Headache Reason and Solution: தீராத தலைவலியில் இருந்து விடுபட எளிய வைத்தியம்
Headache : தலை யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக அடிக்கடி தலைவலி வருவதுண்டு. வேலைப்பாடுகள் இருப்பதால் அதிகம் பேர் இதனை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. ஆனால் அது எதனால் வருகிறது என்று தெரியாமல் தவிப்பவர்கள், தலைவலிக்குத் தற்காலிக நிவாரணம் காண்பவர்கள் தான் அதிகமானவர்கள்.சரி;உண்மை என்ன?தலைவலி ஒரு வியாதியா...?அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா...?என்ன தலையை வலிக்கிறதா...?பதில் தெரிந்தால் இன்னும் அதிகமாக தலை வலிக்கும். தலைவலி வருவதற்கான காரணங்கள்: அதிதீவிரமான மன உளைச்சலால் ஏற்படும் தலைவலி பாக்கு, புகையிலை, போதை, என்று மிதப்பவர்கள், காலையில் தலைவலியோடு தான் எழுந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனவே இவர்களுக்கும் தலைவலி வரும். இரத்த கொதிப்பு( Blood Pressure )நோய்க்கு உட்பட்டவர்களுக்குத் தலைவலி வரலாம். தீவிரமான சிந்தனை, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, உணவுப்பொருட்களின் ஒவ்வாமை இவற்றால் மைக்கிரேன்( Migraine )எனப்படும் தலைவலி வரலாம். உடல் எடையை குறைப்பதற்காக மற்றும் வேறு காரணங்களுக்காக சாப்பிடாமல் பசியோடு இருந்தால் தலைவலி வரும். மல சிக்கல் நோய்...