Mathavidai Solution:பெண்களை துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகளை அடித்து விரட்டுங்கள்!...
Menstrual Disorders : இன்றைய வாழ்வியல் சூழலில் நோயில்லா மனிதரே இல்லை எனலாம். நாளொரு பொழுதும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடாக, நோய்களும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திட்டமிடாத உணவு முறைகள், நாவின் ருசிக்கு அடிமையாகிவிடுதல், முறையற்ற பழக்க-வழக்கங்கள், நெருக்கடியான வாழ்க்கைப் பாங்கு இவையே நோய்களுக்குக் காரணமாகுகிறது. பெண்களின் பூப்பெய்தும் தன்மையைக் கொண்டாடி மகிழும் பண்பாடு, இந்தியர் அனைவர்க்கும் உள்ள தனிச்சிறப்பாகும்.தன் மகள், 'பூப்பெய்தவில்லையே ' என ஏங்கும் பெற்றோர் மனநிலை மிகவும் ஏக்கத்துக்கு உரியது. பூப்பெய்தும் பெண்களுக்குத் தனியாக உணவுகளைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு ஊட்டமான உணவுகளைக் கொடுத்து நல் ஆரோக்கியத்திற்கு வித்திட்டு, மாதாந்திர சுழற்சிப் படி, மாதவிடாய்த் தொடர்ந்து ஏற்பட, வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பெற்றோர்கள் போற்றலுக்குரியவர்களே!... குமரிப் பருவமுற்ற மங்கையருக்கு மாதவிடையானது 28 நாட்களுக்கு ஒரு முறை வெளிவந்து, தொடர்ந்து சுழற்சி கொண்டிருக்கும். மாதாந்திரச் சுழற்சி திடீரென நின்று விடுவதையே, மாதவிலக்கற்ற நிலை( Secondary menorrhoea )என்கிறோம். பெண்கள் க...