மலச்சிக்கல்: நாள்பட்ட மலச்சிக்கல் தீர இயற்கையான உணவுகள்! உடனடி தீர்வு!...Constipation home remedies in tamil
Constipation : மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நாவின் ருசிக்கேற்ப மூக்கு பிடிக்க உண்டு கடைசியில் மலம் மந்தப்படும் போது, மனமும் மந்தப்பட்டு விடுகிறது. அதாவது, மன ஓட்டமும் தடைப்பட்டு விடுகிறது. தினசரி மல ஜலம் குறைவில்லாமல் கழிக்கும் மனிதனே ஆரோக்யமானவன் என்று கூறப்படுகிறது. அவனுடைய உடல் தெளிவானால் மனத்தெளிவு தானே அமையும். அவனால் தெளிவாய்ச் சிந்திக்க முடியும். செயல்படவும் முடியும். மலசிக்கல் ஏன்?எப்படி? நாம் உண்ணும் உணவில் அளவுக்கு அதிகமாய் மாவுப்பொருட்கள், புளிப்பு உணவுகள்,துவர்ப்பு உணவுகள் சேரும் பொழுது மலசிக்கல் உண்டாக ஆரம்பித்து விடுகிறது. எனவே இவற்றை தவிர்த்தல் வேண்டும்.அதிக அளவில் அரிசி உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், ரசம் மற்றும் கடலைமாவில் தயாரித்த பஜ்ஜி, வாழைப்பூ போன்றவற்றை அளவோடு சேர்த்து மலச்சிக்கலில் இருந்து விடுபடுவது சிறந்ததாக இருக்கும். தொடர்ந்து வரும் மலச்சிக்கலே பல்வேறு நோய்களின் படிக்கல்லாய் அமைகிறது. கீழ் கண்ட நோய்கள், மலச்சிக்கலால் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொடரும் மலச்சிக்கலால், உடம்பி...