Recent Posts

🎨 The Ultimate Coloring Book Bundle || Offer Today Only

700+ Coloring Pages || ₹400 || Affordable Price & High Quality

Download Now

Food is Medicine:(Siddha)சித்தர் நெறியில் உணவே மருந்து | கண்டிப்பா பாருங்க!...


View This Image





Siddha Care:இதய நோய், அண்மைக்கால மருத்துவத்திற்குக் கட்டுப்படுத்த இயலாத ஒரு நோயாக சவால் விடுகிறது. இந்நோய்க்கு 200க்கும் மேலான காரணங்களும், 12 விதமான ஆபத்துக்களும் சொல்லப்படுகின்றன. நோய் அறிகுறிகளை வைத்து, மருத்துவ வல்லுநர்கள் இதய நோயைக் கண்டுபிடிக்கவும், நோயின் தீவிர நிலை மற்றும் அதன் விளைவுகளைத் தீர்மானிக்கவும் செய்கிறார்கள். பூரிதக் கொழுப்பும், அதிகபட்சக் கொழுப்பும் இதய நோய்க்குக் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பும், தொழில் மயமான வளர்ந்த நாடுகளில் கூட, உணவுப் பழக்க வழக்கங்கள் இதய நோய்க்கு எப்படிக் காரணங்கள் ஆகுகின்றன என்பதைப் பற்றி சிந்திக்க மறுக்கின்றனர். இது மிகப் பெரும் அவலம்.

இதய நோய்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஆக்சிஜன் மயமான கொழுப்பு உணவில் அதிகமாவதும், பாலிகோசனால் உணவில் இல்லாததுமே அவ்விரண்டு காரணங்கள்.  

முதலில் செயற்கைச் சர்க்கரை(White Sugar)பயன்பாடு குறித்தும் இயற்கையான கரும்புச் சாற்றில் உள்ள, ஆரோக்கியத்திற்கு உதவுகிற மூலக்கூறுகள் எவ்விதம் இழக்கப்படுகின்றன என்பது குறித்தும் நாம் ஆராயலாம். அதாவது, பாலிகோசனால் இல்லாதது பற்றி யோசிப்போம்.

சர்க்கரை ஆலைகளில் கரும்புச் சாறைக் காய்ச்சித் திண்மையாக ஆக்குகின்றனர். கரும்புச்சாறு தின்மையடையும் போது, கரும்பில் உள்ள பாலிகோசனால்(Polycosonal)நுரையாக மேலே வருகிறது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை உருவாக இந்த நுரை தடையாக இருக்கும் எனக் கருதப்பட்டு அது நீக்கப்படுகிறது. சமீப காலத்தில் இவ்வாறான பாலிகோசனாலின் மூலக்கூறுகள் உள் அணு அடுக்குத் திசுவின் செயற்ப்பாட்டை மேம்படுத்தவும்,  இதய நோயின் வளச்சியைத் தடுக்கவும் பயன்படும் ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நமது பழைய வழக்கப்படி, கரும்புச் சாறை நேரிடையாக அதிக அளவு அருந்துவதும், ஆடை நீக்கப்படாத வெல்லம், பழுப்பு வண்ண நாட்டுச் சர்க்கரை மற்றும் கருப்பட்டி(பனை வெல்லம்) ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் அன்றாடச் செயற்படுகளாக இருந்தன. இந்தப் பழைய முறையின் மூலம், அதிகமான பாலிகோசனால் உள்ள உணவு, அல்லது பாலி கோசனால் உள்ள துணை அரிசி எண்ணெய், புழுங்கல் அரிசி உணவுகளை உட்கொண்டு வந்தனர். நாமும் இவ்வகை உணவுகளை உட்கொண்டு, அவற்றிலுள்ள இயற்கையான பாலிகோசனால் மூலம் இதய நோய்களின் தாக்கத்திலிருந்து நிச்சயம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

சைவ உணவுக்காரர்களுக்கு, பல அபூரிதக் கரைசல் கொழுப்பு அமிலங்கள்(PUFA)தேவைப்படுகின்றன.

அசைவ உணவுக்காரர்கள், அதிலும் குறிப்பாக அதிக கொழுப்புச் சத்துள்ள மீன் சாப்பிடுபவர்கள், தங்களுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை(EFA)உடலின் தேவைக்கேற்பப் பெற்று ஆரோக்கியமுடன் இருக்கிறார்கள்.


ஆனால் சைவ உணவுக்காரர்கள், உடல்நலம் கெடாமல் இருக்கவும், உடலை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் தங்கள் உடலுக்கு அவசியமான கொழுப்பு அமிலங்களைப்(EFA)பெரும் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். இனி இக்கொழுப்புகளின் பங்கேற்பு என்னவென்று பார்ப்போம்.

நமது உடலின் உயிரணுக்களில் 70 முதல் 80% பெருமளவில் நீராக உள்ளது. அந்த நீரானது நிலைத்திருக்கக் கொழுப்புச் சவ்வுகளும், உயிரணுச் சுவரும் எல்லைகளாக அமைந்துள்ளன.

உயிரணு மூலக் கூறுகளுள் மூன்றில் ஒரு பங்கு கொழுப்பு மூலம் தோற்றுவிக்கப் படுபவை. அடுத்த மூன்றிலொரு பங்கு புரதச் சத்துக்கள் /  நியூக்ளிக் அமிலங்கள் மூலமாகவும், கடைசி மூன்றிலொரு பங்கு மாவுச் சத்துக்கள் மூலமும் தோற்றுவிக்கப்படுபவையாகும்.

மிகவும் பயனுள்ள மற்றும் ஆற்றல் வாய்ந்த கொழுப்பு அமிலம், நோய்த் தடுப்பு இணக்கங்களைச் சீரமைக்கும் கீழ்/மேல் நிலைகள் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 வகைகளாக அமைக்கப்படுகின்றன. நோய்த்தடுப்பு சீரமைப்புக் கொழுப்பு அமிலங்களும், சீரமையற்ற மற்ற கொழுப்பு அமிலங்களும் பின்வருமாறு செயற்படுகின்றன. பொதுவாக உயிரணுக்களில் கொழுப்பு சேர்வதனால் நாம் வலிமை பெறுகிறோம். அதோடு, அவை நம் உயிரணுக்களின் தடுப்புச் சுவராக அமைந்து, சவ்வுகளின் மூலமாக சுற்றுச் சூழலின் தட்ப வெப்ப நிலை பாதிப்புகளில் இருந்து உயிரணுக்களைப் பாதுகாக்கின்றது. 


உடலில் உள்ள ஒவ்வொர் உயிரணுவும், இந்தக் கொழுப்பு அமிலத்தின் உருவாக்கமான 'உயிரணுச் சவ்வு எல்லை' யால் சூழப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

இந்த உயிரணுச் சவ்வு, தேவையான ஊட்டச் சத்துக்களை உயிரணுக்களுக்குள் செலுத்தவும், தேவையற்ற உற்பத்திப் பொருட்களைக் கழிக்கவும் துணை நிற்கிறது.      


View This Image


நாம் உட்கொள்ளும் தாவர, விலங்கின எண்ணெய் உணவுகளில் அதிக அளவிலான Glycerol அடங்கிய கொழுப்பு அமிலம் உள்ளது. இவற்றை உண்பதன் மூலம் நமது உயிரணுக்களிலும் திசுக்களிலும் இருந்து இக்கொழுப்பினை நாம் பெறுகிறோம். பாமர மக்களும் சாதாரண மக்களும் பெரும் பாலான எண்ணெய்களில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதாக நினைக்கிறார்கள். அலோபதி மருத்துவர்களும் கொலஸ்ட்ரால் கொழுப்பைத் தவிர்க்க எண்ணெய் பயன் படுத்துவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம். இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, எண்ணெய்கள் தூய்மையான triglycerides மூலக் கூறுகள் கொண்டவை. இரண்டாவது, தாவரங்கள் கொலஸ்ட்ரால் கொழுப்பை உற்பத்தி செய்வதில்லை. சில தாவரங்கள், உணவியல் இயக்க ஊக்கிகள் எனப்படும் பாதிப்பற்ற இயக்க ஊக்கி மருந்தை உருவாக்குகின்றன. இது நம் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பது.

கொழுப்பு அமிலங்கள் மனிதர்களின் உடலியல் நடை முறைக்கு வைட்டமின் போல் முக்கியமானவை, நாம் இவற்றைக் குறைவாகவே உணவில் சேர்த்துக் கொள்கிறோம். இப்பற்றாக்குறையை ஈடு செய்வது உடலின் கூடுதல் தேவை. எனவே பலவித இயற்கை மூலக் கூறுகள் அடங்கிய உணவுகளின் மூலமாக இவற்றை உட்க்கொள்ளுதல் அவசியமான ஒன்றாகிறது. இக் கொழுப்பு அமிலங்களின் சரியான செயற்படும் தன்மையின் காரணமாக உடலியக்க மாற்றங்கள் சமச்சீராக நிலைப்படுத்தப் படும்போது னாம் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். கொழுப்பு அமிலத்தில் இத்திறன் - அதாவது, உடலியக்க மாற்றங்களின் தன்மை - நம் வயது வித்தியாசத்திற்கேற்ப மாறுபாடக் கூடியது.

முதுமைக் காலத்தில் கொழுப்பு அமிலத்தின் இத்திறன் குறைந்து காணப்படும். எனவே, EFAவின் உணவுமுறைகளைச் சமச்சீரான வகையில் அமைத்து உட்கொள்வதன் மூலம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.


 


Post a Comment

0 Comments