விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்!...

 

View This Image


Benefits Of Early morning walking:இன்றைய கால வாழ்க்கை முறையில் உடல்நலத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வேலை சுமை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை  போன்ற காரணங்களால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றனர். இத்தகைய சூழலில், எளிமையான மற்றும் செலவில்லாத உடற்பயிற்சியாக நடைப்பயிற்சி அனைவராலும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக,  விடியற்காலையில் நடந்து செல்வது  உடலுக்கும் மனதிற்கும் எண்ணற்ற நன்மைகளை கொடுக்கின்றனர்.


சூரியன் உதயமாகும் முன்போ அல்லது உதயமான உடனேயோ செய்யப்படும் நடைப்பயிற்சி புத்துணர்ச்சியான இயற்கை  காற்றை சுவாசிக்கவும், இயற்கையின் அமைதியை அனுபவிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும்.எவ்வாறு? என்பதை கீழே தெளிவாக பார்க்கலாம்.

1. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுதல்:


விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்தல் இதயம், நுரையீரல், தசைகள் மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதால் உடலின் சகிப்புத் தன்மை அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.


நடைப்பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால் அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் உடல் உறுப்புகள் சரிவர  செயல்படுகின்றன.


2. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது


இன்று உலகளவில்  இதய நோய் அதிகரித்து வரும் முக்கிய  பிரச்சினையாக இருக்கிறது. விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்வது இதயத்தின் செயல்பாட்டை வலுப்படுத்தி  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுடன்  உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.


தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வோர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும். இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விரும்புவோருக்கு நடைப்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்.


3. உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது


உடல் பருமன் பல நோய்களுக்கு காரணமாக இருப்பதால் , விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பு குறைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பதன் மூலம் உடல் பருமனைத் தடுக்கவும், ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெறவும் முடியும்.


4. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது


அதிக வேலைச்சுமை  மற்றும் வாழ்க்கைச் சவால்கள் காரணமாக பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். விடியற்காலையில் அமைதியான சூழலில் நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்தி  சரியாக யோசிக்கும் திறனை கொடுக்கிறது.


நடைப்பயிற்சியின் போது உடலில் "என்டார்பின்" எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை குறைத்து, நேர்மறையான சிந்தனைகளை உருவாக்குகின்றன.


5. நல்ல தூக்கத்தை கொடுத்தல் 


தூக்கமின்மை இன்று பலரையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. காலை நேர நடைப்பயிற்சி உடலின் உயிரியல் கடிகாரத்தை (Biological Clock) சீராக வைத்திருக்க செய்கிறது.


இதனால் இரவு நேரத்தில் இயற்கையாகவே தூக்கம் வரத் தொடங்கும். ஆழ்ந்த மற்றும் சரியான நேரத்  தூக்கத்தைப் பெற நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாகும்.


6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் 


உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி  வலுப் பெறுகிறது.


தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வோர் சளி, காய்ச்சல் மற்றும் சிறிய தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. இது உடலை இயற்கையாகவே ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


7. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்


நடைப்பயிற்சி உடலின் இன்சுலின் செயல்திறனை மேம்படுத்துவதால்  இரத்தத்தில் இருக்கும்  சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.


காலை நேர நடைப்பயிற்சி நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தையும் குறைக்க பெரிதும்  உதவுகிறது.


8. எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துதல் 


வயது அதிகரிக்கும் போது எலும்புகள் பலவீனமடைவது இயல்பான ஒன்று. ஆனால் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, அவற்றை வலுப்படுத்த செய்யலாம்.


மேலும் மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தி, மூட்டு வலி மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளைத் தடுக்கலாம்.


9. நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்


விடியற்காலையில் காற்று மிகவும் தூய்மையாக இருக்கும். அப்போது நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலுக்கு அதிக அளவு தூய ஆக்சிஜன் கிடைக்கிறது.


இதனால் சுவாசத் திறன் அதிகரித்து, நுரையீரலின் செயல்பாடு மேம்பட்டு  ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


10. நினைவாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்க செய்தல் 


நடைப்பயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதால்  மூளைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகமாக கிடைக்கின்றன.


இதன் விளைவாக நினைவாற்றல், கவனத்திறன் மற்றும் சிந்தனைத் திறன் மேம்பட்டு கல்வியிலும் வாழ்க்கையிலும் சரியாக செயல்பட உதவியாக இருக்கின்றனர்.


11. மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருத்தல்

காலை நேரத்தில் இயற்கை சூழலை ரசித்தபடி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுப்பதால் பறவைகளின் கீச்சொலி, குளிர்ந்த காற்று மற்றும் இயற்கை அழகு மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.


இதனால் நாள் முழுவதும் உற்சாகமாகவும் நேர்மறையான மனநிலையுடனும் செயல்பட முடியும்.


12. நீண்ட ஆயுளுக்கு உதவுதல்

பல ஆய்வுகளின்படி, தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இது பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைத்து, உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது.


நடைப்பயிற்சி ஒரு எளிய பழக்கமாக இருந்தாலும், அதன் தாக்கம் வாழ்க்கை முழுவதும் நன்மைகளை தரக் கூடியதாகும்.


நடைப்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

  1. வசதியான காலணிகளை அணியுங்கள்.
  2. நடைப்பயிற்சிக்கு முன் மற்றும் பின் தண்ணீர் அருந்துங்கள்.
  3. ஆரம்பத்தில் மெதுவாக நடந்து, பின்னர் வேகத்தை அதிகரிக்கவும்.
  4. வெறும் வயிற்றில் அதிக நேரம் நடக்க வேண்டாம்.
  5. உடல்நலப் பிரச்சினைகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
  6. தினமும் ஒரே நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய முயற்சிக்கவும்.


விடியற்காலையில் நடைப்பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த பழக்கமாகும். இது இதய ஆரோக்கியம், உடல் எடை கட்டுப்பாடு, மன அமைதி, நல்ல தூக்கம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீண்ட ஆயுள் போன்ற பல நன்மைகளை வழங்குவதால்  எந்தவித செலவும் இல்லாமல் அனைவராலும் மேற்கொள்ளக்கூடிய இந்த எளிய உடற்பயிற்சியை தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றினால், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.


"தினமும் காலை நடைப்பயிற்சி – வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்!"

Post a Comment

0 Comments

Women

Responsive Advertisement