Ad Code

Free & Affordable Price Canva Editable Template

Recent Posts

Responsive Advertisement

10 Best Fruits: பழங்களை சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?...இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!...


சிறந்த பத்து பழங்கள் (Top 10 Best Fruits)


View This Image






Fruits Benefits in Tamil: பழங்கள் இயற்கையின் அரிய வரப்பிரசாதம் என்று அனைவர்க்கும் தெரிந்ததே. பழங்கள் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை (nutrients) தாராளமாக வழங்கும் இயற்கை உணவாகும்.உடல் ஆரோக்கியம், சரும அழகு, மன சாந்தி என பலதரப்பட்ட நன்மைகளை வழங்குகின்றனர்.  குறிப்பாக, பழங்களை தினசரி உணவில் சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மற்றும் வயதான காலத்தில் இளமையை தக்கவைக்க/ஆரோக்கியத்தை தக்கவைக்க பழங்கள் பெரிதும் உதவியாக உள்ளனர். 

சிறந்த பத்து பழங்களின் நன்மைகளை பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம். 

ஆரஞ்சுப் பழம்(Orange)

ஆரஞ்சு பழம்  சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தவை ஆகும். இதில் நீர், கார்போஹைட்ரேட் போன்ற  ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின்  சி, நார் (Fiber), கால்சியம், பாசிட்டியம் போன்ற பல தாது ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றனர்.இது நோய் தடுப்பு சக்தியை  அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆரஞ்சுப் பழதை தினமும் ஒன்று சாப்பிட்டோ அல்லது ஜூஸ் ஆக குடித்தும் வந்தால்  சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, முகத்தை பொலிவாக மாற்றும் மேலும், முக சுருக்கத்தையும் குறைக்கும். குறிப்பாக,இப்பழம் உடலுக்கு ஈரப்பதம் தருவதிலும் சிறந்ததாக உள்ளனர்.

 

இயற்கையான அழகை அள்ளிக் கொடுக்கும்:

ஆரஞ்சில் அதிகம் உள்ள வைட்டமின் சி, தோலில் உள்ள மெலனின் (மஞ்சள்/கருமை நிறத்தை உருவாக்கும்) அளவைக் சமப்படுத்துகிறது. முகத்திற்கு இயற்கையான வெண்மை  மற்றும் பளபளப்பை  தருகிறது.


பருக்கள் மற்றும் கருப்புப் புள்ளிகளை குறைக்கும்:

ஆரஞ்சு சாறு மற்றும் அதன் தோல் பவுடர், பருக்கள் மற்றும் பிளாக் ஹெட்ஸ்(Black-heads), வாய்ட் ஹெட்ஸ்(White-heads) போன்ற தோல் பிரச்சனைகளை குணமாக்க பயன்படுகிறது. முக்கியமாக,அதன் ஆஸிடிக் தன்மை தோலை சுத்தமாக வைத்திருக்க உதவும்.


ஆண்டி-ஏஜிங் நன்மைகள்:

ஆரஞ்சில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள், குறிப்பாக ஹெஸ்பெரிடின் மற்றும் பைட்டோகெமிக்கல்ஸ், வயதான தோலுக்கு ஏற்படும் சுருக்கங்கள், தளதளப்பற்ற தோல் போன்ற பிரச்சனைகளை தாமதிக்கச் செய்கின்றன.


சூரியக்கதிரால் ஏற்படும் சேதத்தை தடுக்கும்:

வைட்டமின் சி  அதிகம் இருப்பதால் UV கதிர்வீச்சால் தோலில் ஏற்படும் சேதங்களை குறைக்கும் திறன் கொண்டவை. இது சன் டேம், டனிங் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.


எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்:

ஆரஞ்சு சாறு சருமத்தில் உள்ள அதிக எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துவதால், ஆயில்  ஸ்கின் கொண்டவர்களுக்கு சிறந்த தீர்வாகும்.


ஆரஞ்சு சாற்றை நேரடியாக முகத்தில் தடவலாம். ஆரஞ்சு தோல் தூளை தயிருடன் கலந்து முகக்கவசமாகப் பயன்படுத்தலாம். சீரமைக்கும் ஹெர்பல் பேஸ்பேக்‌க்களில் ஆரஞ்சு தூள் சேர்க்கலாம்.


முகக்கவசம் (Face Pack) தயாரிக்கலாம்:

ஆரஞ்சு தோல் தூள், பாசிப்பயிறு பவுடர், மற்றும் தயிர்/வெண்ணெய் கலவையால் முகக்கவசம் தயாரித்து, முகத்தில் தடவினால், முகம் சுத்தமாகவும், மென்மையாகவும் மாறும். 


எலுமிச்சைப் பழம்(Lemon)

எலுமிச்சை பழம், இயற்கையான அழகு பாதுகாப்புகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் பழமாகும். இதில் ஆரஞ்சு பழத்தை போல் அதிக அளவிலான வைட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், மற்றும் பல நன்மைகள் உள்ளதால்,சருமத்திற்கு பல வகையான நன்மைகளை இப்பழம் வழங்குகிறது. 


முகத்தின் பளபளப்பை  அதிகரிக்கிறது:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி  மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், சருமத்தின் கருமை, டனிங் போன்றவற்றை குறைத்து முகத்தை வெள்ளையாகவும் பளிச்சென்ற தோற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.


பிம்பிள், ஆக்னி (Pimples, Acne) குறைக்கும்:

எலுமிச்சையில் உள்ள ஆஸிடிக் தன்மை, முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பருக்கள், ரெட் ஸ்பாட்ஸ், ஆக்னி போன்றவற்றை குறைக்க பெரிதும்  உதவுகிறது.


எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்:

எலுமிச்சை சாறு, முகத்தில் உள்ள அதிக எண்ணெய் சுரப்பை குறைக்கிறது. ஆயில்  ஸ்கின் கொண்டவர்களுக்கு இப்பழத்தின் சாறு சிறந்ததாகும்.


கருப்புப் புள்ளிகள் மற்றும் மரத்தழுக்கை(Pigmentation)  அகற்றும்:

எலுமிச்சை சாறு இயற்கையான கருமைப் போக்கி(Bleaching Agent) ஆக செயல்படுவதால், முகத்தில் உள்ள கருப்புப் புள்ளிகள், முகக்கவிழ்ச்சி, மரத்தழுக்கை (Pigmentation) அகற்ற உதவுகிறது.


ஸ்ட்ராபெர்ரி (Strawberry)

ஸ்ட்ராபெர்ரிப் பழம்  சத்தான மற்றும் சுவையான பழமாக இருப்பதுடன், அதன் ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின் சி , மற்றும் ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் (AHA) போன்ற கூறுகளால் சரும நலத்திற்கும் அருமையானது இப்பழம். 

ஸ்ட்ராபெர்ரியில் அதிகம் உள்ள வைட்டமின் சி  முகத்தில் பளிச்சென்ற பிரகாசத்தை  தருகிறது. இது கரும்புள்ளி மேற்பரப்பை நீக்கி, புதிய தோல் செல்களை மேம்படுத்துகிறது.


`சுருக்கங்கள் மற்றும் வயது குறித்த சின்னங்களை குறைக்கும்:

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சத்துக்கள் சருமத்தின் அடிப்படை செல்களை பாதுகாத்து, வயதான தோற்றத்தை தாமதிக்க செய்கின்றன.


 பருக்கள் மற்றும் கருப்புப் புள்ளிகளை குறைக்கும்:

ஸ்ட்ராபெர்ரியின் ஆஸிடிக் தன்மை மற்றும் ஃபைட்டோகெமிக்கல்ஸ் முகத்தில் ஏற்படும் பிம்பிள், ஆக்னி, கருப்புப் புள்ளிகள் போன்றவற்றையும் குறைக்கும்.


எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்:

ஸ்ட்ராபெர்ரி ஆஸ்ட்ரிஜன்ட் குணமுடையது. இது முகத்தில் உள்ள அதிக எண்ணெயை உறிஞ்சி, ஆயில்  ஸ்கின் பிரச்சனைகளை குணப்படுத்தும்.


தோலை மென்மையாக மாற்றும்:

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள AHA (Alpha Hydroxy Acid), சத்து உறிஞ்சும் செயல்முறை மூலம் இறந்த செல்கள்(dead skin cells) நீங்கி, தோல் மென்மையாகவும் பொலிவாகவும் மாறுகிறது.

தழும்புகள் மற்றும் டனிங்(Tanning) அகற்ற உதவும்:

ஸ்ட்ராபெர்ரி சாறு மற்றும் அதன் புல்ப், முகத்தில் உள்ள பழைய பரு தழும்புகள், சன் டனிங் (sun tanning), மற்றும் மரத்தழுக்கை(Pigmentation) அகற்றுவதில் பயனுள்ளது. 


தர்பூசணி (Watermelon)

தர்பூசணி, 90% நீர் அடங்கிய மிகவும்  சத்தான விலை மலிவானப் பழமாகும். இதில் வைட்டமின்  ஏ, சி , மற்றும் லைகோபீன் (Lycopene) போன்ற சத்துக்கள்  அதிகமாக இருப்பதால், சருமத்திற்கும்/ உடலுக்கும்  ஆழமான ஈரப்பதம், பளபளப்பு மற்றும் தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் காப்பானாக இருக்கிறது. 


முக பளபளப்பை அதிகரிக்கிறது:

வைட்டமின்  சி மற்றும்  லைகோபீன் சருமத்தில் ஒளிவெளியை கூட்டி, முகத்தை ஜொலிக்க வைக்கிறது.


பருக்கள் மற்றும் தோல் அழற்சி குறைக்கும்:

தர்பூசணியில் உள்ள ஆன்டி-இன்ஃபிளமட்டரி (anti-inflammatory) தன்மை, பிம்பிள், ஆக்னி, மற்றும் தோல் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.


 எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்:

தர்பூசணி சாறு, ஆயில்  ஸ்கின் கொண்டவர்களுக்கு சிறந்தது. இது முகத்தில் உள்ள எண்ணெய் அளவை சமமாக வைத்திருக்கும்.


தோல் செல்கள் புதுப்பிக்க உதவும்:

வைட்டமின்  ஏ  தோலில் உள்ள இறந்த  செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்க பெரிதும் உதவி புரியும். 


ஆப்பிள் (Apple)

ஒரு நாளில் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்  மருத்துவரை தேடிப் போகவேண்டியதே இல்லை. அது உண்மை தான்! ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடென்ட்கள், மற்றும் ஃபைபர் போன்ற சத்துக்கள், உடல்நலத்திற்கு ஆரோக்கியம் மட்டும்  அல்லாமல், சரும நலத்திற்கும் மிகச் சிறந்ததாக இருக்கிறது. 

முகத்தை பளபளப்பாக மாற்றும்:

ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி  மற்றும் போலிபினால்கள், சருமத்தின் பிரகாசத்தை  அதிகரித்து, பளபளப்பான தோற்றத்தை இயற்கையாகவே அளிக்கின்றன.


வயதான தோலைத் தாமதிக்கிறது:

ஆப்பிளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், தளதளப்பற்ற தோல், மற்றும் வயதுக்கேற்ப தோல்  மாற்றங்களை தாமதிக்க உதவுகின்றன.


பருக்கள் மற்றும் தடங்கள் குறைக்கும்:

ஆப்பிள் சாறு அல்லது பேஸ்ட் முகத்திற்கு பயன்படுத்தும் போது, முகத்தில் ஏற்படும் பிம்பிள், ஆக்னி, மற்றும் அதன் தழும்புகள் குறைவடைய செய்யும்.


சருமத்தை ஈரமாக வைத்திருக்கிறது:

ஆப்பிளில் அதிக அளவில் நீர் சத்து இருப்பதால், வறண்ட தோல் அமைப்பு  உள்ளவர்களுக்கு இப்பழம் சாப்பிடுவது தோளில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும்.


டனிங்(Tanning) மற்றும் மரத்தழுக்கை குறைக்கும்:

ஆப்பிளில் உள்ள ஃப்ரூட்ட் ஆசிட்கள் மற்றும் வைட்டமின் சி, முகத்தில் உள்ள கருமை, டனிங்(Tanning) மற்றும் மரத்தழுக்கை(Pigmentation) மெதுவாக குறைக்க உதவி புரியும்.


செல் மறுபிறப்பை ஊக்குவிக்கிறது:

ஆப்பிளில் உள்ள AHA (ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட்), சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்க வழிவகை செய்யும்.


கொய்யாப்பழம் (Guava)

கொய்யாப்பழம்  மருத்துவ நன்மைகளில் மிக முக்கியமான பழமாகும். இதில் வைட்டமின் சி, , ஃபைபர், மற்றும் பீட்டா கரோட்டீன் மற்றும் பல  சத்துக்கள் நிறைந்து இருப்பதால் சருமத்திற்கும் உடலின் உட்புற ஆரோக்கியத்திற்கும் பல விதங்களில் நன்மைகளை கொடுக்கின்றனர்.


கொய்யாவில் அதிக அளவிலான வைட்டமின் சி(தோலுக்கு அழகை அள்ளிக்கொடுக்கும்), முகத்தில் உள்ள  பிரகாசத்தை  அதிகரித்து, பளபளப்பான தோற்றத்தை தருகிறது. இது மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதில் சிறந்தது.


வயதான தோற்றத்தை தாமதிக்கிறது:

கொய்யாப்பழம் மற்றும் அதன் இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் லைசோபீன், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வறண்ட தோல் போன்ற வயதுக்கேற்ப ஏற்படும் பிரச்சனைகளை தாமதிக்க மிக முக்கிய பங்கு வகுக்கிறது.


பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும்:

கொய்யா இலைகள் மற்றும் பழச் சாறு, முகத்தில் உள்ள பருக்கள், ஆக்னி, மற்றும் மரத்தழுக்கை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இயற்கையான தீர்வாக செயல்படுகின்றன.இதனை பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலன் கொடுக்கும்.


சுருங்கிய தோலை இறுக்கமாக மாற்றும்:

கொய்யா இலைகளின் சாறு, தோல் இறுக்கம்  செய்ய சிறந்தது.குறிப்பாக, இது மந்தமான மற்றும் தளர்ந்த தோலை இளமையாக மாற்றும் சக்தி கொண்டது.


செல்கள் புதுப்பிக்க உதவுகிறது:

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ, புதிய தோல் செல்கள் உருவாகவும், பழைய திசுக்கள் நீங்கவும் உதவி புரியும்.


சருமத்தை நீரேற்றம் செய்யும்:

நீர் சத்து மற்றும் ஃபைபர் அதிகமாக உள்ளதால், முகம் ஈரப்பதமாகவும், மென்மையாகவும்  இருக்கும்.


பப்பாளி(Papaya)

பப்பாளி பழத்தை பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும்.சரும சிகிச்சையில் இயற்கையாக பயன்படுத்தப்படும் முக்கியமான பழம் இது. இதில் நிறைந்துள்ள என்சைம்கள் (Papain), வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் சருமத்தை பாதுகாப்பதோடு மட்டும் இல்லாமல் , புதுப்பிக்கும் திறனும் கொண்டவையாக இருக்கிறது.


முகத்தை பளிச்சென்று மாற்றும்:

பப்பாளியில் உள்ள பாப்பைன்(Papain) என்சைம் மற்றும் வைட்டமின் சி, முகத்தில் உள்ள மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தி, முகத்தை பளபளப்பாக மாற்றும்.


மரத்தழுக்கை மற்றும் டனிங்(Tanning) குறைக்கும்:

பப்பாளி, முகத்தில் உள்ள சூரியக்கந்தகம்(Sun tanning), மரத்தழுக்கை, மற்றும் கருப்புப் புள்ளிகள் போன்றவற்றை  குறைக்கும் இயற்கையான கருமை போக்கியாக  உள்ளது.

செல் மறுபிறப்பை ஊக்குவிக்கிறது:

பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பாப்பைன்(Papain), இறந்த செல்களை அகற்றி, புதிய செல்கள் உருவாவதற்கு உதவுகிறது.


பருக்கள் மற்றும் அதன் தடங்களை குறைக்கும்:

பப்பாளியின் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி இருப்பதால், பருக்கள் (pimples) மற்றும் அதன் தழும்புகளை குறைக்க உதவியாக உள்ளனர்.


சருமத்தை ஈரமாக வைத்திருக்கும்:

பப்பாளிஅதிகமான நீர் சத்து கொண்ண்டுள்ளதால்,வறண்ட தோல் அமைப்பு (Dry Skin)  உள்ளவர்களுக்கு முகத்தில் ஈரத்தன்மையைக் கூட்டுகிறது.

மாதுளைப் பழம் (Pomegranate)

மாதுளை பழம் (Pomegranate) வைட்டமின் சி, வைட்டமின் கே, மற்றும் போலிபினால்கள் போன்ற சத்துக்களால்   உடலுக்குள் ஹிமோக்ளோபின் அளவை அதிகரிக்கும். 

வயதான தோற்றத்தைத் தாமதிக்கிறது:

மாதுளையில் உள்ள போலிபினால்கள் மற்றும் ஏலாஜிக் ஆசிட், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், தளர்வுகள், மற்றும் இளமை இழந்த தோல் ஆகியவற்றை தடுக்கின்றன. முதுமைக்கு(anti-aging)  உணவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


பருக்கள் மற்றும் பிக்மென்டேஷன் குறைக்கும்:

மாதுளையின் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, பருக்கள், ஆக்னி, மற்றும் அதன் தழும்புகளை குறைப்பதால்,சருமத்தின் ஒட்டுமொத்த நிறத்தையும் மேம்படுத்துகிறது.


புதிய செல்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்:

மாதுளையில் உள்ள ஏலாஜிக் ஆசிட் மற்றும் ஃபிளவனாயிட்கள், திசுக்களின் புதுப்பிப்புக்கு உதவுகின்றன. காற்று மாசுகள், சூரிய ஒளி, மற்றும் கேமிக்கல் தாக்கங்களை எதிர்க்கும்.


சூரிய ஒளியின் பாதிப்புகளை தடுக்கும்:

மாதுளையில் உள்ள சத்துக்கள்,UV கதிர்களின் காரணமாக ஏற்படும் சரும சேதங்களை குறைக்கும்.


சரும ஈரப்பதத்தை பாதுகாக்கும்:

மாதுளை விதைகளின் எண்ணெய் (Pomegranate Seed Oil), முகத்தை ஈரப்பதமாகவும்,மென்மையாகவும்  வைத்திருக்கும் திறன் கொண்டது. 

                                                            

மாதுளைப்பழம் தினமும் ஒன்று சாப்பிட்டால், இளமை தோற்றம், பளபளப்பான சருமம், மற்றும் கருமை குறைப்பு போன்ற பல நன்மைகளை பெறலாம்.


கிவிப் பழம்(Kiwi Fruit)

கிவிப் பழம் வைட்டமின் சி, வைட்டமின் இ,  ஆன்டிஆக்ஸிடென்ட்கள், மற்றும் ஃபைபர் போன்ற சத்துக்களால் நிறைந்த மிகச் சிறந்த பழமாகும். 


முக பளபளப்பை  அதிகரிக்கும்:

கிவியில் உள்ள வைட்டமின் சி  மற்றும் ஆண்டி-ஆக்சிடண்டஸ்(antioxidants)  மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் முகம் பளிச்சென்று மாற்ற செய்யும்.


சுருக்கங்களைத் தடுக்கிறது (Anti-aging):

வைட்டமின் இ  மற்றும் பாலிஃபெனால்கள் சருமத்தின் இளமையை பாதுகாக்கின்றன. இதனால் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் தாமதமாகிறது.  


பருக்கள் மற்றும் சிவப்பை குறைக்கும்:

கிவியின் அலர்ஜி எதிர்ப்பு(anti-inflammatory) மற்றும் பாக்ட்ரியா (anti-bacterial) தன்மைகள் பருக்களைக் கட்டுப்படுத்தி, சருமத்தின் சிவப்பையும் குறைக்கும்.


சூரியக் கதிர்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கும்:

கிவியில், UV கதிர்களால் ஏற்படும் சரும சேதங்களை தடுத்து,செல் புதுப்பிப்பை ஊக்குவிக்கும்:


வைட்டமின் சி  மற்றும் புரதச்சத்து(dietary fiber) சருமத்தின் உள் உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கி புதிய செல்கள் உருவாக உதவுகின்றன.


மோசம்பு(Pomelo)

மோசம்பு சிட்ரஸ் வகையைச் சேர்ந்த பழமாகும். இதில் வைட்டமின் சி, சிட்ரஸ் அசிட்  போன்ற பல சிறப்பம்சங்கள் நிறைந்தது. சருமத்தை அழகு செய்யும் இயற்கையான பழங்களில் இதும் ஒன்றாகும்.


முகம் பிரகாசமாகும்:

மோசம்புவில் உள்ள வைட்டமின் சி  சரும செல்களை புதுப்பித்து, முகத்தில் இயற்கையான பிரகாசத்தை ஏற்படுத்தும்.

கருமை மற்றும் பிக்மென்டேஷன் குறையும்:

இதில் உள்ள சிட்ரஸ் அசிட் கரும்புள்ளிகளை மற்றும் மரத்தழுக்கை(Pigmentation) குறைக்க உதவுகிறது.


பருக்கள் மற்றும் தடைகள் குறையும்:

மோசம்பு பருக்கள் (pimples), சின்ன சின்ன முளைகள் (acne) போன்றவற்றை கட்டுப்படுத்த துணை செய்யும்.


முக சருமம் சீராகும்,சுருக்கங்கள் குறையும்:

சருமத்தின் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துவதால், மேல் எண்ணெய் அல்லது உலர்ந்த தன்மையை சீராக்கும்.

மோசம்புவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் சரும அழற்சி, சுருக்கங்கள் போன்ற முதுமை அடையாளங்களை தள்ளிப் போடும்.


டனிங்(Tanning) மற்றும் சூரிய தாக்கம்(Sun tanning) நீங்கும்:

மோசம்பு சாறு சருமத்தில் உள்ள பரவலான கருமையை (tan) நீக்கி சருமம் மென்மையாக மாற உதவும்.


டிடாக்ஸ் (Detox) செய்கிறது:

உடலின் உள்ளே இருந்து சுத்திகரிப்புச் செய்து, சருமத்தில் வெளிப்படும் பிரச்சனைகளை (பிம்பிள், சோர்வு) குறைக்கும்.


மேலே குறிப்பிட்டுள்ள சிறந்த பத்து பழங்கள் அதிகப்பற்றமாக ஒரே நற்பண்புகளை தருவதால் இதனை தினமும் காலை வேளையில் சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும். மதியம்,மாலை, இரவிலும் பழங்கள் சாப்பிடலாம். ஆனால் காலையில் சாப்பிடுவது மிக மிக நல்லது.சலட் அல்லது ஜூஸ் வடிவில் பழங்களை வைத்து செய்து ருசியாகவும் சாப்பிடலாம். இதனுடன் நட்ஸ் வகைகளையும் கூடுதலாக சேர்ப்பது உடலுக்கு இன்னும் அதிக சத்துக்களை அள்ளிக்கொடுக்கும்.

மேலும் வாசிக்க: BH Boss Tamil-அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த தமிழ் வழிகாட்டி



Post a Comment

0 Comments

Responsive Ad

Free & Affordable Price Canva Editable Template

Ad Code