Guidelines for weight loss: உடல் பருமன் குறைய உணவுகளை கட்டுப்படுத்தி பாருங்களேன்!...உடல் பருமன் தானாக குறையும்!...
உடல் எடையை குறைக்க எளிய டிப்ஸ் Weight-loss : உடல் எடையை குறைப்பது ஒரு பயணம் போன்றது. ஒரே இரவில் நடக்கும் மாயாஜாலம் அல்ல. நீங்கள் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றாவிட்டால் எந்த காலத்திலும் உடல் எடையை குறைக்க முடியாது. தினமும் நீங்கள் சரியான உணவுகளை சரியான முறையில் உட்கொண்டாலே போதும். உடல் எடை நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு சர்ரென்று கரைந்து விடும். இந்த செயல்முறைக்கு உறுதுணையாக இருக்கும் சில எளிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தான் "உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம்". நாம் தினம் தோறும் சாப்பிடும் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லாமல் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: கடலை எண்ணெய்,கடலைப்பருப்பு,வடை, போண்டா,பஜ்ஜி, சிப்ஸ் மற்றும் எண்ணெயில் வறுத்தெடுத்த பதார்த்தங்கள். இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கோழி,மட்டன், மாட்டுக் கறி மற்றும் இறால் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது. உருளைக்கிழ...