Ad Code

Free & Affordable Price Canva Editable Template

Recent Posts

Responsive Advertisement

Ice Cube:ஐஸ் கட்டியை இப்படியும் பயன்படுத்திப்பாருங்க...முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனையும் சரியாகிவிடும்!...

 

View This Image





Ice Cube Benefits for Face: ஐஸ்கட்டிதண்ணீரை உறைய வைத்து உருவாக்கப்படும்  குளிர்ந்த பனிக்கட்டியாகும்.இவை பானங்களை குளிர்விக்க, வெப்பத்தை தணிக்க மிகவும் உதவியாக இருக்கின்றனர். குறிப்பாக, அழகு பராமரிப்பிலும் ஐஸ்கட்டி முக்கிய பங்கு வகிக்கிறது.அதாவது, தண்ணீரை உறைய வைத்து முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் தோலுக்கு பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றனர். 


சில சமயங்களில், பழச்சாறு, ஆலிவேரா ஜெல் போன்ற இயற்கை பொருட்களையும் தண்ணீருடன் கலந்து ஐஸ்கட்டியாக உறைய வைத்து, அதனை முகத்தில் பயன்படுத்துகிறார்கள். இது தோலை இயற்கையாக அழகை அள்ளிக்கொடுக்கின்றனர். மேலும், உடலில் அதிக வெப்பம் ஏற்படும் போது  அதை தணிக்கவும், தலைவலி குறைக்கவும் ஐஸ்கட்டிகள் உதவியாக இருக்கின்றனர். 

ஐஸ்கட்டியின் பயன்களை பற்றி  கீழே விரிவாகப் பார்க்கலாம்.


இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்:

முகத்தில் ஐஸ்கட்டியை மெதுவாக தேய்ப்பது, தோலில் உள்ள ரத்தக் குழாய்களை இறுக்குவதன் மூலம் தற்காலிகமாக தோலை சுருங்க வைக்கிறது. இதன் பிறகு, தேய்ப்பதை நிறுத்தும் போது, அந்த பகுதியில் அதிக ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இது நரம்புகளின் உந்துதலை தூண்டி, சோர்வான செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. மேலும், தைராய்டு மற்றும் சுரப்பி செயல்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கிறது. அதிக ரத்த ஓட்டம் சருமத்தின் ஜொலிப்பையும், புத்துணர்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது

 

வெப்பத்தை தணிக்கும்:

முகத்தில் அதிக வெப்பம் ஏற்படுவதால் தோல் இருண்டு சோர்வாக காணப்படும், பிம்பிள்கள் உருவாகும், எண்ணெய் சுரக்கை அதிகரிக்கும் போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன. இவற்றை தீர்க்கும் ஒரு எளிமையான வழி முகத்தில் ஐஸ்கட்டி பயன்படுத்துவதுதான். ஐஸ்கட்டி தோலின் வெப்பத்தைக் குறைத்து, எரிச்சலை தணிக்கிறது. இதனை தினமும் காலை அல்லது மாலையில் முகத்தில் மெதுவாக உரைத்தால், வெப்பம் காரணமாக ஏற்படும் தோல் பிரச்சனைகள் குறையும்



குறிப்பாக, வெயிலில் இருந்து வந்தவுடன் முகத்தில் ஐஸ்கட்டி பயன்படுத்துவது, உடனடி குளிர்ச்சியை வழங்கி, மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தும். இது முகத்தின் நிறத்தை சீராக்க உதவுகின்றது. மேலும், தோலின் அழற்சிகளை குறைத்து, பளிச்சிடும் தோலை உருவாக்குகிறது.குறைந்த செலவில், வெப்பத்தை குறைக்கும் சிறந்த வழியாக ஐஸ்கட்டி பயன்படுகிறது.

 

எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்:

எண்ணெய் தோலுள்ளவருக்கு முகத்தில் அதிகமான எண்ணெய் சுரப்பதால், பிம்பிள்கள், முகப் புண்கள் மற்றும் ஒளிரும் தோல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தச் சுரப்பை சமன்செய்ய குளிர்ச்சியான ஐஸ்கட்டியை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது

ஐஸ்கட்டியை தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் முகத்தில் மெதுவாக உரைத்தால், தோல் துவாரங்கள் சுருங்கும். இதனால் எண்ணெய் சுரப்பு இயற்கையாக குறையும். குளிர்ச்சியான உணர்வு தோலை புத்துணர்வாக மாற்றி, சருமத்தை பொலிவாக்கும்.

 

சிவப்பு தோல்(Redness) பிரச்சனையை குறைக்கும்:

சிலருக்கு தோலில் ஏற்படும் சிவப்பு (Redness) எண்ணெய் சுரப்பு, அழற்சி அல்லது தோல் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. இந்நிலையில், ஐஸ்கட்டி பயன்படுத்துவது  எளிய மற்றும் பயனுள்ள இயற்கை தீர்வாக விளங்குகிறது.

 

ஐஸ்கட்டியின் குளிர்ச்சி, தோலில் உள்ள இரத்தக்குழாய்களை சுருக்கி, சிவப்பையும் வீக்கத்தையும் குறைக்கும். தினசரி 2–3 நிமிடங்கள் பயன்படுத்தினால், தொடர்ச்சியான சிவப்பு தோல் பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்

 

முகத்துவாரங்களை (pores) சுருக்கும்:

முகத்தில் உள்ள துவாரங்கள் (pores) பெரிதாகத் தெரிந்தால், தோல் பராமரிப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். இதை குறைக்கும் எளிய மற்றும் இயற்கையான வழிகளில் ஒன்று ஐஸ்கட்டி பயன்படுத்துவதாகும். ஐஸ்கட்டி முகத்தில் பயன்படுத்தும்போது, அது தோலை குளிர்ச்சியாக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.இதனால் தோல் இறுக்கமாகி, துவாரங்கள் சுருங்கும். தினமும்  1–2 நிமிடங்கள் ஐஸ்கட்டி தடவுவதால், துவாரங்களை குறைத்து, தோலின் மென்மை மற்றும் இயற்கையான அழகு மேம்படும்.

 

கண் வீக்கம் மற்றும் கருப்பு வளையங்கள் (dark circles):

கண் வீக்கம் மற்றும் கருப்பு வளையங்கள் பலருக்கும் பிரதான பிரச்சனையாக இருந்து வருகிறது. தூக்க மின்மை, மன அழுத்தம்தொலைக்காட்சி, மடிக்கணினி, தொலைப்பேசி போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பது   போன்ற காரணங்களால் இப்பிரச்சனை  ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளை இயற்கையாக எளிதாக போக்குவதற்கான சிறந்த வழி ஐஸ்கட்டி பயன்படுத்துவதாகும். குளிர்ந்த ஐஸ்கட்டியை ஒரு மென்மையான துணியில் சுற்றி, கண் சுற்று பகுதியில் மெதுவாக உரைத்தால் வீக்கம் குறையும். கருவாலயங்களும் மறைந்து போகும்.




குளிர்ச்சியான ஐஸ் கட்டி இரத்தக்குழாய்களின் சுருக்கத்தை ஏற்படுத்தி, வீக்கம் மற்றும் கருப்புத் தன்மையை குறைக்கும். தினமும் காலை நேரத்தில் 2–3 நிமிடங்கள் இவ்வாறு பயன்படுத்தினால், கண் சுற்றிய பப்பைகள் மங்கிவிடும். மேலும், இது கண் பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தூக்கக் குறைபாட்டால் வந்திருந்த நிறமாற்றத்தை சரிசெய்ய உதவுகிறது. காஃபி தண்ணீர், கம்பை தீட்டு நீர், பசுமை தேயிலை போன்றவைகளை உறைய வைத்து ஐஸ்கட்டியாக செய்து பயன்படுத்தினாலும் அதிக  பலன் கிடைக்கும்.

 


ஐஸ்கட்டி வெறும் குளிர்ந்த தண்ணீராக இருந்தாலும், அதன் பயன்பாடு அழகு பராமரிப்பு மற்றும் உடல் நலத்தில் மிக முக்கியமானதொரு இடத்தை பெறுகிறது. தினசரி ஐஸ்கட்டி  சிறிது நேரம் பயன்படுத்துவதன் மூலம் தோல் சீராகி, பளிச்சிடும் தோற்றம் பெற முடிகிறது. செலவில்லாத இந்த பராமரிப்பு முறையை யாரு வேண்டும் என்றாலும்  நம்பிக்கையுடன் வீட்டிலேயே முயற்சிக்கலாம். அழகும், ஆரோக்கியமும் விரும்பும் அனைவருக்கும் ஐஸ்கட்டி  விலைமதிக்க முடியாத சிறந்த பரிசாகும்.

 


Post a Comment

0 Comments

Responsive Ad

Free & Affordable Price Canva Editable Template

Ad Code