Solve Eye-Problem:கண்கள் மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு என்பது அனைவர்க்கும் தெரியும். நம் சுற்றுச்சூழலை உணர, பொருட்களை அடையாளம் காண, மனிதர்களுடன் தொடர்பு கொள்ளவும் கண்கள் முக்கியமாக இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில், கண் பார்வை குறைபாடு குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை பெருமளவில் பாதிக்கின்ற பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. அனைவரும் தொலைக்காட்சி, தொலைபேசி, மடிக்கணினி போன்றவைகளில் அதிக நேரம் செலவிடுவதால் அதிக கண்பார்வை குறைபாடு ஏற்படிகிறது. இன்னும் சில பேருக்கு மிதிவண்டி, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மாசுக்கள் மற்றும் பூச்சிகள் கண்கள் மேல் பட்டு கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் குறைபாடை சாதாரணமாக நினைத்தால் சிறிது நாட்களில் அதன் விளைவுகள் மோசமாக மாறிவிடும். முன்பே அறிந்து பாதிப்பை சரி செய்வது நல்லது.
கண்பார்வை குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள்:
கண் பார்வை குறைபாடு ஏற்படும் போது நிறை அறிகுறிகள் உங்களுடைய கண்களில் இருந்து வெளிப்படும்.புத்தக எழுத்துகள் படிக்க முடியாமை செல்லும்,தொடர்ந்து கண்களில் சோர்வு ஏற்படும்,தலைவலி பிரச்சனை வரும்,கண்களில் எரிச்சல் ஏற்படும்,இரவில் பார்வை குறைவு காணப்படும்,கண்களை மடக்கி அல்லது இழுத்துப் பார்ப்பது போல் தோன்றும். இந்த அறிகுறிகள் எல்லாம் முன்பே அறிந்து கண்ணை சரி செய்து விடுங்கள்.
கண்பார்வை குறைபாட்டின் வகைகள்:
கண் பார்வை குறைபாட்டை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அவை,
- நேர் பார்வை குறைபாடு (Myopia)
- தூர பார்வை குறைபாடு (Hyperopia)
- அஸ்டிக்மாடிசம் (Astigmatism)
- வயதுக்கு ஏற்ப வரும் பார்வை குறைபாடு (Presbyopia)
நேர் பார்வை குறைபாடு (Myopia):
நேர் பார்வை குறைபாடு பொதுவாக பலருக்கும் ஏற்படும் குறைபாடாகும் .இது பெரும்பாலும் கண்ணில் இருக்கும் பந்து நீளமாக இருப்பதாலோ அல்லது கார்னியா என்ற பகுதி சற்று வளைந்திருக்கையாலோ ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் இக்குறைபாடு அதிகம் இருக்கிறது. தொடக்க நிலையில் கல்வியில் கவனக்குறைவு, கண் சோர்வு போன்றவை ஏற்படலாம். கண் பரிசோதனையின் மூலம் இந்த நிலையை கண்டறிந்து, குறியீட்டு (minus power) கண்ணாடிகள் அல்லது லென்ஸ்கள் மூலம் சரிசெய்யலாம். சில நேரங்களில் லேசர் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் போன்றவற்றைப் பார்ப்பது, வெளிச்சம் இல்லாத இடத்தில் வாசித்தல் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். சரியான உணவுமுறை மற்றும் கண்களுக்கு ஓய்வளிக்கும் பழக்கங்களை வளர்த்தால், நேர் பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்த முடியும்.
தூர பார்வை குறைபாடு (Hyperopia):
தூர பார்வை குறைபாடு(Hyperopia) கார்னியா மற்றும் லென்ஸ் போதிய வளைவைக் கொண்டிராத காரணத்தால் ஏற்படுகிறது. குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் வயதானவர்களிடம் இது இருக்கிறது. வாசிப்பதில் சிரமம், கண் சோர்வு, தலைவலி மற்றும் அதிக நேரம் அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் போன்றவை அறிகுறிகள். பரிசோதனை மூலமாக கண்டறிந்து, பிளஸ் பவர் கண்ணாடிகள் அல்லது லென்ஸ்கள் மூலம் சரிசெய்யது விடலாம். சில உயர் சிகிச்சை நிலைகளில் லேசர் சிகிச்சை (LASIK) பரிந்துரைக்கப்படுகிறது.
அஸ்டிக்மாடிசம் (Astigmatism):
அஸ்டிக்மாடிசம் பார்வை குறைபாடு கார்னியா அல்லது லென்ஸ் சீரான வளைவு இல்லாமல், ஒவ்வொரு திசையிலும் ஒளியை சிதறச் செய்யும் விதத்தில் இருக்கும்போது ஏற்படுகிறது. அஸ்டிக்மாடிசம் மரபணு வழியாகவும், கண் காயங்கள், கண் அறுவைச் சிகிச்சையின் பின் விளைவாகவும் ஏற்படலாம். இதில் தலைவலி, கண் சோர்வு, இரட்டைப் பார்வை, வாசிக்கும் போது சங்கடம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. கண் பரிசோதனை மூலமாக இதனை கண்டறிந்து, சிலிண்டரிக்கல் பவர் கொண்ட கண்ணாடிகள், கான்டக்ட் லென்ஸ் (contact lenses) அல்லது லேசர் சிகிச்சை (LASIK) மூலம் இதனை சரி செய்துவிடலாம்.
வயதுக்கு ஏற்ப வரும் பார்வை குறைபாடு (Presbyopia):
ப்ரெஸ்பியோபியா பொதுவாக 40 வயதிற்குப் பிறகு உண்டாகிறது. இதன் குறைபாட்டால் எழுத்துக்கள் வாசிப்பதில் அல்லது தொலைபேசியில் செய்திகளை பார்ப்பதியில் போன்ற செயல்களால் கடினமாகும். இதற்கான முக்கிய காரணம் கண்களில் உள்ள லென்ஸின் நெகிழ்வுத்தன்மை குறைவதாலும், கண் தசைகள் பலவீனமடைவதாலும் நடக்கிறது. முதற்கட்டங்களில் கண்கள் சோர்வடைவதும், தலைவலி ஏற்படுவதும் இருக்கும். இந்த நிலையை ரீடிங் கிளாஸஸ்(reading glasses),பைபோஸால்(bifocal),ப்ரோக்ரேசிவ் லென்ஸ் (progressive lens) அல்லது கான்டெக்ட் லென்ஸ்(contact lens)மூலம் சரி செய்துவிடலாம்.
கண்ணை பாதுகாக்க தினமும் இந்த பழக்கத்தை கடைபிடிங்கள்
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்:
தினமும் தண்ணீர் குடிப்பது, கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கும்போது, கண்களில் இயற்கையான ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. தண்ணீர் கண்கள் உலர்வதையும் சோர்வதையும் தடுக்க உதவுகிறது. தினமும் குறைந்தது 8–10 கப் தண்ணீர் குடிப்பதன் மூலம் கண்கள் பளிச்சென்று பொலிவுடன் குளிர்ச்சியுடனும் இருக்கும்.
தூசி, மாசு, பாக்டீரியா போன்றவைகளிலிருந்து தண்ணீர் பாதுகாக்கிறது. கண்களில் எரிச்சல், சிவப்பான தோற்றம், அல்லது உலர்ச்சி இருந்தால், அதிகமாக தண்ணீர் குடிப்பது இயற்கையான தீர்வாக உள்ளது. எனவே, தினசரி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, கண்கள் ஆரோக்கியமாகவும் பொலிவுடன் இருக்கச் செய்வது மிகவும் அவசியம்.
கண் பராமரிப்பிற்கு தூக்கம் அவசியம்:
தூக்கத்தின் போது கண்களின் நரம்புகள் ஓய்வெடுக்கும், அழுத்தம் குறையும், மற்றும் இயற்கையான ஈரப்பதம் கிடைக்கும். தொடர்ந்து தூக்கமின்மை ஏற்பட்டால் கண்களில் கருப்பு வளையங்கள், வீக்கம், சோர்வு, மற்றும் உலர்ச்சி ஏற்படும். இது பார்வைத்திறனையும் கண்களின் பொலிவையும் பாதிக்கலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் உறங்குவது கண்கள் மட்டும் அல்ல, முழு உடலுக்கும் மிகுந்த நன்மை தருகிறது.
கண்ணை பாதுகாக்கும் சிறந்த காய்:
வெள்ளரிக்காய், கண்களுக்கு சிறந்தகாய்கறியாகும். இதில் 95% நீர் இருப்பதால் கண்களுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. கண்களில் சோர்வு மற்றும் வீக்கம் இருந்தால், வெள்ளரிக்காயின் குளிர்ந்த துண்டுகளை நேரடியாக கண்களுக்கு வைப்பது நிம்மதியையும், குளிர்ச்சியையும் தரும். வெள்ளரிக்காயில் உள்ள அன்டிஆக்சிடன்டுகள் கண்களை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது.
இதனால் கண்கள் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். நாள்தோறும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதும், அதன் குளிர்ந்த துண்டுகளை கண்களில் 10–15 நிமிடங்கள் வைப்பதும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதுபோன்ற இயற்கை வழிமுறைகள் கண்களை ரசாயன மருந்துகளுக்கு மாற்றாக பாதுகாக்கும் சிறப்பு வாய்ந்த குறிப்பாக இருக்கும்.
பாலின் மூலம் கண் பராமரிப்பு:
குளிர்ந்த பால், கண்களுக்கு இயற்கையான பராமரிப்பு. பாலை குளிர்ந்த நிலையில் பயன்படுத்தி, ஒரு தூய்மையான துணியை அதில் நன்கு நனைத்துக்கொண்டு கண்களுக்கு மேலே வைக்கலாம். இது கண்களில் உள்ள சோர்வு, எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
பாலில் உள்ள புரதங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் கண்களின் சுற்றுப்பகுதியில் ஈரப்பதத்தை அளித்து, கண்களை மென்மையாக்கி பொலிவுடனும், சுறுசுறுப்புடனும் வைக்கிறது. குறிப்பாக அதிக நேரம் கணினி, மொபைல் பார்க்கும் போது கண்களில் ஏற்படும் பிரச்சனையை குறைக்க குளிர்ந்த பால் பயன்படும். தினமும் 10-15 நிமிடங்கள் குளிர்ந்த பாலை பயன்படுத்துவது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
யோகா மூலம் கண் பராமரிப்பு:
யோகா பயிற்சியின் போது கண்கள் ஆரோக்கியமாக இருக்க மற்றும் கண் பாதிப்புகளை தவிர்க்க சில பராமரிப்புகளை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகுகிறது. முதலில், பயிற்சி செய்யும் போது கண்களை நீடித்த நேரம் மூடி, ஆழ்ந்த மூச்சு கொண்டு கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். கண்களுக்கு நேர்மறையான வெளிச்சம் மற்றும் சுத்தமான சூழல் வழங்க வேண்டும். கண்களின் அழுத்தம் குறைக்க பனிக்கட்டி அல்லது குளிர்ந்த தண்ணியால் கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படுத்துதல், பார்வை பயிற்சிகள் மற்றும் சிறிய கண் வளைவு அசைவுகளைச் செய்ய வேண்டும். இதனால் கண்கள் நன்கு ஓய்வெடுத்து, யோகா பயிற்சியின் முழு பலனும் பெற முடியும். கண்களில் ஏதேனும் வலி, சிவப்பு அல்லது பார்வை குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Social Plugin