துரித உணவுகளை தவிர்த்துவிட்டு இயற்கை உணவுகளை சாப்பிட்டு பார்க்கலாமே!...அழகும், ஆரோக்கியமும் கைக்கெட்டி நிற்கும்...
Natural care :சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதன், காரம், புளி. உப்பு போன்ற ருசியுள்ள உணவுகளை அதிகம் ருசிப்பதனால், அவனுடைய தனிமனித நடத்தையில் கோபம், அகங்காரம், பொறாமை போன்ற குணாதிசயங்களுடன் வாழ முற்படுகிறான் இதனால் நாட்டில் குற்றங்கள், வன்முறை, கொலை, களவு போன்றவை பெருகிச் சமூகச் சீரழிவும் ஏற்படுகிறது. ஆனால், இயற்கை உணவுகளை உட்கொள்ளும் மனிதன் இயல்பாக - இயற்கையாகச் சிந்திக்கிறான். காரம், புளி, உப்பு இல்லாத இயற்கை உணவுகள் ஒருவனுக்குத் தீர்க்கமான சிந்தனையைத் தருவதால், அவனுடைய செயல்பாடுகளில் ஒரு தெளிவு, அமைதியான வாழ்வியல் முறை இவை அனைத்தும் ஏற்பட்டு விடுகிறது.இதனால் சமூக அமைப்பில் குற்றங்கள், வன்முறை குறைந்து, நல்லதொரு சமூக அமைப்பு ஏற்படுகிறது. அது சரி!...இயற்கை உணவுக்கு மாறுவது எப்படி...? முதலில் இந்த சித்தர் பாடலைக் கவனியுங்கள். 'காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலையூன்றிய கிழவனும் காலால் குலுக்கி நடப்பானே!' -இது சித்தர் பாடல் 48 ரூபாயில் உன்னத அழகு பெரும் ரகசியம் இந்தப் பாடலில் தான் இருக்கிறது. ஒரு நாள் செலவு ரூபாய் ஒன்று மட்டும...