உடல் எடையை குறைக்க எளிய டிப்ஸ்
Weight-loss: உடல் எடையை குறைப்பது ஒரு பயணம் போன்றது. ஒரே இரவில் நடக்கும் மாயாஜாலம் அல்ல. நீங்கள் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றாவிட்டால் எந்த காலத்திலும் உடல் எடையை குறைக்க முடியாது. தினமும் நீங்கள் சரியான உணவுகளை சரியான முறையில் உட்கொண்டாலே போதும். உடல் எடை நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு சர்ரென்று கரைந்து விடும். இந்த செயல்முறைக்கு உறுதுணையாக இருக்கும் சில எளிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தான் "உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம்".
நாம் தினம் தோறும் சாப்பிடும் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லாமல் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:
- கடலை எண்ணெய்,கடலைப்பருப்பு,வடை, போண்டா,பஜ்ஜி, சிப்ஸ் மற்றும் எண்ணெயில் வறுத்தெடுத்த பதார்த்தங்கள். இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- கோழி,மட்டன், மாட்டுக் கறி மற்றும் இறால் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது.
- உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை சாப்பிட கூடாது.
- இன்றைய நவீன உணவுகளாக கருதப்படும் உணவுகளான பிட்ஸா, பர்கர், பப்ஸ், ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாது.இது உடல் எடைக்கு மட்டும் அல்ல...ஆரோக்கியத்தை முற்றிலுமாக சரித்து விடும்.
- 24 மணி நேரமும் ஐஸ் வாட்டர், குளிர் பானங்கள் போன்றவற்றை அருந்துவதைத் ரொம்ப உத்தமம்.
- உணவு அருந்தும் வேளையில் நொறுக்குத் தீனியை உண்ணும் பழக்கத்தை தவிர்த்தல்.
- போதை தரும் பீர், பிராந்தி, ஒயின் வகைகளைத் தவிர்த்தல்.
- டின்களில் அடைத்து விற்கப்படும் உடனடி உணவுகள்(Instant Foods),பிஸ்கட்டுகள் போன்றவற்றைத் சாப்பிடுதை தவிர்.
மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை அறவே நீக்குதல் மிகவும் சிறந்ததாக இருக்கும். ஆனால் பெரும்பாலானோருக்கு அப்படி இருக்க முடியாது. ஏனென்றால், சாப்பிடும் ஆசை இருக்க விடாது. அதனால் ஆசைக்கு எப்போதாவது சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்."அளவுக்கு மீறினால் அமுதம் கூட நன்றாகிவிடும்" இந்த பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சேர்க்க வேண்டிய உணவு வகைகள்:
- மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கன்னி, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை, புதினா, கருவேப்பிலை, மல்லி இலை போன்ற கீரைவகைகள் நம் உணவில் வந்தனம் கூறி வரவேற்கப்பட வேண்டியவை.
- பச்சை சுண்டைக்காய்,வெண்டைக்காய், பீட்ரூட், அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, பீர்க்கம் பிஞ்சு, சோயாபீன்ஸ், காராமணிக்காய், முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகள் பச்சைக் கொடி காட்டி ஏற்றுக்கொள்ள வேண்டியவை.
- திராட்சை, ஆரஞ்சு, பைன் ஆப்பிள், பப்பாளிப்பழம், மாதுளம்பழம், வெள்ளரிப்பழம், தர்பூசணிப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பலவகைகள். இவற்றை கண்டிப்பாக உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- உடலுக்கு ஆரோக்கியமான இயற்கையான உணவு முறைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

Social Plugin