உணவுப் பழக்கங்கள் (Poor Nutrition): உடலுக்குத் தேவையான புரோட்டீன், இரும்புச்சத்து (iron), சிங்க் (zinc), வைட்டமின்கள் (Vitamin D, B12) குறைவாக இருப்பதாலும்  முடி வளராது. மன அழுத்தம் (Stress): அதிகமான மனஅழுத்தம் கொண்டிருப்பவர்கள், கவலையால் அவதியுறுபவர்கள், துக்கம் தாங்காமல் இருப்பவர்கள் போன்றவை  கூட முடி உதிர்வை தூண்டலாம். மரபணு (Genetics): குடும்பத்திலே உ...

Palmyra root tuber: நாவை சுவையால் நடனமாட வைக்கும் பனங்கிழங்கு ரெசிபி!...

Image
  பனங்கிழங்கு ரெசிபி  பனங்கிழங்கு ( Root Panangkizhangu ): பனம் பழங்களை முளைக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் முளைத்தண்டே பனங்கிழங்கு. இக்கிழங்கு அதிகப்பற்றமாக தென் இந்திய பகுதிகளில்  காணப்படுகிறது. மலிவான விலையில் சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கும் இந்த கிழங்கை கிராமப்புறங்களில் இக்கிழங்கை  ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுகிறார்கள்.வேகவைக்கப்பட்டு  தீயில் சுடப்பட்ட கிழங்கானது சித்த மருத்துவத்தில் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.முதிர்ச்சியடைந்த விதைகள் எவ்வித பயனைத் தராத போதிலும் அவற்றை முளைக்க வைத்து மாவுச்சத்து மிகுந்த முதல் இலையுடன் கூடிய தரை கீழ் தண்டான பனங்கிழங்குகளை பல விதங்களில் சுவையான முறையில் சாப்பிடுவதற்கு பயன்படுத்தலாம். பனங்கிழங்கை வைத்து நாவை நாட்டியம் ஆட வைக்கும் சுவையான ரெசிபி வகைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம். 1.பனங்கிழங்கு லட்டு  தேவையானப் பொருட்கள்: பனங்கிழங்கு - 100 கிராம்  பாசிப்பருப்பு - 100 கிராம்  நெய் - 50 கிராம்  சர்க்கரை - 200 கிராம்  பால் - 50 மில்லி லிட்டர்  செய்முறை: பாசிப்பருப்பை க...

Home-made Chocolate Recipe: நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான வீட்டு முறை சாக்லேட் ரெசிபி!...

Image
Chocolate Recipe :தமிழர்களின் வழிமரபில்  பரம்பரை பரம்பரையாக கடைபிடித்த வாழ்க்கை முறைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றது பனைத்தொழில்.  தமிழர்களால் "இயற்கையின் புனித மரம்” என்றும் போற்றப்படுகிறது. பனைமரம் ( Borassus flabellifer )  பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளில் வளரக்கூடிய, மிகவும் சகிப்புத்தன்மை மற்றும்  நீர் இல்லாமல் வளரக்கூடிய மரமாகும். இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது.  கருப்பட்டி கருப்பட்டி பனைமரத்தில் இருந்து வரும் பதனீர் வைத்து செய்து கிடைப்பதாகும். பதனீரை நெருப்பிட்டு செய்வதில் நிறைய முறைகள் அல்லது வகைகள் உள்ளனர். சில வகைகள் கலப்படம் செய்தும் விற்ப்பார்கள். அதனால் கருப்பட்டி வாங்கும் போது  கவனமாக வாங்குங்கள். (குறிப்பு: சுத்தமான கருப்பட்டி மணமாக இருக்கும்.) கருப்பட்டியை கட்டியாக ஒரு வடிவத்தில் விற்ப்பார்கள்.ஆனால் அக்கருப்பட்டியை விட மண்பாணையில் கருப்பட்டியை காய்த்து ஒரு பதத்திற்கு வந்தவுடன் அதனை மனப்பாணையில் ஊற்றி சாப்பிடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு  புரியுமாறு சொல்லவேண்டும் என்றால் கட...

Skin Brightening and Whitening Face Pack: முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் வீட்டுமுறை வைத்தியம்

Image
Home Made Natural Skin Brightening Face Pack Skin Care Tips in Tamil : அழகு நிலையங்களில்  கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் தற்காலிக பலன்களை கொடுத்தாலும், அவை தோலின் இயல்பான ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனால் பலர்  வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய பேஸ்பேக்குகளை பயன்படுத்த விரும்புகின்றனர். வீட்டுமுறை பேஸ்பேக்குகள் பெரும்பாலும் நம் சமையலறையில் கிடைக்கும்  பொருட்களால் தயாரிக்கப்படுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல்  தோலின் ஆழப்பகுதியில் ஊடுருவி, கருமையை குறைத்து, தோல் நிறத்தை சமப்படுத்துகின்றன. தோலின் நிறத்தை மாற்றுவது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து வீட்டுமுறை பேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக கருமையை நீக்கிவிடலாம்.  தினமும் செய்யுங்கள்: அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் முகத்திற்கு பேஸ்வாஷ் ஆக பயன்படுத்துங்கள்.முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்திற்கு பொலிவை கொடுக்கும். காய்க்காத பாலை எடுத்து சிறிய காட்டன் துணியில் மூக்கி அதனை முகத்தில் தேயுங்கள். முகத்தில் இருக்கும் கருமை மங்கும்.  வீட்டில் இருக்கும் வெள்ளை உளுந்...