Patha Vedippu Neenga Tips in Tamil:இப்பொது இருக்கும் காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர்க்கும் பாதவெடிப்பு எளிதில் வந்து விடுகிறது.ஆனால் பல பேர் இதனை சாதாரணமாக நினைத்து கொண்டு அதனை சரி செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.பாதவெடிப்பு எதனால் வருகிறது என்று தெரியுமா? பாதவெடிப்பு காலில் ஈரப்பதம் குறைவது, நின்று கொண்டே அதிக நேரம் வேலை செய்வது மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் பாத வெடிப்புகள் ஏற்படுகிறது. மேலும், பாதத்தில் தோல் உலர்ந்து வலி, எரிச்சல் மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு கூட பாதங்களில் ஏற்படலாம். இதனை சரியாக பராமரிக்காமல் விட்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளனர்.
உடலின் உள்புற பராமரிப்பு:
பாதவெடிப்பு நீங்க உடலின் உள்புற பராமரிப்பு மிக மிக அவசியம் ஆகுகிறது. உடலுக்குள் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தோல் உலர்ச்சி அதிகரித்து பாதத்தில் பிளவுகள் எளிதில் தோன்றும். எனவே குறைந்தது 8–10 கண்ணாடி(Glass) தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.பால், தயிர், கீரைகள், பழங்கள், காய்கறிகள், பாதாம், வால்நட் போன்ற சத்தான உணவுகளை உணவில் சேர்ப்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் அதிக சத்துகளை கொடுக்கும்.மேலும் ஒமேகா–3 கொழுப்பு அமிலம் கொண்ட ஆளி விதை, மீன், ஆலிவ் ஆயில் போன்றவற்றை முதலியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக, சீரான நேரத்தில் தூங்குதல், மன அழுத்தம் குறைத்தல், மற்றும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் போன்றவை எல்லாம் பாத வெடிப்பு நீங்க உட்புற பராமரிப்பாக உதவுகின்றன.
பாதவெடிப்பு நீங்க தினசரி பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள்:
காலை (Breakfast):
காலையில் எழுந்ததும் பல் விலக்கி விட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் குடிக்க வேண்டும். இது பாதவெடிப்புக்கு மட்டும் இல்லாமல் உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் தருகின்றனர்.
பால், வால்நட், பாதாம், (திராட்சை/ஆரஞ்சு / ஆப்பிள் / பப்பாளி- தினமும் ஒரு பழம்(இரண்டிற்கு மேலும் சாப்பிடலாம் உங்கள் விருப்பம்) சாப்பிடுவது சிறந்தது.இவை அனைத்தும் சேர்த்து ஸ்மூத்தியாகவும் (Fruit Smoothie) பருகலாம்.
மதிய உணவு (Lunch):
சாதத்துடன் பருப்பு, கீரைகள்(அனைத்து வகையான கீரைகள்) சேர்த்து சாப்பிட வேண்டும்.கேரட், பீட்ரூட், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உடலுக்கு ஈரப்பதத்தை தருவதில் சிறந்ததாக இருக்கின்றனர்.
வாரத்தில் 2 முறை மீன் சாப்பிடலாம் . ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கிடைக்கும்.அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகள், சோடா, ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் இதனை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
இரவு உணவு (Dinner):
காய்கறிகளை வைத்து சூப் செய்து சாப்பிடலாம்.சூப் சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சப்பாத்தி அல்லது ராகி கஞ்சியாக சாப்பிடலாம்.
தூங்குவதற்கு முன் பால் குடித்து விட்டு தூங்கவும். விரும்பினால் பாலில் சிறிது மஞ்சள் மிளகு சேர்த்து சாப்பிடுவதும் சிறந்தது.
கால்குளியல் மற்றும் எண்ணெய் தடவுதல்:
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் அதனுடன் சிறிதளவு உப்பு (salt) மற்றும் ஷாம்பூ/சோப்பு சிறிது சேர்த்து 15–20 நிமிடங்கள் பாதத்தை ஊற வைக்கவும். தொடர்ந்து செய்தால் பாதவெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். தேங்காய் எண்ணெய், எள்ளெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை பாத வெடிப்பிற்கு சிறந்த எண்ணெயாகும். படுக்கச் செல்லும் முன் பாதங்களை வெந்நீரில் கழுவி, நன்றாக துடைத்து எண்ணெயை தடவி காலுறை (socks) அணிந்தால் காலை நேரத்தில் பாதம் பளபளவென்று இருக்கும்.
மருத்துவன்மனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே பாத வெடிப்புகளை சரி செய்து, கால்களில் ஏற்படும் வெடிப்பையை எளிதில் நீக்கிவிடலாம். பாதவெடிப்பை குறைக்கும் இயற்கையான பேக் தயாரிப்பது எப்படி என்பதை கீழே விரிவாகப் பார்க்கலாம்.
பாதவெடிப்புக்கான இயற்கையான பேக்
தேவையானப் பொருட்கள்:
- காய்ச்சப் பால் - 2 டேபிள்ஸ்பூன்
- வாழைப்பழம் - பாதி
- அரிசி மாவு பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சைப் பழச்சாறு - 1
- தேன் - 1 டேபிள்ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் இவை அனைத்தையும் சேர்த்து 3-5 நிமிடம் நன்றாக கலக்கவும்.இந்த பேக்கை குளிக்க செல்வதற்கு முன் காலில் நன்றாக ஸ்கிரப் செய்யவும். தொடர்ந்து செய்து வர பாதவெடிப்பு படிப் படியாக குறையும்.

Social Plugin