பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய 10 சூப்பர் உணவுகள் – ஆரோக்கியமும் அழகும் தரும் அற்புத உணவுகள்!...

View This Image



ஒரு பெண்ணின் ஆரோக்கியம் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கான அடித்தளமாகும். பெண்கள் வேலை, குடும்ப பொறுப்புகள், குழந்தைகள் பராமரிப்பு போன்ற பல பொறுப்புகளை தினமும் சமாளிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக பெறாமல் போகும் வாய்ப்பு அதிகம்.

இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் பற்றாக்குறை, ஹார்மோன் சமநிலையின்மை, எலும்பு பலவீனம், சோர்வு போன்ற பிரச்சனைகள் பெண்களிடம் பெரிதும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க தினசரி உணவில் சில சிறந்த  உணவுகளை சேர்ப்பது மிகவும் அவசியம்.


இந்த பதிவின் மூலம் பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய 10 சூப்பர் உணவுகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. கீரை வகைகள்

கீரைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான இயற்கை உணவாகும். குறிப்பாக, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை போன்றவை இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்தவை என்பதால் 

 இரத்த சோகையைத் தடுத்து  உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கீரை மிகவும் பயனுள்ளதாகும்.

எப்படி சாப்பிடலாம்?

  • கீரை கூட்டு
  • கீரை சூப்
  • கீரை அடை
  • கீரை சாறு

2. முட்டை

முட்டை முழுமையான புரதச்சத்து கொண்ட உணவாகும்.தசை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துவதில் சிறந்ததாக இருக்கிறது. மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது. முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

தினசரி அளவு

ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முட்டைகள் சாப்பிடலாம்.

3. பாதாம் மற்றும் வால்நட்

நட்ஸ் வகைகள் பெண்களின் உடல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை தருகின்றன.இதனை சாப்பிடுவதன் மூலம்  நினைவாற்றல்  அதிகரித்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சருமத்தை பளபளப்பாக்குவதில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மேலும், நல்ல கொழுப்புச் சத்துக்களையும்  வழங்குகிறது

எப்படி சாப்பிடலாம்?

இரவில் ஊறவைத்து காலையில் 5 பாதாம் மற்றும் 2 வால்நட் சாப்பிடலாம்.

4. தயிர்

தயிர் கால்சியம் மற்றும் ப்ரோபயாட்டிக் நிறைந்த உணவாகும்.இது எலும்புகளை வலுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும்  அதிகரிக்கிறது

பரிந்துரை

மதிய உணவுடன் ஒரு கப் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. வாழைப்பழம்

வாழைப்பழம் உடனடி ஆற்றலை வழங்கும் சிறந்த பழமாகும்.இது  சோர்வை குறைத்து உடலுக்கு பொட்டாசியதை கொடுக்கிறது.குறிப்பாக, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறந்ததாக இருக்கிறது. மேலும், செரிமானத்தை சீராக்குகிறது.

எப்போது சாப்பிடலாம்?

காலை உணவுக்குப் பிறகு அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

6. மீன்

மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து  மூளை வளர்ச்சிக்கு  உதவியாக இருக்கிறது.குறிப்பாக இது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகிறது மேலும், தோல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

சிறந்த மீன் வகைகள்

  • சூரை மீன்
  • மத்தி மீன்
  • சாளை மீன்

வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சாப்பிடலாம்.

7. பேரீச்சம்பழம்

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் பேரீச்சம்பழம் முக்கியமானது.இது இரத்த சோகையைத் தடுத்து உடல் சோர்வை குறைக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது. குறிப்பாக, இதை சாப்பிட்டதும் உடனடி சக்தியை கொடுப்பதில் இப்பழம் சிறந்ததாக இருக்கிறது.

தினசரி அளவு

2 முதல் 4 பேரீச்சம்பழங்கள் வரை சாப்பிடலாம்.

8. ஓட்ஸ்

ஓட்ஸ்  சிறந்த ஆரோக்கியமான காலை உணவாகும். எடை கட்டுப்பாட்டிற்கு உதவுதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த செய்வதில் ஓட்ஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

எப்படி சாப்பிடலாம்?

  • ஓட்ஸ் கஞ்சி
  • ஓட்ஸ் உப்புமா
  • ஓட்ஸ் ஸ்மூத்தி

9. மாதுளை

மாதுளை பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த  பழமாகும்.இரத்தத்தை சுத்தப்படுத்தி  ஹீமோகுளோபின் அளவை உயர்த்துகிறது. குறிப்பாக,  சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. 

தினசரி அளவு

ஒரு சிறிய கிண்ணம் மாதுளை விதைகள் சாப்பிடலாம்.

10. பூண்டு

பூண்டு இயற்கையான மருத்துவ குணங்கள் நிறைந்த உணவாகும்.இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு இதய ஆரோக்கியத்தையும்  பாதுகாக்கிறது.மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக இருக்கிறது.

எப்படி சாப்பிடலாம்?

காலையில் வெறும் வயிற்றில் 1 அல்லது 2 பல் பூண்டு சாப்பிடலாம்.



பெண்களுக்கான கூடுதல் ஆரோக்கிய குறிப்புகள்

1. தினமும் அதிக தண்ணீர் குடியுங்கள்

ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. போதுமான தூக்கம் அவசியம்

7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

3. உடற்பயிற்சி செய்யுங்கள்

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள்.

4. ஜங்க் உணவுகளை குறையுங்கள்

அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்

தியானம் மற்றும் யோகா மன அமைதியை வழங்கும்.


பெண்களின் ஆரோக்கியம் உணவிலிருந்தே தொடங்குகிறது. கீரை, முட்டை, பாதாம், தயிர், வாழைப்பழம், மீன், பேரீச்சம்பழம், ஓட்ஸ், மாதுளை மற்றும் பூண்டு போன்ற சூப்பர் உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம், சரும அழகு, முடி வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும்.

சிறிய உணவுப் பழக்க மாற்றங்கள் கூட பெரிய ஆரோக்கிய நன்மைகளைத் தரும். இன்று முதல் இந்த 10 சூப்பர் உணவுகளையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை  தொடங்குங்கள்!

Post a Comment

0 Comments

Women

Responsive Advertisement