Posts

Showing posts with the label health care tips

விரதம்:பட்டினி மருத்துவம்

Image
  Health Care: அதிகாலையில் எழும் நல்ல பழக்கத்தைப் போலவே, மூன்று வேளை உண்பதைத் தவிர்ப்பது என்ற பட்டினி மருத்துவம் மூலம் மனித உடலில் கழிவு அகற்றும் வேலை இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டே உள்ளது. நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் இருந்து நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதைப் போல, அந்த உணவுப் பொருட்களின் மிச்சத்தைத் திட மற்றும் நீர்க் கழிவுகளாக நம் உடல் வெளியேற்ற சிறுநீரகம், கல்லீரல், தோல், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் பிறந்ததிலிருந்து ஒரு நொடி கூடி ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும். இந்த உடல் உறுப்புகளை, நாம் கரிசனத்துடன் கையாள வேண்டும். அதன் இயக்கங்களுக்கு ஓரளவிற்கு ஒய்வு தர வேண்டும். நாக்கு ருசிக்கு மட்டுமே முன்னுரிமை தந்து, இவை உடல் நலத்திற்குக் கேடானவை, கழிவு நிறைந்தவை எனத் தெரிந்தே பல உணவுகளை திணித்து குடல் இயக்கத்திற்கு கேடு செய்கிறோம். நச்சு நிறைந்த உணவை உண்பதால் உடல் பாதிப்படைகிறது. நம் வீட்டில் கழிவுநீர் தொட்டி நிறைந்து தூர்நாற்றம் ஏற்படுவது போல குடல் கெட்டு, அழுகி, மலம் தங்கி நாற்றமெடுக்கிறது. இதைச் சரிசெய்ய விரதம், பட்டினி போடு...

Natural foods that protect the heart:இதயம் காக்கும் இயற்கை உணவுகள்!...

Image
Health Care Tips in Tamil :மானுட உடலின் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்புகளின் முன்னோடியாய் இதயத்தைக் குறிப்பிடலாம். தாயின் கருப்பையிலேயே இதயத்தின் வேலை ஆரம்பமாகி விடுகிறது. இரவு, பகல் பாராது இடைவிடாது மனிதனின் ஆயுட்கா லம் முழுவதும் இயங்கிக் கொண்டே இருக்கும் இனிய தோழன்தான் இந்த இதயம். இதன் துடிப்பு நின்றுவிட்டால், நாடித்துடிப்பு ஏற்படவில்லை என்றால் வாழ்க்கை முடிந்துவிட்டதாய் அர்த்தம்.  நேற்று நானும் அவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மதிய உணவு ஒன்றாகச் சாப்பிட்டோம். லேசாய் நெஞ்சு வலிப்பதாய் சொன்னார். மருத்துவமனை செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது.  இதுபோன்ற நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகளை நாம் கண்கூடாய் கண்டும் கேட்டும் வருகிறோம். இப்பொழுது இதயம் காக்கும் இயற்கை உணவுகளைப் பற்றி அறிவோம். இதயத்தின் செயல்பாடுகள் என்ன? 'இதயம்' என்பது உடலின் அனைத்து உறுப்புக்களும் ஒழுங்கே இயங்க உதவி புரியும் உற்ற நண்பன். அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான இரத்தத்தை இரத்த நாளங்கள் வழியாகத் தொடர்ச்சியாக இறைந்து விடும் ஒரு அற்புதக் கருவி.  ஒவ்வொருவரின் இறுக  மூடிய கையளவே கொண்ட இதயத்தில் (1) இதய வ...

Knee Pain:மூட்டு வலினால ரொம்ப கஷ்டப்படுறீங்களா???இந்த பதிவு உங்களுக்கு தான்!...

Image
Health Care Tips :வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாரையும் பாதிக்கிற இந்த முதுகுவலி எதிர்பாராத நேரத்தில் வருகிற திடீர் விருந்தாளி மாதிரி எப்போது வேண்டுமானாலும் வரும். இதனை சரியான முறையில் கையாண்டால் முதுகு வலியை துரத்தி விட்டு விடலாம்.கீழே அதற்க்கான தெளிவான விளக்கங்களை பார்க்கலாம். வாருங்கள்!... வலிக்கான காரணங்கள்: முதல் காரணம் உட்கார்கிற, நிற்கிற நிலை, எப்போதுமே முதுகு வளையக் கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய வேலை என்றால் உங்கள் இருக்கை. முதுகுக்கு சப்போட்டாக இருக்க வேண்டும். அடி முதுகை ஒட்டினாற் போல ஒரு குஷன் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கொரு முறை ஓய்வு அவசியம்.  அடிக்கடி டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள்? அதுகூட முதுகு வலியை உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மன உளைச்சல் முதுகு மற்றும் கழுத்துத் தசைகளின் ஒருவிதப் பிடிப்பை உண்டாக்கி, முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முதுகெலும்பு தசைகளில் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. விளைவு? லேசாக குனிந்தால் கூட உயிர் போகிற அளவுக்கு முதுகுவலி! தீர்வு என்ன? தியானம் செய்யுங்கள். யோகாவும் பலன் தரும். எடுத்த எடு...

Eye Care: சமைக்க பயன்படுத்தும் உணவுப்பொருட்களை வைத்தே கண் குறைபாட்டை எளிதில் சரி செய்யலாம்!...

Image
  Eye Care Tips in Tamil : டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து கொண்டு வருவதால் இன்றைய காலத்து குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை  பெரும்பாலும் கண் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். அதிகபற்றம் எதனால் இக்குறைபாடு வருகிறது என்று தெரியுமா? தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற டிஜிட்டல்  சாதனைகளை  அளவுக்கு மீறி பயன்படுத்தியது தான் காரணம்.அதிலும் மோசமான நிகழ்வு என்னவென்றால் குழந்தை பிறந்து ஒரு வயது கூட முடிந்திருக்காது அவர்கள் கையிலும் தொலைபேசியை கொடுத்து குழந்தைகளையும்  கெடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு நாள் ஆக ஆக கண் குறைபாடு சீக்கிரமாகவே வந்து விடுகிறது. அதனால் டிஜிட்டல் சாதனைகளை அளவோடு பயன்படுத்துவது கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கவனம் தேவை: கண் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலே சரி செய்வது சிறந்தது. இல்லையென்றால் காலப்போக்கில் இவ்வுலகத்தை பாக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளி விடும்.  கண்பார்வை குறைபாட்டினால்  ஏற்படும் அறிகுறிகள்: 1. புத்தக  எழுத்துகள்  படிக்க முடியாமை. 2. தொடர்ந்து கண்களில் சோர்வு ஏற்படும்.  3....