30 வயதிற்கு பிறகு கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஸ்கின் கேர் பழக்கங்கள்

 

View This Image


30 வயதிற்கு மேல் சருமத்தில் இயற்கையாகவே  பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. இளமையான தோற்றத்தை வழங்கும் கொலாஜன் (Collagen) மற்றும் எலாஸ்டின் (Elastin) உற்பத்தி மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக முகத்தில்  சுருக்கங்கள், கரும்புள்ளிகள், உலர்ந்த சருமம் மற்றும் சருமத்தின் நெகிழ்வுத் தன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.


ஆனால் சரியான ஸ்கின் கேர் பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே, 30 வயதிற்கு பிறகும் ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் இளமையான சருமத்தை கொண்டுவர முடியும். இந்த பதிவில்  30 வயதிற்கு பிறகு அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஸ்கின் கேர் பழக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.


1. தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்யுங்கள்

சரும ஆரோக்கியத்தின் அடிப்படை ஒன்று  முகத்தை சரியாக சுத்தம் செய்வதில்தான் இருக்கிறது. காலை எழுந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும் முகத்தை மைல்டு கிளென்சர் (Mild Cleanser) கொண்டு கழுவ வேண்டும்.இவ்வாறு செய்யும்போது அழுக்கு மற்றும் எண்ணெய் நீங்கும், துளைகள் (Pores) அடைபடாமல் இருக்கும், முகப்பரு பிரச்சினைகள் குறையும்,சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்  சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, உங்கள் சரும வகைக்கு ஏற்ற கிளென்சரைத் முகப் பரிசோதனை செய்யும் மருத்துவரிடம் சென்று தேர்வு செய்யுங்கள்.


2. மாய்ஸ்சரைசரை தவறாமல் பயன்படுத்துங்கள்

பலர் மாய்ஸ்சரைசர் உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் அனைத்து சரும வகைகளுக்கும் மாய்ஸ்சரைசர் அவசியம் என்று கூறப்படுகிறது.

30 வயதிற்கு பிறகு சருமத்தில் ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். எனவே காலை மற்றும் இரவு பயன்படுத்தவும். ஹயாலுரோனிக் ஆசிட் (Hyaluronic Acid) கொண்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்யுங்கள்.இது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். மாய்ஸ்சரைசர் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை வலுப்படுத்த உதவி செய்கிறது.

3. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை பழக்கமாக்குங்கள்


சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் (UV Rays) சருமத்தின்  வயதான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றனது.


எனவே SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். வீட்டில் இருந்தாலும் பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் முன் 20 நிமிடங்களுக்கு முன் தடவுங்கள். 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் பயன்படுத்துங்கள். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளைத் தடுக்க உதவுகிறது.


4. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்


உடலின் ஆரோக்கியம் சருமத்தில் வெளிப்படுகிறது. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.

தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் போது நச்சுக்கள்  வெளியேற்றப்படுகிறது, சரும ஈரப்பதத்தை பராமரிக்கிறது,பளபளப்பான தோற்றத்தை கொடுக்கிறது, உலர்ந்த சருமத்தைத் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்.


5. ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுங்கள்


நீங்கள் சாப்பிடும் உணவுகளே  உங்கள் சருமத்தின் தரத்தை தீர்மானிக்கின்றன.

அன்றாடம் சாப்பிடும் உணவில் பழங்கள், காய்கறிகள்,பாதாம் மற்றும் வால்நட், விதைகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதிக சர்க்கரை உள்ள உணவுகள்,ஜங்க் உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியமான உணவுகள் சரும செல்களை புதுப்பிக்க பெரிதும் உதவியாக இருக்கின்றனர்.

6. நல்ல தூக்கத்தை உறுதி செய்யுங்கள்

30 வயதிற்கு பிறகு சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தூக்கம் மிக மிக முக்கியம்.கட்டாயமாக  7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.இரவு நேரத்தில் தூங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்

தூக்கத்தின் போது சருமம் தன்னைத் தானே பழுது பார்க்கிறது. போதுமான தூக்கம் இல்லையெனில் கண் கருவளையம்,சோர்வான தோற்றம், முன்கூட்டிய சுருக்கங்கள் வருதல் போன்ற பிரச்சினைகள் முகத்தில் ஏற்படலாம்.

7. ஆன்டி-ஆக்ஸிடென்ட் சீரம்களை பயன்படுத்துங்கள்

வயது அதிகரிக்கும் போது ஆன்டி-ஆக்ஸிடென்ட் பாதுகாப்பு மிகவும் அவசியம்.


என்னவெல்லாம் பயன்படுத்தலாம்?

Vitamin C Serum

Niacinamide Serum

Vitamin E அடங்கிய தயாரிப்புகள்


இவை உங்கள் சரும நிறத்தை பொலிவாக்கும், கரும்புள்ளிகளை குறைக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும்.

8. வாரத்திற்கு ஒரு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்

இறந்த செல்கள் சருமத்தில் தேங்கும்போது முகம் மங்கலாகத் தோன்றும். வாரத்திற்கு, 

1 அல்லது 2 முறை மட்டும் எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள். மென்மையான ஸ்க்ரப் அல்லது கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்துங்கள். இதனால் புதிய செல்கள் உருவாகும், முகம் பிரகாசமாகத் தெரியும்சரும பராமரிப்பு பொருட்கள் நன்றாக செயல்படும்.

9. கண் பகுதியை தனியாக கவனியுங்கள்


கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மெல்லியதாக இருக்கும். 30 வயதிற்கு பிறகு Eye Cream பயன்படுத்துங்கள், கண் பகுதியை மெதுவாக கையாளுங்கள். அதிகமாக தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இது கருவளையம் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும்.


10. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்


மன அழுத்தம் சரும ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.அதிக மன அழுத்தம் முகப்பரு, சரும மங்கல், சுருக்கங்கள், முடி உதிர்வுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இதற்காக யோகா செய்யுங்கள், தியானம் பழகுங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்விருப்பமான செயல்களில் ஈடுபடுங்கள்.

11. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலைத் தவிர்க்கவும்

புகைப்பிடித்தல் மற்றும் அதிக அளவு மது அருந்துதல் சருமத்தை வேகமாக வயதான தோற்றத்திற்கு கொண்டு செல்கிறது.இதனால் கொலாஜன் குறையும், சுருக்கங்கள் அதிகரிக்கும், சருமம் வறண்டு போகும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை உங்கள் சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்க உதவும்.

12. இரவு நேர ஸ்கின் கேர் ரொட்டீனை பின்பற்றுங்கள்


இரவு நேரத்தில் சருமம் புதுப்பிக்கப்படும் எனவே முகத்தை சுத்தம் செய்யுங்கள்,டோனர் பயன்படுத்துங்கள், சீரம் பயன்படுத்துங்கள், மாய்ஸ்சரைசர் தடவுங்கள்.

இந்த எளிய பழக்கம் சரும ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


13. சருமத்திற்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்வு செய்யுங்கள்

ஒவ்வொருவரின் சருமமும் வேறுபட்டது.

உலர்ந்த சருமம்:

Cream-based products

எண்ணெய் சருமம்:

Gel-based products

சென்சிடிவ் சருமம்:

Fragrance-free products


உங்கள் சரும வகைக்கு பொருந்தாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது முகத்திற்கு பிரச்சினைகளை அதிகரிக்கலாம்.

14. வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலில்  இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, சரும செல்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குகிறது, இயற்கையான பளபளப்பை அளிக்கிறது

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

30 வயதிற்கு பிறகு சரும பராமரிப்பு வெறும் அழகுக்காக மட்டுமல்ல; அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். தினசரி முக சுத்தம், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன், போதுமான தண்ணீர், நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற எளிய பழக்கங்கள் உங்கள் சருமத்தை நீண்ட காலம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.


இன்றே இந்த ஸ்கின் கேர் பழக்கங்களை உங்கள் வாழ்க்கையில் இணைத்து, 30 வயதிற்கு பிறகும் இயற்கையான அழகுடன் தன்னம்பிக்கையோடு வாழத் தொடங்குங்கள். வாழ்க வளமுடன்!...


Post a Comment

0 Comments

Women

Responsive Advertisement