Skin Disease:தோல் வியாதி வருவதற்குக் காரணம் மலச்சிக்கலும், மலக்குடலில் உண்டாகும் பூச்சிகளுமே ஆகும்.வைட்டமின் B உள்ள கஞ்சி, அரிசி களைந்த கழுநீர், கீரைகள், கசப்புள்ள காய்கள் இவற்றை சாப்பிடாமல் இருப்பதே காரணம்.
இவர்கள் எப்பொழுதுமே சோப்புப் போட்டுக் குளிக்கக் கூடாது. சோப்பு, தோலில் உள்ள எண்ணெய்ப் பசையை எடுத்துவிடும். சுரப்பிகள் நன்கு வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணம். தோல் வியாதி உள்ளவர்களுக்கு அவசர, அவசரமாகச் சாப்பிடுவதும், பானங்களை அவசரமாகக் குடிப்பதும் பழக்கம்.
இந்த வியாதி உள்ளவர்கள், உண்ணும் உணவை நன்றாக மென்று சுவைத்து, உமிழ்நீர் சுரந்தபின் 'நீர் அருந்துவது போல' உணவைக் குடிக்க வேண்டும். தண்ணீரை உணவு உண்பதுபோல் மெதுவாகக் குடிக்கவும். தோல் வியாதி உள்ளவர்களுக்கு அடிக்கடி காது அரிப்பு ஏற்படும். மலக்குடலில் பூச்சியிருந்தால் அந்தக் காது அரிப்பு வரும்.
- தோல்படை
- கருமேகம்(தோல் கருமை)
- சோரியாசிஸ்(மீன்செதில்)
- கொப்புளமாக உடல் முழுவதும் இருக்கும்,
- உடல் அரிப்பு,சொறிந்தால் தண்ணீராக வரும்,
- உடல் முழுவதும் சிறு வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வரும்.
மேற்கண்ட ஆறு வியாதிகளும் கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளால் சரியாகிவிடும்.
தோல் வியாதிக்கு ஸ்நானப்பொடி தயாரித்தல்
ஆண், பெண் இருவருக்கும்
- கஸ்தூரி மஞ்சள்(ஆண்) 100 கிராம்
- கஸ்தூரி மஞ்சள்(பெண்) 500 கிராம்
- கொட்டை நீக்கிய நெல்லிவற்றல் 500 கிராம்
- பூலாங்கிழங்கு 500 கிராம்
- வேப்பமுத்து(தோல் நீக்கிய வேப்பம் பருப்பு) 200 கிராம்
- வெள்ளை மிளகு 200 கிராம்
- கடுக்காய்த் தோல் 200 கிராம்
- கோரைக்கிழங்கு 200 கிராம்
- தான்றிக்காய்த் தோல் 200 கிராம்
- காய்ந்த ரோஜா இதழ் 200 கிராம்
- காய்ந்த எலுமிச்சைத் தோல் 500 கிராம்
மேற்கண்ட அனைத்தையும் நன்கு காய வைத்து, இரும்பு உலக்கையால் இடித்து, மிக்சியில் அரைத்து, சல்லடையில் சலிக்கவும். காற்றுப் புகாமல், நன்றாக அமிழ்த்தி,ஒரு பாத்திரத்தில் வைக்கவும். தேவையானபொழுது ஸ்நானப் பொடி 1 கப், பாசிப்பருப்பு மாவு 1 கப், கப் 1:1 என்ற அளவில் கலந்து, 10 நிமிடம் உடம்பில் தேய்த்து ஊற வைத்துபின் குளிக்கவும். பாசிப்பயிறு மாவு (அல்லது) கடலை மாவு கலந்து கொள்ளவும்.
உட்கொள்ளும் மருந்து
எலுமிச்சை, சாத்துக்குடி, கொடை ஆரஞ்சு, மாதுளை, கிரேப்ஸ், அன்னாசி, பப்பாளி, இவற்றில் வைட்டமின் C உள்ளது. தோலைப் பாதுகாக்கும் சக்தி உள்ளது. இரவு உணவிற்கு இந்தப் பழங்களைத் தாம் சாப்பாடாகச் சாப்பிட வேண்டும்.
குளியல் முறைகள்
இருவேளை குளிப்பதற்கு முன்னதாக, 1 அல்லது 2 எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் கொள்ள வேண்டும். 5 அல்லது 10 நிமிடம் ஊறவைத்த பின் குளிக்க வேண்டும். இருவேளையும் தலையில் தண்ணீர் விட்டுத்தான் குளிக்க வேண்டும். ஸ்நானப் பொடியைத் தேய்த்துக் குளிக்கும் போது அவசரம் வேண்டாம். 10 நிமிடத்திற்கு மேல் நன்றாகத் தேய்த்து வைத்திருந்து குளிக்கவும். காலை, சூரிய உதயத்திற்கு முன்னும் மாலை சூரியன் மறைந்த பின்னும் குளிக்க வேண்டும். குளித்த பின் தினமும் கட்டிச்சூடத் தேங்காய் எண்ணெய் 1 சொட்டு உள்ளங்கையில் எண்ணெய் விட்டு 4 சொட்டு தண்ணீர் விட்டு இரு கைகளாலும் தேய்த்து, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும். இது உடல் முழுவதும் போதவில்லை என்றால், மறுபடியும் எண்ணெய், தண்ணீரை 1:4 என்ற விகிதத்தில் தேய்க்க வேண்டும். காலை, மதியம் உணவு வழக்கம் போல் சாப்பிடவும். இது ஆரம்ப நிலையில் உள்ள தோல் வியாதிக்கு மட்டும். நாட்பட்ட வியாதி உள்ளவர்கள் காலை உணவு வெறும் பச்சைக்காய்கறிகள் பழங்கள், மட்டுமே சாப்பிட வேண்டும். மதிய உணவு மோர் அல்லது தயிர், கீரைகள் அதிகமான காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். புளி, அதிகக் காரம், எண்ணெய் இல்லாமல் சமைக்க வேண்டும். சளி உள்ளவர்கள் மோர்ச் சாதம் சாப்பிடக் கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கத்தரிக்காய், கருவாடு, முட்டை, மாமிசம், சீனிப் பலகாரங்கள், டால்டா, நெய், சேப்பங்கிழங்கு, வாழைக்காய்.
குறிப்பு
மிக நாட்பட்ட வியாதி உள்ளவர்கள் பல சிகிச்சை முறைகளைக் கையாண்டு, தீராத வியாதி உள்ளவர்கள் யோகா, பிராணாயாமம் செய்து விட்டு, இந்தச் சிகிச்சையைக் கையாண்டால், விரைவில் குணமாகிவிடும்.
சேர்த்துக்கொள்ள வேண்டியது
காலை காபி, டீக்குப் பதிலாகக் கொத்தமல்லித் தழை அல்லது கறிவேப்பிலை அல்லது புதினா அல்லது மணத்தக்காளி சமளவு கைப்பிடி அளவு எடுத்து, அதே அளவு தேங்காய்த் துருவல், கொட்டைப் பாக்கு அளவு பனைவெல்லம், மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து, சாறு எடுத்து, வடிகட்டி, 10 நிமிடங்கள் சுவைத்து சாப்பிட வேண்டும் அல்லது வில்வச்சாறு, அருகம்புல் சாறு, கேரட் சாறு இவ்வாறு சாப்பிடலாம்.
தோல் வியாதி(எக்சிமா)
முழங்காலுக்குக் கீழே உள்ள படை, தண்ணீர் வடிதல்
சிகிச்சை முறை
இரவு படுக்கைக்குச் செல்லுமுன் கீழ்க்கண்ட மருந்தை முழங்கால்களில் பூசி பூவரச இலையால் மூடி, துணியைச் சுற்றிக் கட்டி விட வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் உத்தமக்குளியல் குளிக்கும் போது பயத்தமாவு அல்லது அரைப்புத்தூள் போட்டு அதைத் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கட்டி, சூடத் தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும்.
கட்டிச் சூடத் தேங்காய் எண்ணெய்த் தயாரிப்பு:
200 கிராம் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் கட்டிச் சூடத்தைப் போட்டு, வெய்யிலில் 10 நாட்கள் காலையில் இருந்து மாலை வரை வைத்து எடுக்கவும்.இந்த எண்ணெயைக் குளித்துவிட்டு நன்றாக ஈரம் போகத் துவட்டி விட்டுத் தடவவேண்டும்.
மருந்து:
பூவரசம் பழுப்பு இலை, 2 கைப்பிடியளவு, 4 கஸ்தூரி மஞ்சள், இரண்டையும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதைச் சேர்த்து, நைஸாக அரைத்து, சேறு பதம் வரும்வரை கொதிக்க வைத்து, அதை இரவு படுக்கும் பொழுது எக்ஸிமாவில் கனமாகப் பற்றுப் போட்டுப் பூவரச இலையால் மூடித் துணியைச் சுற்றி வைக்கவும். ' யூரின் ' கிடைக்காவிட்டால் பச்சைத் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
பத்தியம்:
புளி, உளுந்து, நல்லெண்ணெய், கடுகு, பால், முட்டை, மாமிசங்கள், கத்திரிக்காய், கருவாடு, சேப்பங்கிழங்கு, பேக்கரி அயிட்டங்கள் இவை அனைத்தும் சேர்க்கக் கூடாது. மதியம் ஒரு வேளை மட்டும் கீரை, அதிகமான காய்கறிகள் கலந்து மோர்ச் சாதம் சாப்பிடவும். காலை இரவு பழங்கள் மட்டும் சாப்பிடவும். இருவேளையும் உத்தமக்குளியல் குளிக்கவும். வில்லவச் சாறு அல்லது கொத்தமல்லிக்கீர் இருவேளையும் சாப்பிடவும். பசி பொறுக்க முடியாவிட்டால் காலை உணவுக்கு வெந்தயதோசை, வெந்தயக்கஞ்சி, சாப்பிடலாம்.
இரை 48 நாட்களுக்கு இவற்றைக் கடைபிடிக்கவும். ஏதேனும் நொறுக்குத்தீனி சாப்பிட நினைத்தால் அவல், அவல்பொரி, அரிசிப்பொரி, பொரிகடலை, பட்டாணி, உப்புக்கடலை, இவற்றை சாப்பிடலாம்.
48 நாட்கள் இதைக் கவனமாகக் கடைபிடித்தால் ஆயுள் முழுவதும் இந்நோய் வராது.
வெண்குஷ்டம்
பத்தியம்
பத்தியம் மேற்கண்டவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மருந்து
மஞ்சள் கரிசலாங்கண்ணி, இந்தக் கீரையைக் காலை, மாலை, வெறும் வயிற்றில் சாப்பிடவும். சாம்பார், கூட்டுச் செய்தும் சாப்பிடலாம்.இரவுபடுக்கைக்கு முன் கரிசலாங்கண்ணி இலையை மருதாணிபோல் அரைத்து, அந்த வெள்ளை உள்ள இடத்தில் போட்டு காயவிட்டுப் படுத்துக் கொள்ளவும். மதியம் 10.30 மணியிலிருந்து 11.30 க்குள் அரைமணி நேரம் சூரியக்குளியல் குளிக்க வேண்டும். மெல்லிய பருத்தி ஆடை போட்டு தலையில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு, கண்ணுக்கு கருப்புத்துணி போட்டு, குப்புறப் படுத்து 20 நிமிடமும், மல்லாந்து 20 நிமிடமும் சூரியக் குளியல் குளிக்க வேண்டும். தினமும் ஒரு முறை செய்யவும். பாயில், அல்லது பலகையில் படுக்கவும்.
தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
வெல்லம், கருப்புக்கட்டி, சீனி எந்தவித இனிப்பும் கூடா.
இவற்றை ஒழுங்காகக் கடைபிடித்தால் ஆறு மாதத்தில் வெள்ளை மறைந்துவிடும். திரும்பவும் வராது. எப்போதுமே இவர்கள் மாமிசங்கள், இனிப்பு, இரவு உணவு இவற்றை விட்டு விட வேண்டும். இஃது ஓர் அனுபவ வைத்தியம்.
எமது இந்தச் சிகிச்சையால் 15 வருடங்களில் 30 பேர் குணமாகிவுள்ளனர். ஆசனத்தில் சர்வாங்காசனம், உரலாசனம், சூரிய நமஸ்காரம் செய்தால் வியாதி சீக்கிரம் குணமாகி விடும்.
முகத்தில் கருவளையம், கறுப்பு விழுதல், கரும்புள்ளி இவை இல்லாமல் முகம் பிரகாசமாய் ஒளிரச் சிகிச்சைகள்
பெண்களாக இருந்தால் எமது ஸ்நானப் பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தனியாக மஞ்சள் தேய்த்துக் குளிக்கவும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவும். மலச்சிக்கல் வராமல் இருக்கக் கீரைகள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் பல சிக்கலுக்குக் காரணம்.'
வேலிப் பருத்திச் சாற்றில், முல்தானி மட்டியைக் கலந்து, இரவு படுக்கைக்கு முன் பூசிக் கொண்டு, காலையில் கழுவி விட வேண்டும். மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யவும். கரும்புள்ளி, கறுப்பு, முகப்பரு மறைந்து விடும்.
இரவு முழுவதும் பூச முடியாவிட்டால் 2 மணி நேரம் பூசி, காயவிட்டுப்பின் கழுவிக் கொள்ளலாம். எண்ணெய்ப் பசையற்ற முகமாக இருப்பவர்கள் குளிப்பதற்கு முன்னதாக எலுமிச்சைச் சாறு முகத்தில் தடவி, பயத்தமாவு அல்லது கடலை மாவு தேய்த்துக் குளிக்கவும். இவர்கள் எப்பொழுதும் முகத்திற்குச் சோப்புப் போடக் கூடாது! குளித்தவுடன் 2 சொட்டுத் தேங்காய் எண்ணெய், 4 சொட்டுத் தண்ணீர் உள்ளங்கையில் வைத்துச் சூடு பறக்கத் தேய்த்து முகம், கழுத்து, காது, கைகளில் தடவிக் கொள்ள வேண்டும்.
இவர்கள் சர்வாங்காசனமும் சிரசாசனமும் தவறாமல் செய்தால் எல்லாச் சுரப்பிகளும் வேலைசெய்யும். தோலுக்கு எண்ணெயைச் சப்ளை செய்யக்கூடிய சுரப்பி வேலை செய்கிறது. இதற்க்கு நிரந்தரத் தீர்வு எல்லாம் ஆசனங்களும் செய்வதுதான் சரி. முடியாதவர்கள் இருந்தால் வாரத்தில் ஓர் நாள் எண்ணெய் தேய்த்து க் குளிக்கவும்.
0 Comments