Skin Brightening and Whitening Face Pack: முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் வீட்டுமுறை வைத்தியம்
Home Made Natural Skin Brightening Face Pack Skin Care Tips in Tamil : அழகு நிலையங்களில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் தற்காலிக பலன்களை கொடுத்தாலும், அவை தோலின் இயல்பான ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனால் பலர் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய பேஸ்பேக்குகளை பயன்படுத்த விரும்புகின்றனர். வீட்டுமுறை பேஸ்பேக்குகள் பெரும்பாலும் நம் சமையலறையில் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் தோலின் ஆழப்பகுதியில் ஊடுருவி, கருமையை குறைத்து, தோல் நிறத்தை சமப்படுத்துகின்றன. தோலின் நிறத்தை மாற்றுவது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து வீட்டுமுறை பேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக கருமையை நீக்கிவிடலாம். தினமும் செய்யுங்கள்: அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் முகத்திற்கு பேஸ்வாஷ் ஆக பயன்படுத்துங்கள்.முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்திற்கு பொலிவை கொடுக்கும். காய்க்காத பாலை எடுத்து சிறிய காட்டன் துணியில் மூக்கி அதனை முகத்தில் தேயுங்கள். முகத்தில் இருக்கும் கருமை மங்கும். வீட்டில் இருக்கும் வெள்ளை உளுந்...