Natural Health Care:உடல் சோர்வை போக்கும் இயற்கை பானங்கள்!...

View This Image



இப்பொது இருக்கும் காலக்கட்டத்தில் உடல் சோர்வு பலருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறி விட்டது. அதிக வேலைப்பளு, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் உடலில் சக்தி  இழந்து  சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வை போக்க பலர் செயற்கை எனர்ஜி பானங்களை நாடுகிறார்கள். ஆனால் அவற்றில் அதிக சர்க்கரை மற்றும் ரசாயனப் பொருட்கள் இருப்பதால் ஒரு காலத்தில்  உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.


அதற்கு மாற்றாக  இயற்கையான பானங்களை அருந்துவது  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் சக்தியையும் இயற்கையாகவே  பெற முடியும். இப்பதிவில்  உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் சிறந்த இயற்கை பானங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

1. இளநீர்

இளநீர் இயற்கையின் அருமையான வரப்பிரசாதம். இதில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்து இருப்பதால் உடலில்  நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தி உடனடி சக்தி அளிக்கிறது, சோர்வு மற்றும் தசைப்பிடிப்பை குறைத்து உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது.

எப்போது குடிக்கலாம்?

காலை நேரத்தில் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு குடிப்பது மிகச் சிறந்ததாக இருக்கும்.


2. எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் சிறந்த இயற்கை பானமாகும். இதில் வைட்டமின் சி  அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் சோர்வை குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

தயாரிக்கும் முறை:

ஒரு கண்ணாடி டம்ளரில்  தண்ணீர் ஊற்றி அதில்  அரை எலுமிச்சை சாறு பிழிந்து, சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம். இது உடலின் சோர்வை தனிப்பதில் சிறந்ததாக இருக்கும்.


3. நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்   சூப்பர்ஃபுட்.

இது உடல் சக்தியை அதிகரித்து இரத்த சுத்திகரிப்பிற்கு உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி சோர்வை விரைவாக போக்குகிறது.

எப்போது குடிக்கலாம்?

காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதிக பலன் கிடைக்கும்.

4. கரும்புச் சாறு

கரும்புச் சாறு இயற்கையான குளுக்கோஸ் நிறைந்த பானமாகும். இது உடனடி ஆற்றலை கொடுத்து கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், உடல் சோர்வை குறைக்கிறது மற்றும் நீரிழப்பையும்  தடுக்கும்.

கவனம்:

சுத்தமான மற்றும் சுகாதாரமான இடங்களில் தயாரிக்கப்படும் கரும்புச் சாறையே அருந்த வேண்டும்.


5. தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி பழத்தில் 90%-க்கும் அதிகமாக நீர் இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. மற்றும் நீரிழப்பைத் தடுக்கிறது. மேலும், உடல் சோர்வை குறைக்கிறது.

தர்பூசணி இதய ஆரோக்கியத்திற்கும்  பெரிதும் உதவியாக  இருக்கிறது.

சாப்பிடும் சிறந்த நேரம்:

மதிய நேரத்தில் குடிப்பது புத்துணர்ச்சி அளிக்கும்.


6. மோர்

மோர் தமிழர்களின் பாரம்பரிய ஆரோக்கிய பானமாகும். இது உடலை குளிர்விப்பதுடன் செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வழங்குகிறது. மேலும், வெயில் காரணமான சோர்வையும்  குறைக்கிறது.

தயாரிக்கும் முறை:

தயிரில் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அருந்தலாம்.


7. இஞ்சி டீ

இஞ்சி பல மருத்துவ குணங்கள் கொண்ட  இயற்கை மூலிகையாகும்.இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் சோர்வை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும், குளிர் மற்றும் இருமல் பிரச்சினைகளை தடுக்கிறது.

தயாரிப்பு:

தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, தேன் சேர்த்து குடிக்கலாம்.


8. புதினா பானம்

புதினா உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுப்பதால் மன அழுத்தத்தை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தி உடல் சோர்வை போக்குகிறது.மேலும், மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குகிறது.

தயாரிக்கும் முறை:

புதினா இலைகளை அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

9. பாதாம் பால்

பாதாம் பால் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய பானமாகும்.இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நீண்ட நேரம் சக்தி அளித்து தசை வலிமையை மேம்படுத்தி மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

எப்போது குடிக்கலாம்?

காலை உணவுடன் அல்லது இரவு நேரத்தில் அருந்தலாம்.

10. பேரீச்சம் பழ பானம்

பேரீச்சம் பழத்தில் இயற்கையான சர்க்கரை மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடனடி சக்தியை கொடுத்து இரத்த சோகையைத் தடுக்கிறது.குறிப்பாக, உடல் சோர்வை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

தயாரிப்பு:

பேரீச்சம் பழங்களை பாலில் ஊறவைத்து அரைத்து குடிக்கலாம்.


11. சியா விதை பானம்

சியா விதைகள் சமீப காலங்களில் மிகவும் பிரபலமான ஆரோக்கிய உணவாக மாறியுள்ளது. இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு நீண்ட நேரம் சக்தி அளித்து  உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சோர்வை குறைக்கிறது.

தயாரிக்கும் முறை:

ஒரு கப் தண்ணீரில் சியா விதைகளை ஊறவைத்து எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

12. மூலிகை டீ

துளசி, இலவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீ உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.இது உடலுக்கு மன அமைதியை கொடுப்பதுடன் உடல் சோர்வை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக, உடல் புத்துணர்ச்சியை மேம்படுத்துகிறது.

உடல் சோர்வை தவிர்க்க கூடுதல் குறிப்புகள்

இயற்கை பானங்களுடன் கீழ்க்கண்ட பழக்கங்களையும் கடைப்பிடித்தால் உடல் சோர்வு குறையும்.

  • தினமும் 7–8 மணி நேரம் தூங்குங்கள்.
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
  • தினசரி நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
  • அதிகப்படியான காபி மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கவும்.

உடல் சோர்வு சாதாரணமான ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதை புறக்கணிக்கக் கூடாது. இயற்கையான பானங்களை தினசரி உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் சக்தியையும் பெற முடியும். இளநீர், எலுமிச்சை சாறு, மோர், நெல்லிக்காய் ஜூஸ், தர்பூசணி ஜூஸ் போன்ற பானங்கள் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவியாக இருப்பதால் செயற்கை எனர்ஜி பானங்களை விட இயற்கை பானங்களைத் தேர்வு செய்வது உங்கள் உடல்நலத்திற்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.

Post a Comment

0 Comments

Women

Responsive Advertisement