Skin Care:இந்த டிப்ஸ்அ மட்டும் try பண்ணி பாருங்க!...நீங்கள் வெள்ளையாவது உறுதி!...


View This Image



Skin Care Tips in Tamil:சித்திரைப் பூப் போல சிரித்த முகமாய் மாறவும், நம் முகத்தைக் கண்டால் முகம் சுளிக்காமல் செல்லவும், வயது தெரியாமல் இளமையாய் இருக்கவும் முகமே மிக முக்கியமான கண்ணாடி. இக்கண்ணாடியைத் துடைத்து அழகுப்படுத்திட நம்மிடம் உள்ள இயற்கை மருந்துகள் ஏராளம். இப்பொதுள்ள காலக்கட்டத்தில் யாரும் இயற்கை முறைகளை பயன்படுத்துவதியில்லை. ஏனென்றால் இயற்கை முறைகளை ஒரு முறை பயன்படுத்தியதும் முகத்தில் மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அது சாத்தியம் இல்லை. 

முதல் முறை பயன்படுத்தும் போது சிறிது மாற்றம் வரும். பின் போக போகத் தான் முகத்தில் அதிக மாற்றம் ஏற்படும். இதன் பயன் தெரியாதவர்கள் அழகு நிலையத்திற்கு சென்று தேவையில்லாத செயற்கை முறைகளை செய்து முகத்தை பளப்பளப்பாக்குவார்கள். ஆனால் அது நாளடைவில் பக்கவிளைவை ஏற்படுத்தி விட்டு சென்று விடும். பிறகு இயற்கை முறைகளை பயன்படுத்தி எந்த பயனும் இல்லை. இயற்கை முறைகள் காலம் தாழ்த்தினாலும் சிறந்த மாற்றத்தை கொடுக்கும் திறன் படைத்தது. என்றும் சிறந்தது இயற்கை முறை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பழ ஃபேஷியல்:

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராவ்பெர்ரிச் சாறு எடுத்து சில நிமிடங்கள்  ஃப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

பூவன் வாழைப்பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக்கழுவி வர, முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

காய்கறி ஃபேஷியல்:

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக்கொள்ளவும். முட்டை கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக் கோஸ் சாற்றை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டை கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். 

மேலே குறிப்பிட்டுள்ள பழ ஃபேஷியல் மற்றும் காய்கறி ஃபேஷியல் இரண்டையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்துக் கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கு ஒரு முறையும் செய்து கொள்ளலாம்.

பாலேடு பேக்:

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

குங்குமப் பூ:

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவை போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும். அது வெது வெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பதுதான் பலன் தரும்.

1)பாசிப்பயிறு பேக்(Natural Brightening Pack) 

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
  • பாசிப்பயிறு மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் 
  • காய்ச்ச பால் - தேவையான அளவு 
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
  • எலுமிச்சை பழ சாறு - பாதி 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.அவ்வளவுதான் பேஸ் ஸ்கிரப்  தயார். குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் முகத்தில் பூசி 15 நிமிடம் ஸ்கிரப் செய்ய வேண்டும். பின்  முகத்தை கழுவுங்கள். முகம் பொலிவுடனும் பளபளப்பாகவும் இருக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று தொடர்ந்து ஒரு மாதம் செய்யுங்கள்.  முகம் இயற்கையான பொலிவுடன் இருக்கும்.

2)கொரியன் கிளஸ் ஸ்கின் பேக்


தேவையானப் பொருட்கள்:

  • அரிசி -1/2 கப் 
  • ஆலோவேரா ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் 
  • காய்ச்சப் பால்  - 1 1/2 டேபிள்ஸ்பூன் 
  • சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 
  • வைட்டமின் இ கேப்ஸூயுல் - 1

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி 2 மணிநேரம் அரிசியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணியுடன் அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்து வைய்த்திருந்த  அரிசியுடன்  ஆலோவேரா ஜெல், காய்ச்சப் பால், சுத்தமான தேங்காய் எண்ணெய், வைட்டமின் இ கேப்ஸூயுல் ஆகியவற்றை சேர்த்து ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு கலந்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்  கொரியன் கிளஸ் ஸ்கின் பேக் தயார்.

இதனை முகத்தில் தடவி 5 -10 நிமிடம் கைகளை வைத்து முகத்தில் நன்கு ஸ்க்ரப் செய்யுங்கள்.பின் முகத்தை கழுவுங்கள். வாரத்திற்கு இரு முறை இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துங்கள். முகத்தில் நல்ல மாற்றம் வரும். முகத்திற்கு மட்டும் இல்லாமல் உடலில் எந்த பகுதி கருமையாக இருந்தாலும் அதில் பயன்படுத்தலாம். நல்ல பலன் கொடுக்கும்.

உளுந்து பேஸ்பேக்(Brightening and Glowing Face Pack)


தேவையானப் பொருட்கள்:


  • வெள்ளை உளுந்து - 3 டேபிள்ஸ்பூன்
  • வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன் 
  • தக்காளி - 1/2
  • எலுமிச்சை பழம்  - 1
  • மஞ்சள் - 1/2 டேபிள் ஸ்பூன் 

முதலில், வெள்ளை உளுந்து மற்றும் வெந்தயம் முதலிய இரண்டையும்  தண்ணீர் ஊற்றி சில மணி நேரம்  ஊறவைத்துக் கொள்ளுங்கள். பிறகு, ஊற வைத்த உளுந்து மற்றும் வெந்தயம் அதனுடன் தக்காளியை சேர்த்து   மிக்ஸி ஜாரில் மென்மையாக அரையுங்கள்.  மேலும், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் மஞ்சள் சேர்த்து  இரண்டில் இருந்து ஐந்து நிமிடம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு கலந்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இயற்கையானபேஸ்பேக் தயார். முகத்தில் பேஸ்பேக் போட்டு விட்டு கையால் முகத்தை 5-10 நிமிடம் ஸ்கரப் செய்யுங்கள். தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்யுங்கள். முதலில் பயன்படுத்தும் போதே முகத்தில் சிறிது மாற்றம் தெரியும். தொடர்ந்து பயன்படுத்தும் போது முகம் கருமை நீங்கி வெள்ளையாகவும், பொலிவாகவும் காணப்படும். முகத்திற்கு மட்டும் அல்லாமல் உடலில் கருமை படிந்துள்ள அனைத்து பகுதிக்கும் பயன்படுத்தலாம். 

கவனத்தில் கொள் நண்பா!நண்பி!


வெயிலில் செல்லும் போது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது சிறந்தது. டு வீலரில் செல்கின்ற போது கைகளுக்குக் கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால்,தயிர், சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.