Silky and Straight Hair Care: சில்க்கியான கூந்தல் வேண்டுமா? இந்த இயற்கையான ஹேர் பேக்கை மட்டும் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தி பாருங்க ஹேர் பளபளன்னு இருக்கும்


View This Image

Hair Care Tips in Tamil:பலருக்கும், தங்களது தலைமுடி நேராகவும் பளபளப்பாகவும் இருப்பதே பெரிய ஆசையாக இருக்கும்.ஆனால் இந்த ஆசை சிலக்  காரணங்களால் நிறைவேறாத ஆசைகளாக போய் விடுகின்றனர். ஏனென்றால் இதற்கு காரணம்  வீட்டிலோ அல்லது வெளியிலோ அதிக வேலை இருப்பதால் தலைமுடியை சரியாக பராமரிக்க நேரம் இல்லாமல் போய் விடுவது. இதிலும் சில பேர் வேலையை எளிதாக்குவதற்காக அழகு நிலையத்திற்கு சென்று முடிக்கு சிகிச்சை அளிப்பதுண்டு.இதன் பக்க விளைவு முதலில் முடி பளபளப்பாகத்தான் இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிகிச்சையின் பின் விளைவுகளை காட்ட  ஆரம்பிக்கும். முதலில் தலை முடி கழிய ஆரம்பிக்கும் பின் முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமான நிலைக்கு தலைமுடிக்கு  சேதாரம் ஆகி விடும். பின் சேதாரத்தை சரிசெய்வது சிக்கலில் சென்று முடியலாம். அதனால் தலை முடியை பராமரிப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது. 

முகம், தலைமுடி மற்றும் உடலில் வெளிப்புறத்தில்  எந்த பாகத்தை பராமரிப்பதற்கும் முதலில் இயற்கை முறையை பயன்படுத்துங்கள். ஏனென்றால், இயற்கை முறை தான் எந்த பக்கவிளைவுகளையும்  தராது மற்றும் இறுதிவரை கைகொடுப்பதும் இயற்கை முறைதான். உதாரணமாக,ஒரு முறை  பேக் பயன்படுத்திவிட்டு மறுமுறை பயன்படுத்தவில்லை என்றால் தலை முடிக்கு பக்க விளைவுகள்  எதுவும் நடக்காது. ஆனால் செயற்கை முறை அப்படியல்ல ஒருமுறை தலைமுடிக்கு சிகிச்சை செய்த பின் அதனை தொடர்ந்து செய்யும் வழக்கம் இருக்க வேண்டும். இல்லையென்றால் பக்க விளைவுகள் ஏற்படும். என்றுமே உடலின் வெளிப்புற பராமரிப்பாக இருக்கட்டும் மற்றும் உட்புற பராமரிப்பாக இருக்கட்டும்  அனைத்திற்கும்  இயற்கை முறைதான் சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தலைமுடிக்கு இயற்கையான பேக் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் பயன்கள் பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.

ஆலிவேரா தண்டு (Aloe Vera Stem):

ஆலிவேரா தண்டில்  உள்ள வைட்டமின் ஏ, சி, இ  மற்றும் பி12 போன்ற ஊட்டச்சத்துகள் தலை தோலின் சீரான சுழற்சியை ஊக்குவிக்கின்றன. ஆலிவேராவின் இயற்கையான குளிர்ச்சித் தன்மை இருப்பதால் தலை தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள என்சைம்கள் உதிர்ந்த தலைமுடியை கட்டுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. குறிப்பாக,ஆலிவேரா தண்டில் இருக்கும் சத்துக்கள் முடியின் வேர்களை தழுவி, அவற்றை வலிமைப்படுத்துகின்றனர்.ஆலிவேரா தண்டு தலைமுடி வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகுக்கிறது. 

வாழைப்பழம்(Banana):

வாழைப்பழத்தில் பல சத்துக்கள் இருப்பதால்  முடியின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் சிறந்ததாக இருக்கிறது. இதில்  அதிக அளவு பொட்டாசியம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் இருப்பதால் தலைமுடியை ஈரமாக வைத்து, தலைமுடிக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கின்றனர்.மேலும், வாழைப்பழம் தலை தோலின் சீரமைப்பிற்கு  உதவுவதால், புதிய முடி வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது.வாழைப்பழத்தை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம், தலைமுடிக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை எளிதில் நீக்கிவிடலாம்.

மஞ்சைக் கரு (Egg Yolk):

முட்டையின் மஞ்சைக் கரு (Egg Yolk) தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்ததாக இருப்பதால் இதில் இருக்கும் வலுவான புரதங்கள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்  ஏ, டி, இ), மற்றும் நெய் அமிலங்கள் (fatty acids) அதிக அளவில் உள்ளதால், முடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள பயோட்டின் (biotin) மற்றும் லெசிதின் (lecithin) போன்ற பொருட்கள் தலை முடியை வலிமைப்படுத்தி, முடி உதிர்வை தடுக்கிறது. மேலும், இது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, உலர்ச்சி மற்றும் உடைந்த முடியை சரி செய்யும் தன்மை கொண்டது. 

தயிர்(Curd):

 தயிர் இருக்கும் ப்ரொடீன், கால்சியம், வைட்டமின் பி5 மற்றும் பாக்டீரியா கலந்த ப்ரொபயோட்டிக்ஸ் போன்றவை தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றனர். தயிர் தலை தோலை ஈரமாக வைத்து, தலைமுடியின் உலர்ச்சி மற்றும் அரிப்புகளை குறைக்கும். இது தலைமுடியின் வேர்களை வலிமைப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், தயிரில் உள்ள பாக்டீரியா தலை தோலிலுள்ள அழுக்குகளை சுத்தம் செய்து, தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. தொடர்ந்து தயிரை ஹேர் பேக்குக்கு பயன்படுத்துவதன் மூலம் தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி,முடி ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும்.  

தேங்காய் எண்ணெய்(Coconut Oil):

தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம் (Lauric Acid) மற்றும் கொழுப்பு அமிலங்கள் தலைமுடி வேர்களில் ஆழமாக சென்று முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.மேலும்,தேங்காய் எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக்கொண்டு உலர்ச்சி மற்றும் முடி உதிர்வு ஏற்படாமல் பாதுகாக்கிறது. தொடர்ந்து தலைமுடிக்கு வேர்களில் தடவி மற்றும் ஹேர் பேக்கில் பயன்படுத்தி முடிக்கு தடவி மசாஜ் செய்தால் தலையணையின் இரத்த ஓட்டம் மேம்பட்டு, வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை  கொடுக்கிறது. இதனால் தலைமுடி தடிமனாகவும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி எளிதில் ஹேர் பேக் தயாரிக்கலாம்.தலைமுடிக்கு நல்ல பலன் கொடுக்கும்.

இயற்கையான ஹேர் பேக் 

தேவையான பொருட்கள்:

  • ஆலோவேரா தண்டு - 2 
  • வாழைப்பழம் - 6 பீஸ்()
  • முட்டை - 1 (முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை பயன்படுத்தவும்)
  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 
  • சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

முதலில், தாவரத்தில் இருந்து எடுத்த ஆலிவேரா தண்டை எடுத்து வரும்போது நொடித்த பகுதியில் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றம் அடிக்கும். துர்நாற்றத்தை போக்க 30 நிமிடத்திற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த ஆலிவேரா தண்டை வையுங்கள். 1 மணிநேரம் கழித்து ஆலிவேரா தண்டை எடுத்து தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.  பின் அதில் வாழைப்பழம், முட்டையை  வெட்டி சேர்த்து கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் இந்த மூன்றையும் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.அரைத்துவைத்ததுடன், தயிர் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு கலக்கி கொள்ளுங்கள். குளிப்பதற்கு முன் இந்த ஹேர் பேக்யை முடிக்கு பயன்படுத்தி விட்டு பின் குளிக்கவும்.வாரத்திற்கு ஒருமுறை இந்த ஹேர்பேக்கை செய்து முடிக்கு பயன்படுத்துங்கள். தலை முடி ஆரோக்கியமாகவும், பளப்பளப்பாகவும், நேராகவும் இருக்கும்.