Top 3 Smoothie Recipes:சுறுசுறுப்போடு நாளை துவங்க காலையில் குடிக்க வேண்டிய 3 ஜூஸ்!...


View This Image


Protein Smoothies in Tamil:உடலுக்கு ஆரோக்கியத்தையும் இளமையும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க நிறைய செயல்பாடுகள் இருக்கின்றனர். அதில் ஒன்றுதான் ஸ்மூத்தி(Smoothie). தினமும் காலை எழுந்தவுடன் இந்த ஸ்மூத்தியை குடிக்கும் போது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டும் இல்லாமல் உடலின் உள்ளிருந்து  இளமையை  தக்கவைக்க பெரிதும்  உதவியாக இருக்கின்றனர்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆரோக்கியமான ஸ்மூதியை குடிக்கலாம். கீழே சிறந்த மூன்று ஸ்மூத்தி ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். வாருங்கள் அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

1)ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்மூத்தி(Strawberry Smoothie)


View This Image



தேவையானப் பொருட்கள்:

  • ஸ்ட்ராவ்பெர்ரி - 6
  • வாழைப்பழம் - 2
  • அவுரிநெல்லி (Blueberries) - 100கிராம் 
  • ஸ்ட்ராவ்பெர்ரி - 6
  • பேரீச்சம்பழம் - 3
  • பாதாம் - 6
  • தேன் -1 டேபிள் ஸ்பூன் 
  • காய்ச்சப் பால் - ஒரு டம்ளர்(Glass)
  • பனிக்கட்டிகள்(Ice Cubes)-6 குயூப்(Cubes)

செய்யும்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்மூத்தி தயார்.

இந்த ஸ்மூத்தியை காலையில் விழித்ததும் குடித்துப் பாருங்கள். உங்கள் உடலில் சத்துக்கள் அதிகரித்து காணப்படும். குடித்த ஒரு மாதத்திலே உடல் ஆரோக்கியமாவது மட்டுமில்லாமல் உடல் மொழுமொழுவென்று தங்கம் போல் மினு மினுங்கும்.


2)ஓட்ஸ் ஸ்மூத்தி(Oats Smoothie)


View This Image


தேவையானப் பொருட்கள்:

  • ஓட்ஸ்(Oats) - சின்ன பௌவுல்(Bowl) அளவு  
  • முந்திரி(Cashew Nuts)- 3
  • பேரீச்சம்பழம்(Dates) - 3
  • காய்ச்சப்  பால் - ஒரு டம்ளர்(Glass)
  • வாழைப்பழம் - 2
  • இலவங்க பட்டை பவுடர் (cinnamon powder) - 1/2 டேபிள் ஸ்பூன் 

செய்யும் முறை:


ஒரு பௌலில் காய்ச்சப் பாலை ஊற்றி அதில் ஓட்ஸ், முந்திரி, பேரீச்சம் பழம் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று சேருமாறு கிளறிக் கொள்ளுங்கள். பின், மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வாழைப்பழம் மற்றும் பாலுடன் கிளறிவிட்ட ஓட்ஸ், முந்திரி, பேரீச்சம் பழம் போன்றவற்றையும், இலவங்க பட்டை பவுடரையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை ஒரு டம்ளரில்(Glass)  ஊற்றுங்கள். சுவையான ஓட்ஸ் ஸ்மூத்தி ரெடி. 

3)பப்பாளி ஸ்மூத்தி(Papaya Smoothie)

View This Image



தேவையானப் பொருட்கள்:

  • பப்பாளிப் பழம் - ஒரு பௌவுல்(Bowl) 
  • இளநீர் - 1
  • கேரட் - 2
  • நாட்டு சர்க்கரை(Jaggery Powder) - 1 டேபிள் ஸ்பூன் 
  • எலுமிச்சைப் பழம் -1/2
  • சியா ஸிட்ஸ்(Chia Seeds) - 1 டேபிள் ஸ்பூன் 

செய்யும் முறை:


பப்பாளிப்பழம் மற்றும் கேரட் இரண்டையும் வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பின், அதனுடன் இளநீரை வெட்டி அதனுள் இருக்கும் தண்ணீர், நாட்டு சர்க்கரை(Jaggery Powder), எலுமிச்சைப் பழம், சியா ஸிட்ஸ்(Chia Seeds) சேர்த்துக் கொண்டு அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பப்பாளி ஸ்மூத்தி ரெடி.