Home Made Natural Skin Brightening Face Pack
Skin Care Tips in Tamil:அழகு நிலையங்களில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் தற்காலிக பலன்களை கொடுத்தாலும், அவை தோலின் இயல்பான ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனால் பலர் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய பேஸ்பேக்குகளை பயன்படுத்த விரும்புகின்றனர். வீட்டுமுறை பேஸ்பேக்குகள் பெரும்பாலும் நம் சமையலறையில் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் தோலின் ஆழப்பகுதியில் ஊடுருவி, கருமையை குறைத்து, தோல் நிறத்தை சமப்படுத்துகின்றன. தோலின் நிறத்தை மாற்றுவது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து வீட்டுமுறை பேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக கருமையை நீக்கிவிடலாம்.
தினமும் செய்யுங்கள்:
அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் முகத்திற்கு பேஸ்வாஷ் ஆக பயன்படுத்துங்கள்.முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்திற்கு பொலிவை கொடுக்கும்.
காய்க்காத பாலை எடுத்து சிறிய காட்டன் துணியில் மூக்கி அதனை முகத்தில் தேயுங்கள். முகத்தில் இருக்கும் கருமை மங்கும்.
வீட்டில் இருக்கும் வெள்ளை உளுந்து, வெந்தயம், பாசிப்பயிறு, அரிசிமாவு மற்றும் கடலை மாவு இவை அனைத்தையும் சேர்த்து பவுடர் செய்து கருமை இருக்கும் இடத்தில் மசாஜ் செய்யுங்கள். படிப் படியாக கருமை நீங்கி பளபளப்புடன் இருக்கும்.
காட்டில் வளரும் கற்றாழையை எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் கற்றாழையின் மேல் தோலை நீக்கிவிட்டு அதனை முகத்தில் நன்றாக ஸ்கிரப் செய்யுங்கள்.கற்றாழையில் உள்ள ஈரப்பதம் தரும் சக்தி வறண்ட முகத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான பேஸ் பேக் எவ்வாறு தயாரிப்பது என்று விரிவாகப் பார்க்கலாம்.
வீட்டுமுறை அழகு வைத்தியம்
தேவையான பொருட்கள்:
- 2 டேபிள்ஸ்பூன் - அரிசி மாவு பவுடர்
- 1- தக்காளி
- 1-உருளைக்கிழங்கு
- 3 டேபிள்ஸ்பூன் - தயிர்
- 1- எலும்பிச்சைப்பழம்
- 1/2 மஞ்சள் தூள்
- காய்ச்சப் பால் - தேவையான அளவு
- தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய்
செய்யும்முறை:

Social Plugin