மருத்துவம் சார்ந்தும் உடல் நலம் சார்ந்தும் தெரிந்துக்கொள்ளக் வேண்டியவை!...

View This Image




Medical and health-related things to know:தினையில் உடலுக்குத் தேவையான புரதம் அதிகம் உள்ளது. இது நம் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கும் செல்லைப் புதுப்பிக்கவும் உதவுகிறது. அதனால் தினை மாவு என்பது மிக உயரிய சத்துமாவு. இதில் பலவகையான உணவுப் பொருள்கள் செய்து உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. 

ஜலதோஷம் காய்ச்சலுக்குச் சமையல் அறையிலுள்ள சுக்கு, மிளகுடன் துளசியைச் சேர்த்து கசாயம் வைத்துக் குடித்தால் தலைவலிக் காய்ச்சல் நீங்கி விடும்.

கொள்ளு கொழுப்பைக் குறைத்து ஒபிசிட்டியை விரட்டும். ஜீரணத்தைச் சீர்படுத்தும். நார்ச் சத்து சர்க்கரைக் கட்டுப் பாட்டில் வைக்க உதவும். கொள்ளு வறுத்து இடித்து மாவாக்கி வெல்லம் சேர்த்து உருண்டையாக்கி உண்டால் பருத்த உடல் இளைத்த உடலாக மாறிவிடும்.

நம் உடலிலுள்ள உணவு செரிக்கக் குறைந்தது  நான்கு மணி நேரம் ஆகும். வயதானவர்கள் இரவு 7 மணிக்குள் உணவு சாப்பிட்டால் தான் 10 மணிக்குச் சீரணமாகி நல்ல உறக்கம் வரும்.

சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. செரிமானத்திற்கு உரிய நேரம் தர வேண்டும். உடனே தூங்கினால் மலச்சிக்கல் உருவாகும். உடல் பருமன், சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உணவு உண்ன, ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த உணவைப் பொறுமையாக வேறு சிந்தனைகள் இல்லாமல் நன்றாக மென்று கூழாக்கி உண்ண வேண்டும். அவசர அவசரமாக உண்பது, சரியாக மென்று தின்னாமல் உண்பது, சரியாக மென்று தின்னாமல் உண்பது, இடையிடையே  தண்ணீர் குடிப்பது போன்றவை உணவு உண்ணும் நல்ல முறைகள் ஆகாது. 

குழந்தைகளுக்குப் பாக்கெட் உணவு கொடுத்து, பழக்கப்படுத்தாதீர்கள். தாய்மார்களின் சோம்பல்தனம் குழந்தையின் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். 

அதிக நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தும் பழைய குழம்பு, இட்லி மாவு, கீரை, காய்கறிகள் அனைத்திலும் உரிய சத்துகள் நமக்குக் கிடைக்காது. அவ்வப்போதுப் பயன்படுத்துதலே சாலச் சிறந்தது.

இஞ்சி, சுக்கு, சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின்(Curcumin)எனும் உடலுக்கும் வயிற்றுக்கும் நன்மை செய்யக் கூடிய வேதிப் பொருட்கள்  உள்ளன. 

அத்திப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, கே அதிக அளவில் உள்ளது. ஆப்பிளைவிட, நாட்டு அத்திப் பழத்தில் கூடுதல் சத்துக்கள் உள்ளன. தோல் நோய், சர்க்கரை நோய், இரத்த சோகை நீங்கி உடல் எடையைக் கூட்டும். 

வேப்பம் வித்து, கஸ்தூரி மஞ்சள், நெல்லிக்காய் வற்றல், மிளகு, கடுக்காய்த் தோடு இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி, பொடியாக்கிக் குளிக்கும் போது இளம் சூடான பாலில் இப்பொடியைக் கலக்கித் தலையில் தேய்த்துக் குளிக்கவும். சளி, இருமல், அடுக்குத் தும்மல் போன்ற 'சைனஸ்சிடிஸ்' சிக்கல்களுக்கு அற்புதமான மருந்து. மேலே கூறப்பட்டுள்ள மருந்துகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் காப்பு மருந்தாய் உள்ளது. 

250 மில்லி அளவு மாதுளைச் சாறை தினம் அருந்தும். புரோஸ்டேட் கோளப் புற்று நோயாளிகளுக்கு (இது ஆண்களை மட்டுமே தாக்கும் புற்றுநோய்) அதன் நோயின் கடுமையை, நோய் பரவுதலைக் குறைக்கும் தன்மையுடையது என்று தற்போதைய ஆய்வு ஒன்று கூறுகிறது. 

வைட்டமின் பி  6 (ஃபோலிக் அமிலம்) வைட்டமின் பி12, வைட்டமின் சி  (அஸ்கார்பிக் அமிலம்) என்ற இந்த மூன்று உயிர்ச் சத்துக்களும் அளவாக இருந்தால் மட்டுமே இரத்தத்தில் இரும்புச் சத்து சீராக இருக்கும். பி 6 - கீரை, பீன்ஸ், எள், ஃப்லேக்ஸ் விதை, பூசணி விதை, சிறுதானியங்கள், நிலக்கடலை, பாதாம் பருப்பு போன்றவற்றில் கிடைக்கிறது. பி - 12 தாவரங்களில் இல்லை. வைட்டமின் சி நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு இவைகளில் அதிகமான அளவு உள்ளது. புற்றுநோயைத் தடுக்க இந்த மூன்று வைட்டமின் சத்துகள் பேருதவி புரிகின்றன.

பனங் கருப்பட்டியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் எனும் கனிமங்களையும் சேர்த்துத் தருவதால், உடலை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. பனங் கருப்பட்டி குறிப்பாக, Natural Killer Cells பணி மற்றும் IL-2 உருவாக்கம் இரண்டுமே புற்றைத் தடுக்க மிக முக்கியமானவை. லோ கிளைசிமிக் உணவுகள், கருப்பை மற்றும் மார்பகப் புற்றின் வருகையைக் குறைக்கும் என்கிறார்கள். நல்ல பனை வெல்லம் மட்டுமே நோய்களைத் தீர்க்கும். கலப்படக் கருப்பட்டி பயனற்றது.

பாலிஷ் செய்து பட்டை தீட்டிய வெள்ளை அரிசிதான் மிக அதிகமான கிளைசிமிக் லோடு இண்டெக்சும் கொண்டது  என்று ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. பிரவுன் அரிசி எனும் உமி நீக்கப்படாத அரிசி மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. வெள்ளை அரிசியின் கிளைசிமிக் லோடு அளவு. பிரவுன் அரிசியின் கிளைசிமிக் லோடு கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க சிறுதானியமான 'க்யுனோவா' பிரவுன் அரிசியை விட மூன்று புள்ளிகள் குறைவாக உள்ளது. உலக மருத்துவ ஆய்வுகள் சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன என்று இன்று நிரூபித்து வருகின்றன. 

மேலும் சில குறிப்புகள்:

ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் முருங்கை, பேரிச்சை ஆகியவற்றை அடிக்கடி உணவில் மருந்தாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம் உணவுக்குப் பின் சாப்பிடலாம். மலைப் பழம், ரஸ்தாளி, பூவன் ஆகிய மூன்றும் சத்து வகையில் முதல், இரண்டு, மூன்று என வகைப் பிரிக்கலாம். 

வெண்டைக்காயை - 'பச்சையம்' மாறாமல் பசுமையாய் வறுத்து சமைத்து உண்ணலாம். 'வதக்கல்' என்ற பெயரில் 'கருக்கிட' வேண்டாம்.

ஊறவைத்த பருப்புகளை (பச்சை பட்டாணி. முழு பயிர் போன்ற தானியங்களை) முளைக்கட்டி உண்ணும்போது அனைத்து தாது சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கிறது. கொண்டக்கடலை - சுண்டல் மாலை நேரத்திற்கு ஏற்றது. 

காய்ந்த சிறு மற்றும் கொட்டை திராச்சைகளில் இரும்புச் சத்து பொதிந்துள்ளது. மென்று அவ்வப்போது சாப்பிட நன்று. 

பப்பாளியில் நன்மை தரும் நார்ச்சத்து உள்ளது. வாரம் ஒரு முறையாவது பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும்.

மாம்பழம், பலாப்பழம் போன்ற அந்தந்த சீசன்களில் கிடைப்பவற்றை அளவுடன் உடல் நலத்திற்கேற்ப உண்பது நன்மை.

திரிபலா சூரணம் என்பது நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்றும் ஒன்று சேர்த்துச் செய்வது, இதை உண்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். உடலிலுள்ள சக்தியைச்  சீரமைக்கும். உடலை வலுப்படுத்தும். 

சோற்றுக் கற்றாழை (Aloe - vera - Botanical Name) உடலிலுள்ள வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சி தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாகும். மகா அலெக்சாண்டரின் படை போரில் தோற்று சோர்வுற்ற நேரத்தில் ஒரு சித்தர் வழி சொன்னார். அதன் பிறகு சோற்றுக் கற்றாழையின் மகத்துவத்தை அறிந்து, அச்செடி அதிகமுள்ள தீவிற்குச் சென்று ஒரு மாதம் தங்கி, சோற்றுக் கற்றாழையை உண்டு, சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி பெற்று அடுத்த நாட்டைக் கைப்பற்றினர். என்பது வரலாறு.

வெந்தயம்: நன்மை செய்யும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. காலையில் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் உருவாக்கும்.

சீரகம்: உடலை சீராக்க உதவுகிறது. கேரளாவில் 'சீரக வெள்ளம்'(சீரகத் தண்ணீர்) மக்கள் அன்றாடம் வாங்கிப் பருகுகின்றனர். சீரகத்தில் எண்ணெய்ச் சத்துக்களும், நோயை குணப்படுத்தும் மூலப் பொருட்களும் அதிக அளவில் உள்ளனர்.

தேங்காய் - இளநீர் - உடல் வெப்பத்தைத் தணிப்பது, தேங்காய்ப் பால் அப்பம் நல்லது. தேங்காய்ப் பாலில் உடலுக்கு வேண்டிய சக்திகள் தேவையான அளவு உள்ளன. கரையும் நார்ச்சத்தும் இதன்வழி கிடைக்கின்றனது.

சாம்பார் வெங்காயம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் நன்மைகளை அள்ளித் தரும்.

செங்குருத்திக்காய் (பீட்ரூட்): உடலுக்கு வேண்டிய இனிப்புச் சர்க்கரை, நைட்ரஜன் மோனோசைடு ஆகியவற்றை உண்டாக்கி, உடலிலுள்ள செல்கள் ஒன்றுக்கொன்று ஒழுங்காகக்ச் செயல்படச் செய்து உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பீட்ரூட் தருகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் துவர்ப்பு உணவு வகைகள், கசப்பு உணவு வகைகளை நாள்தோறும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தி, நெல்லி, மாவடு, கோவைக்காய், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
கோடைகாலத்தில் தேனில் ஊறவைத்த ரோஜா குல்கந்து சாப்பிட வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.

கொள் - எள் - இரண்டுமே ஒவ்வொரு வகையில் உடலுக்கு நன்மையைத் தரும். கொழுப்பைக் குறைக்கும். உடலை வலுவுள்ளதாக மாற்றும். உடலை சமப்படுத்தும்.
வாழைப்பூ, தண்டு போன்றவற்றில் கரையும் நார்சத்து உள்ளது. வயிற்றுக்கு நல்லது.
ஜவ்வரிசி : மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் இப்பொருளில் சத்துக்கள் அதிகம். விரத நாட்களில் ஜவ்வரிசி பாயசம் வைத்து சாப்பிடுகின்றனர். குடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

மஞ்சள் குடல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும். மிளகு பற்றி முன்பே விளக்கினோம். 

ரோஜா, செம்பருத்தி, ஆவாரம்பூ, வேப்பம்பூ போன்றவையும் இயற்கை உணவுகள் தான். ரோஜாவைச் சமைக்காமல் அப்படியே அதன் இதழ்களைச் சாப்பிடும்போது உடல் புத்துணர்ச்சிபெறுகிறது. ரத்தம் விருத்தியாகிறது. செம்பருத்திப்பூ தலைமுடியை உறுதியாக்குகிறது. ஆவாரம்பூ தோல் வியாதிகளைத் தடுக்கிறது. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வேப்பம்பூ செரிமானத்தை அதிகப்படுத்தி நச்சுத் தன்மையை நீக்கி பித்தத்தைக் குறைக்கிறது. உகாதியில் தமிழ்ப் புத்தாண்டில் மாங்காய் பச்சடியில் 'வேப்பம்பூ ' சேர்ப்பதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். 'வேப்பம் பூ' ரசம் உடலுக்கு மிக மிக நல்லது.




Post a Comment

0 Comments

Women

Responsive Advertisement