Hair Care Tips in Tamil:பொதுவாக கருமை நிறம் இல்லாத தலைமுடி,பழுப்பு, பொன், சிவப்பு அல்லது வெளிர் நிறங்களில் காணப்படும்.இயற்கையாக கருமை நிறத்தில் தலைமுடி இல்லாதவர்கள் அவர்களது முடியினை கருமையாக மாற்ற நிறைய முயற்சிகளை எடுத்திருப்பார்கள். ஆனால் அது பயனளிக்காமல் போயிருக்கலாம். சரியான பராமரிப்பு இருந்தால் முடிக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.
இன்றும் பெரும்பாலும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் தலைமுடி பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் முடி கருமை இழந்து இருப்பது. தலைமுடியின் நிற மாற்றம் வயதானபோது இயற்கையானது என்றாலும், அது சில பேருக்கு இளம் வயதிலே ஏற்படுவதால் அதிக வேதனைக்கு உள்ளாகுகின்றனர். இதற்கு இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சரியான உணவுமுறை மற்றும் தலைமுடி பராமரிப்பு வழிமுறைகள் மூலம் எளிதில் தீர்வு காண முடியும்.
கருமை இல்லாத முடிக்கு காரணம்:
குடும்பத்தில் வழி வழியாக வரும் சந்ததியினருக்கு முடி வெளிர்ந்திருந்தால் இருந்தால் அதன் மூலமாக வருவது,இரும்புசத்து, துத்தநாகம் (Zinc), B-வகை விட்டமின் (Vitamin பி12), புரோட்டீன் போன்றவை குறைவாக இருப்பது,சத்தில்லாத உணவுகள், ஜங்க் உணவுகள் அதிகமாகக் உட்க் கொள்வது,மனஅழுத்தம்(Stress) கொள்வது, தைராய்டு போன்ற உடல் குறைபாட்டினாலும், நோய்யிக்காக பயன்படுத்தும் மருந்துகள் சாப்பிடுவது, தூக்கம் இல்லாமை, தலைமுடிக்கு அடிக்கடி கலர், ஸ்டைல், க்ரீம் போன்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவது,தூசி, மாசு மற்றும் UV கதிர்கள் தலைமுடியின் மெலனின் உற்பத்தியை பாதிப்பது போன்ற காரணங்களால் தலைமுடி கருமை இழந்து காணப்படுகிறது.
ஆரோக்கியமான தலைமுடி பராமரிப்பு:
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தலைமுடிக்கு இயற்கையான எண்ணெயை தயாரித்து பயன்படுத்தும் போது தேவையான ஊட்டச்சத்துகளை தலைமுடிக்கு வழங்கி வேர் முதல் நுனி வரை வலிமையை சேர்க்கின்றன. குறிப்பாக இவை தலைமுடியின் இயல்பான ஈரப்பதத்தைப் பராமரித்து, நிற மாற்றத்திற்கு காரணமான ஆக்சிடேஷன் செயல்களைத் தடுக்க உதவுகின்றன. மேலும்,தலைமுடிக்கு மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் மாறும்.
தலைமுடியின் நிறத்தை மாற்றி கருமை நிறமாக்கும் இயற்கையான எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.
இயற்கையான தலைமுடி எண்ணெய்(Black Hair Care/Hair Growth Oil)
தேவையானப் பொருட்கள்:
- சுத்தமான தேங்காய் எண்ணெய் - 250லி
- வெந்தயம் - 3 டேபிள் ஸ்பூன்
- கருப்பு எள் - 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 6
- செம்பருத்தி பூ - 3
- கருவேப்பில்லை - தேவையான அளவு
வெந்தயம், கருப்பு எள், கருவேப்பிலை, செம்பருத்திப் பூ போன்றவற்றை காற்று புகாத பாத்திரத்தில் பவுடர் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இயற்கையான எண்ணெய் செய்யும் முறை:
முதலில், வெந்தயம், கருப்பு எள், கருவேப்பிலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின், ஒரு கடாயில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி எண்ணெயை நன்கு கொதிக்க விடவும். கொதித்த பிறகு, அரைத்து வைத்த வெந்தயம், கருப்பு எள், கருவேப்பிலை, செம்பருத்திப் பூ சேர்த்த கலவையுள்ள பவுடரை அதனுடன் சேர்க்கவும். ஐந்து நிமிடம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு கிளறி விடவும். பின் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை அதனுடன் சேர்க்கவும். அனைத்தும் சேர்த்து நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் எண்ணெயை ஆற விடவும்.
எண்ணெய் ஆறியதும் வெங்காயத்தை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.அரைத்த பவுடரை எண்ணெக்குள்ளே வைத்து கொள்ளுங்கள். அப்போதுதான் தலை முடிக்கு நல்ல பலன் கொடுக்கும். காய்ச்ச எண்ணெயை காற்று புகாத பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். தொடர்ந்து இரண்டு வாரம் இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய தலைமுடி எந்த நிறத்தில் இருந்தாலும் கரு கருவென்று கருமை நிறத்திற்கு மாறிவிடும்.

Social Plugin