Face Care Tips in Tamil:முகம் பொலிவுடனும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அதற்க்கு காரணம் என்னவென்றால் கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது நமக்குள் ஒருவித சந்தோஷம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும் ஏற்படும்.அதனால் அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை வெள்ளையாக்குவார்கள். முதல் சிகிச்சையிலே முகம் வெள்ளையாகிவிடும் என்பதெல்லாம் கிடையாது. தொடர்ந்து அழகு நிலையத்திற்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். சிகிச்சையின் முடிவில் முகம் வெள்ளையானாலும் அது இறுதிவரைக்கும் இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், முகம் மற்றும் உடலை வெள்ளையாக்கும் செயற்கை முறை முதலில் நல்ல பலன் கொடுத்தாலும் இறுதியில் பக்க விளைவை ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இயற்கை சிகிச்சை முறை அப்படி அல்ல. என்றுமே அழகை அள்ளிக்கொடுப்பதிலும் நீடித்து நிலைக்க செய்வதில் சிறந்தது*இயற்கை குறிப்பு முறைகள் தான்*.
முதலில்,முகத்தை அழகுபடுத்த பயன்படுத்தும் பொருட்களின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
கேரட்:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட்டை சாப்பிட்டால் சரும பிரச்சனைகள், முதுமை தோற்றம் ஆகிய பிரச்சனைகள் தீர்வதோடு மட்டும் இல்லாமல் உடலின் ஆரோக்யத்திற்கும் என்னிலடங்கா பயன்களை கேரட் அள்ளித் தருகிறது. கேரட்டில் கரோட்டினாய்டுகள் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்டாக மாறி உடல் முழுவதும் சுத்தம் செய்யஉதவுகிறது. கேரட்டில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் ஜூஸ் ஆக பருகும் போது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கின்றன.மேலும் கேரட்டை சருமத்தின் வெளித்தோற்றத்தின் அழகு மேம்பாட்டிற்கும் சிறந்தது. கேரட்டை பேஸ்பேக்கு பயன்படுத்தினால் முகம் பளபளப்பாகவும் சாப்ட் ஆகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.
பீட்ருட்:
முகம் மற்றும் உடலின் உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்கும் பீட்ருட் சிறந்ததாக இருக்கிறது. வறட்சியான சருமம்,கரும்புள்ளி,கருவளையம், சரும சுருக்கம், முகப்பரு போன்ற பல சரும பிரச்சனைகளை பீட்ருட்டை பயன்படுத்தி தீர்வு காணலாம். மேலும் பீட்ருட் ஜூஸை குடித்தால் ரத்தத்தின் அளவை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் இளமை தோற்றத்திற்கும், முக பொலிவுக்கும் நல்ல பானமாக இருக்கிறது. பீட்ரூட்டை பச்சையாகவும் சாப்பிடலாம்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், மென்மையாக்குவதற்கும் சிறந்தவையாக இருக்கிறது. முகம் வறண்டு இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்தால் முகம் வறட்சி நீங்கி முகம் மென்மையாக காணப்படும். தோல் பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேங்காய் எண்ணெய் உதவியாக உள்ளது. பேஸ்பேக்கிற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
ஆலிவேரா ஜெல்:
ஆலிவேரா ஜெல்லை முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள், பருக்கள், முக சுருக்கம், வயதான தோற்றம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்க சிறந்ததாகும். ஆலிவேரா ஜெல்லை சாப்பிடுவதால் சருமம் மற்றும் உடலின் உட்புறத்தியில் நீர் சத்துக்களை தக்க வைக்கவும், சருமத்தை வெயிலில் இருந்து காக்கவும் உதவியாக இருக்கிறது.
விட்டமின் இ (Vitamin E) கேப்சுல்:
விட்டமின் இ (Vitamin E) கேப்சுலை முகத்திற்கு பயன்படுத்துவது தோலுக்குத் பல நன்மைகளைத் தருகிறது. இது விட்டமின் இ கேப்சுலை முகத்திற்கு பயன்படுத்தும் போது தோலை சுத்தமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. சூரியனில் இருந்து வரும் ஒளிக் கதிர்கள், மாசு போன்றவற்றால் ஏற்படும் தோல் சேதங்களை தடுக்கிறது. முகத்திற்கு பயன்படுத்தும் பேஸ்பேக்கிற்கு இந்த கேப்சுலை பயன்படுத்தும் போது முகம் பொலிவோடும் மற்றும் பல நன்மைகளையும் கொடுக்கும்.
முகம் தங்கம் போல் ஜோலி ஜோலிக்க இயற்கையான வீட்டில் இருந்தே தயாரிக்க கூடிய பேஸ் க்ளோ(Face Glow) & பேஸ் மசாஜ்(Face Massage Oil) ஆயில் தயாரிக்கும் குறிப்பு முறைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம்.
Face Massage Oil
தேவையான பொருட்கள்:
- கேரட் -2
- பீட்ருட் -1(சிறியது)
- சுத்தமான தேங்காய் எண்ணெய் ((உங்கள் விருப்பம்)எந்த எண்ணெய் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்)- தேவையான அளவு
- ஆலிவேரா ஜெல் - 1 Tsp
- விட்டமின் இ கேப்சுயுல் -2
கேரட் மற்றும் பீட்ரூட்டை சிறிது சிறிதாக சீவி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வெட்டிவைத்த கேரட் மற்றும் பீட்ரூட்டை நன்கு கிளறி விடவும்.பின், அதனுடன் சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவையான அளவு விட்டு மிதமான சூட்டில் அனைத்தையும் கிளறி விடவும். அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் காற்று புகாத பாத்திரத்தில் ஒரு துணியை எடுத்து பாத்திரத்தில் இருப்பதை துணியில் போட்டு சாறை மட்டும் தனியாக எடுக்கவும். பின் ஆலிவேரா ஜெல் மற்றும் விட்டமின் இ கேப்சுல் சேர்க்கவும். அவ்வளவுதான் பேஸ் மசாஜ் ஆயில் ரெடி. இந்த மசாஜ் ஆயிலை காற்று புகாத பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என்று இரு முறை பயன்படுத்துங்கள். முகம் க்ளோவ்வாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Social Plugin