Coconut oil Face Pack:தேங்காய் எண்ணெய் உடல் மற்றும் அழகு பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் இயற்கை எண்ணெய். இது தோல் மற்றும் தலைமுடிக்கு தீவிர ஊட்டச்சத்து வழங்குவதுடன், பல்வேறு சீரழிவுகளைத் தீர்க்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதில் உள்ள லோரிக் அமிலம், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் தோல் தொற்றுகளை குறைக்க உதவுகிறது. தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது முடி உதிர்வை குறைத்து, வேர்கள் வரை ஊட்டமளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், உலர்ந்த சருமத்தை மென்மையாக மாற்றுவதற்கும் உதவி புரியும்.
தேங்காய் எண்ணெய் சிறு தீக்காயங்கள், அரிப்பு மற்றும் சிரங்குக்கு கூட பயனளிக்கக்கூடியது. பல் சுத்தத்திற்கு எண்ணெய் கொப்பளிக்க பயன்படுவதால் வாய்வழி பாக்டீரியாவை நீக்கி பல் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உணவில் சேர்த்தாலும் இது உடலுக்கு நல்ல கொழுப்புகளை வழங்கி ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த எண்ணெய் மூட்டு வலி மற்றும் தசை இறுக்கங்களை குறைக்கும் இயற்கை நிவாரணமாகவும் செயல்படுகிறது.
தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தோல் நிறம் மற்றும் மென்மை மேம்பாடு (Improves Skin Tone & Softness):
இரவில் தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது, தோல் நிறத்திற்கு மென்மையை மேம்படுத்தும்.தேங்காய் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்டுகள், தோலின் சேதமடைந்த செல்களைப் பழுது பார்க்கும் திறன் கொண்டவை. இதனால், முகத்தின் மங்கலான தோற்றம் குறைந்து, இயற்கையான பளபளப்பு நிறம் கிடைக்கிறது. மேலும், தேங்காய் எண்ணெயின் ஈரப்பதம் தரும் தன்மை, தோலிற்கு ஆழமான ஊட்டச்சத்து அளித்து, தொடும்போது மென்மை உணரச் செய்கிறது.
ஆழமான ஈரப்பதம் (Deep Moisturization):
தேங்காய் எண்ணெயில் உள்ள இயற்கை கொழுப்பு அமிலங்கள், தோலின் உள்புற அடுக்கு வரை சென்று ஈரப்பதத்தை பூட்டிக் கொள்ளச் செய்து, உலர்ச்சி மற்றும் காய்ச்சலை தடுக்கும். குறிப்பாக, குளிர்காலம் அல்லது அதிக வெப்பம் காரணமாக தோல் ஈரப்பதத்தை இழக்கும் நேரங்களில், தேங்காய் எண்ணெய் பாதுகாப்பு கவசம் போல செயல்பட்டு, நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கிறது. கம் மென்மையாகவும்,இயற்கையான பொலிவுடனும் காணப்படும்.
குழந்தைகள் மற்றும் உணர் திறன் அதிகமான தோலுள்ளவர்களுக்கும் இது பாதுகாப்பான மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. முகம், கைகள், கால்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேய்த்து பயன்படுத்தலாம். இதன் இயற்கை தன்மை காரணமாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் தினசரி பராமரிப்பில் சேர்த்துக்கொள்ள முடியும். கூடுதலாக, இதன் மணமும் தோலை நறுமணமுடன் வைத்திருக்கிறது. நள்ளிரவில் பயன்படுத்தினால், காலை நேரத்தில் தோல் மென்மையும் பொலிவும் அதிகரிக்கும்.
அழற்சி மற்றும் சிவத்தன்மை குறைப்பு (Reduces Inflammation & Redness):
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் (Lauric Acid) மற்றும் காப்ரிக் அமிலம் (Capric Acid) போன்ற கொழுப்பு அமிலங்கள் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) தன்மைகள் கொண்டவை. இவை தோலில் ஏற்படும் சிறிய எரிச்சல், முகப்பரு காரணமான சிவப்பு, சூரிய ஒளி பாதிப்பு அல்லது ஒவ்வாமை காரணமான வீக்கம் போன்றவற்றை தணிக்க உதவுகின்றன. இரவில் தேங்காய் எண்ணெயை தடவுவதால், தூக்கத்தின் போது எண்ணெய் தோலின் அடுக்குகளில் ஊடுருவி, எரிச்சல் உணர்வை சமநிலைப்படுத்தி, செல்களின் குணமடையும் வேகத்தை அதிகரிக்கிறது. இதனால், காலை எழும்போது தோல் சமநிலையான நிறத்துடனும் மற்றும் ஆரோக்கியமான தோற்றத்துடனும் இருக்கும்.
வயதான தோற்றத்தை தாமதப்படுத்துதல் (Anti-aging Benefits):
இதில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் பாலிபீனால்கள், தோலில் உள்ள சுதந்திர மூலக்கூறுகள் (Free Radicals) ஏற்படுத்தும் சேதத்தைத் தடுப்பதன் மூலம் சுருக்கங்கள், நரை கோடுகள் மற்றும் தளர்ச்சி போன்ற முதிர்வுக் குறிகளை குறைக்கின்றன. தூக்கத்தின் போது தேங்காய் எண்ணெய் தோலின் ஆழத்துக்குள் சென்று செல்களின் சீரமைப்பு மற்றும் புதுப்பிக்கும் செயல்களை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து பயன்படுத்துவதால், தோல் மென்மையாகவும்,இளமையான தோற்றத்துடனும் காணப்படும்.காலப்போக்கில் வயதான தோற்றம் தாமதமாகி, ஆரோக்கியமான மற்றும் இயற்கையான தோலை தக்க வைத்துக் கொள்ளலாம் .
முடி வளர்ச்சிக்கு உதவும்:
தேங்காய் எண்ணெயில் உள்ள லோரிக் அமிலம் தலைமுடி வேர்களில் ஊடுருவி தீவிர ஊட்டத்தை வழங்குகிறது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, உதிர்வை குறைக்கும். மேலும், தேங்காய் எண்ணெய் தசைகளை நன்கு ஊற்றி மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி வறட்சி, உடைதல், இரும்பு குறைபாடு காரணமாக ஏற்படும் சிக்கல்களையும் இது சீர் செய்கிறது. வாடும் தலைமுடியை இளநீர் போன்ற சத்துக்கள் கொண்ட தேங்காய் எண்ணெய் நன்கு ஈரமாக்கி, பளபளக்கும் முடியை உருவாக்குகிறது.
தூங்கும் முன் தடவிச் சுத்தமான துணியில் முடியை கட்டி வைத்தால் அதிக நன்மை கிடைக்கும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினால் முடியின் அடர்த்தி மற்றும் நீளம் உயரும். குறிப்பாக, புதிய முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெயை முகத்தில் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:
- தோலை பரிசோதனை (Patch Test) செய்யவும்.
- எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்கு சுத்தம் செய்த பின்னர் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தவும்.
- தோல் வகையை கவனிக்கவும். பின்பு பயன்படுத்தவும்.
- வீட்டில் தயாரித்த தூய்மையான எண்ணெயை மட்டுமே பயன்படுத்தவும். அந்த எண்ணெய் தான் தோலுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
- தேங்காய் எண்ணெயை அதிகமாக தடவ வேண்டாம்.
- கண் பகுதியில் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்தவும். கண்களுக்கு உள் பகுதிக்கு எண்ணெய் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- தேங்காய் எண்ணெயை வெப்பம் படும் இடத்தில் வைக்காமல் குளிர்(அறையில் வைப்பது சிறந்தது) பகுதியில் வைக்கவும்.
தினமும் இரவு தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவது சிலரின் முகத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும் அல்லது சிலருக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பது சலிப்பாக இருக்கும் அவர்களுக்கான பதிவுதான் இது. நான் சொல்லும் இந்த பேஸ்பேக்யை இரவு முகத்திற்கு தடவி, காலையில் எழுந்து பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் மற்றும் உங்கள் தோலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இப்பொது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பேஸ்பேக் தயாரிப்பது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- சுத்தமான தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
- தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சைப் பழம் - பாதி
- மஞ்சள் - 1/2 டேபிள்ஸ்பூன்
- உளுந்து பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
செய்யும்முறை:
சுத்தமான தேங்காய் எண்ணெயில் தயிர், எலுமிச்சைப் பழம், மஞ்சள், உளுந்து பவுடர் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேருமாறு நன்கு ஸ்பூனால் கலக்கி கொள்ளவும். அவ்வளவுதான் பேஸ்பேக் தயார். முகத்தில் இந்த பேஸ்பேகை தடவியதும் கையால் முகத்தை 5-10 நிமிடம் ஸ்கிரப் செய்யவும். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். முகம் பொலிவாகவும், தோலில் நிறம் மாறியும் காணப்படும். ஒரு நாள் மட்டும் செய்தால் பலன் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்தால் தோலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
தேங்காய் எண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் தடவுவது, தோலின் இயற்கை அழகை பாதுகாத்து மேம்படுத்தும் எளிய வழியாகும். ரசாயனமில்லாத இந்த இயற்கை பராமரிப்பு முறை, தொடர்ந்து பயன்படுத்தினால் தோல் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பேண நம்பகமான துணையாக இருக்கும்.
மேலும் வாசிக்க: BH Boss Tamil-அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த தமிழ் வழிகாட்டி

Social Plugin