Sweet Potato: ஒரு சிறு கிழங்கில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
சக்கரைவள்ளிக்கிழங்கு(Sweet Potato) Sweet Potato Benefits in Tamil : உலகம் முழுவதும் முக்கியமாக பயிரிடப்படும் கிழங்கு வகைகளில் சக்கரைவள்ளிக்கிழங்கும்(Sweet Potato) ஒன்றாகும்.இக்கிழங்கு எளிதில் வளரக்கூடியது. அதுவும் இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகின்றனர். குறைந்த விலையில் அதிக சத்துக்களை சர்க்கரைவள்ளிக்கிழங்கு தருவதால் மக்கள் அதிகமாக வாங்கியும் சாப்பிடுகின்றனர். இக்கிழங்கு அதிகப்பற்றமாக வறட்சி மற்றும் வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு வளரும் திறன் கொண்டதால், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக மகசூல் தரக்கூடியதாக சக்கரைவள்ளிக்கிழங்கு (Sweet Potato) அமைந்திருக்கிறது.இக்கிழங்கு மத்திய மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. சக்கரைவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவாக மட்டுமில்லாமல், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவற்றில் சிறந்தாக இருக்கிறது. இக்கிழங்கு எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டதால், அனைவர்க்கும் ஏற்ற உணவாகவும் காணப்படுகிறது.சக்கரைவள்ளிக்கிழங்கை சுட்டு, வேக வைத்து, இனிப்புகள், சிப்...