Ad Code

Free & Affordable Price Canva Editable Template

Recent Posts

Responsive Advertisement

Drinking Water:தண்ணீர் அதிகமாக குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா!...


View This Image



Benefits of Water:குடிநீர் மனித வாழ்விற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். நீர் இல்லாமல் மனித உயிர் மட்டும் இல்லாமல்  எந்த உயிரினத்தாலும்  நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது. உடலின் சீரான செயல்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் தினசரி தூய்மையான குடிநீர் அவசியம் ஆகுகிறது. குடிநீர் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துவது, செரிமானத்தை எளிதாக்குவது, நச்சுகளை வெளியேற்றுவது போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்கிறது. எனவே நாம் பருகும் நீர் சுத்தமானதும், கிருமி இல்லாததுமாக இருக்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் தூய குடிநீர் பற்றாக்குறை  பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதால், கிடைக்கும் குடிநீரை சூடாக்கி குடிப்பது உடலுக்கு சிறந்ததாக இருக்கும்.

சுடுநீரின்(Hot Water) பயன்கள்:

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர்  குடிப்பது உடலுக்கு பல விதங்களில் நன்மைகள் தருகின்றனர். செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் செய்கின்றனர். மேலும்,இரத்த ஓட்டம் சீராகி, இதய ஆரோக்கியமும்  மேம்படுகிறது. தோலில் உள்ள கழிவுகள் நீங்குவதால் முகம் பிரகாசமாகி, முகப்பரு போன்ற பிரச்சினைகலும் குறைகின்றனர். தொண்டை வலி, மூக்கடைப்பு மற்றும் சளி போன்றவற்றை குணப்படுத்தவும் செய்கின்றனர்.உடலினுள் ஏற்படும் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி, சோர்வை குறைத்து, புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதனால் தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு சுடுநீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.

மனித உடலில் சுமார் 60% முதல் 70% வரை நீரால் உருவாகியுள்ளது. உயிரணுக்கள், தசைகள், உள் உறுப்புகள் அனைத்தும் சரியாக செயல்பட நீர் மிகவும் அவசியம்.நீர் அருந்துவது உடலுக்கு மட்டும்  அல்ல, அழகு பாதுகாப்புக்கும் சிறந்ததாகும். நீர் அருந்துவதால் சருமத்தின் இளமை தோற்றத்திற்கு கிடைக்கும் முக்கியமான நன்மைகளை பற்றி கீழே விரிவாகப்  பார்க்கலாம்.

நீர் அருந்துவதால் கிடைக்கும் அழகு நன்மைகள்:


  1. சருமத்தை ஈரமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். குறிப்பாக,சருமம் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.
  2. நீரும் விஷப்பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பதால் முகத்தில் பிம்பிகள் போன்ற பிரச்சனைகள் வருவதை முற்றிலுமாக தடுக்கின்றனர்.மேலும் நீர் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் முகம் பளபளப்பாகவும், எப்போதும் இயற்கையான பொலிவுடனும்  காணப்படும்.
  3. நீரும் வயதை தள்ளிப் போடுகின்ற இயற்கையான வழிகளில் ஒன்றாகும். இது சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் சுருக்குக் கோடுகள் வருவதைக் குறைக்க உதவியாக இருக்கின்றனர்.
  4. முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீர்  சீராக செல்ல உதவுகிறது.
  5. உதடுகள் மற்றும் கண்கள் ஈரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.பல் பிரச்சனைகள் இயற்கையாகவே சரியாகும்.

நீர் குடிப்பதை அதிகப்படுத்துவது  இயற்கையான அழகு பராமரிப்பின் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உடலினுள் ஏற்படும் நன்மைகள்:

நீரிழைப்பு தவிர்க்க தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்கவும்:

நீரிழைப்பு உடலில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது உருவாகும் நோய்யாகும். இது சருமம் உலர்தல், தலைவலி, சோர்வு, செரிமான குறைபாடு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். இதனை தவிர்க்க, தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஒரு நாளில் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் (சுமார் 2.5 லிட்டர்) தண்ணீர் குடிப்பது உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது. 

நச்சு வெளியேற்றம் (Detoxification):

மனித உடலில் தினமும் உணவு, காற்று மற்றும் வேதிப் பொருட்கள் மூலம் பல்வேறு நச்சுப் பொருட்கள் சேரக் கூடும். இந்த நச்சுகள் உடலில் தேங்கியிருந்தால் சோர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீர் இந்த நச்சுகளை சிறுநீர், வியர்வை மற்றும் மலம் வழியாக வெளியேற்ற செய்கினர்=செய்கின்றனர். சிறுநீரகங்கள் சரியாக செயல்பட நீர் தேவை.அதனால் போதுமான அளவு நீர் குடிக்கும்போது, உடலில் உள்ள கழிவுகள் ஒழுங்காக வெளியேறி, உள் உறுப்புகள் சுத்தமாக வைக்கப்படுகின்றன.

 உடல் மற்றும் தோல் செல்களுக்கு ஈரப்பதம் அளிக்கும்:

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சுறுசுறுப்பாக செயல்பட, போதுமான ஈரப்பதம் தேவைப்படுகிறது. இந்த ஈரப்பதத்தை வழங்கும் முக்கிய மூலமாக நீர் செயல்படுகிறது. தண்ணீர் குடிப்பதன் மூலம் செல்கள் அழுகாதிருக்கும், பசுமை மற்றும் புத்துணர்ச்சி நிலை பெறும். குறிப்பாக, நீர் சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, புதிய செல்கள் உருவாக்கும் முறையை ஊக்குவிக்கிறது. இதனால் தோல் மென்மையும், பளபளப்பும் பெறுகிறது. சருமம் வறண்ட மற்றும் சுருங்கிய தோற்றமின்றி இளமையாக இருக்கும். அதனால், தினமும் போதுமான அளவு நீர் குடிப்பது, தோல் மற்றும் உடல் செல்களின் ஈரப்பதத்தை பராமரித்து, ஆரோக்கியமான இயற்கையான  தோற்றத்தை அளிக்கிறது.

மூளை செயல்பாடுகளை தூண்டும்:


மூளையின் சுமார் 75% நீரால் உருவாகியுள்ளது.நீர் குடிப்பதன் மூலம் மூளைக்கு சீரான இரத்த ஓட்டம்  சென்று  ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றனர். இது மூளைச் செல்களின் செயல்திறனை அதிகரிக்கிறது. மேலும், நீர் மூளையின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க, தகவல்களை தெளிவாக யோசிக்கவும், தீர்வுகளை எளிதாகக் கண்டுபிடிக்கவும் உதவுகிறது. மேலும், உடலில் போதுமான அளவு நீர் இல்லாதபோது, மூளையின் செயல்பாடு குறைந்து, கவனக் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு, மன அழுத்தம், மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகள் வரலாம்.  இதனை தவிர்ப்பதற்காக காலையில் விழித்தவுடனே வெந்நீர் குடிப்பது மூளை சுறுசுறுப்பை அதிகரிக்கும்.வேலை நேரத்திலும் அல்லது படிப்பு நேரத்திலும் இடைவேளையில் சிறு சிறு அளவில் நீர் குடிப்பது மூளை தெளிவாக செயல்படுதற்கும் உதவியாக இருக்கும். 

செரிமானத்திற்கு உதவும்:


காலை நேரத்தில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது, செரிமான உறுப்புகளை செயல்பாட்டுக்கு தூண்டி, பசியை ஊக்குவிக்கும். உணவிற்கு முன் அல்லது உணவுக்குப் பிறகு சரியான நேரத்தில் நீர் குடிப்பதன் மூலம், உணவின் ஊட்டச்சத்துக்கள் நன்கு உடலில் உறிஞ்சப்படுகின்றன. நீர் குடிக்காமல் இருந்தால், செரிமானம் சோம்பலாகி, உணவு முழுமையாக விழுங்கப்படாமல் வயிற்று அழுத்தம், வாயுக் குளிப்பு போன்ற பல பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

மூட்டு மற்றும் தசைகளுக்கு திரவ ஊட்டம் கொடுக்கும்:


மூட்டுகள்"Synovial fluid" எனும் திரவத்தால் பாதுகாக்கப்படுகின்றன. இந்த திரவத்தின் முக்கிய கூறு நீர் ஆகும். போதுமான நீர் உடலில் இல்லாதபோது, மூட்டுகள் உலர்ந்து வலி ஏற்படும்.அதேபோல், தசைகளும் நீர்சத்து இல்லாதபோது சோர்வடையக்கூடும், கம்பி பிடிப்பும் ஏற்படலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு நீர் குடிப்பது, தசைகளில் திரவ சமநிலையை பராமரித்து, மீளச்சேர்க்கையை (recovery) வேகமாக செய்ய உதவுகிறது. நீர் தசைகளுக்குள் ஊட்டச்சத்துக்களை கொண்டு சென்று, அவற்றின் இயக்கத்தை வலுவூட்டுகிறது. எனவே, சீரான மூட்டு இயக்கம், வலுவான தசைகள் மற்றும் தசை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாமல் இருக்க நீர் அவசியம் குடியுங்கள். மூட்டு மற்றும் தசைகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். 

நீர் அருந்தும் சிறந்த முறைகள்:


நீரை சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் குடிப்பது மிகவும் அவசியம் ஆகுகிறது.கீழே நீர் அருந்தும் சிறந்த முறைகளை பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

  1. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடு நீர்() குடிக்கவும்.காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலை டிடாக்ஸ் செய்து செரிமானத்தை தூண்ட செய்யும்.
  2. நீர் குடிக்கும் போது இடைவெளி விட்டு விட்டு குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகம் குடிப்பதை விட, நாள் முழுவதும் சிறிது சிறிதாக குடிப்பது சிறந்தது.
  3. உணவுக்கு முன் 30 நிமிடத்திற்கு  முன்பு நீர் குடிக்கவும். இது பசியை தூண்டும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
  4. உணவுக்குப் பிறகு உடனே அதிக நீர் குடிக்க வேண்டாம். உணவுக்குப் பிறகு 30-45 நிமிடங்களுக்குப் பிறகு குடிப்பது சிறந்தது.
  5. உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் நீர் குடிக்கவும்.இது தசை சோர்வை தடுக்கும் மற்றும் ஈரப்பதத்தை மேம்படுத்தும்.
  6. வெப்பமான காலநிலையில் கூடுதல் நீர் குடிக்கவும்:அதிக வியர்வை வரும் காலங்களில் நீரிழைப்பு அதிகம் ஏற்படும்.
  7. வெப்பம் கொண்ட நீரை விரும்புங்கள்.தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தால் உடலுக்கு எளிதாக உறிஞ்சப்படும்.
  8. பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்கவும்.பாட்டில்களில் நீர் சேமிப்பதைவிட கண்ணாடி அல்லது ஸ்டீல் பாட்டில்களை பயன்படுத்துவது நல்லது.
  9. நீர் குடிக்க நினைவூட்டும் பழக்கங்களை உருவாக்கவும். அதற்கென்று ஒரு பாட்டிலை  வைத்துக்கொண்டு அடிக்கடி குடிக்கும் பழக்கத்தை வளர்க்கலாம்.
  10. காய்கறி, பழ வகைகள், சூப் மூலமாக நீர் சேர்க்கவும். நேரடியாக நீர் குடிப்பதோடு, நீர் சத்து உள்ள உணவுகளையும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நீர் குடிப்பது ஒரே நேரத்தில் அல்ல, ஒருநாளில் பரவலாகவும், தேவைக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். இது உடலின் சக்தி, அமைதி மற்றும் ஆரோக்கியத்தையும் வளர்க்கும்.



Post a Comment

0 Comments

Responsive Ad

Free & Affordable Price Canva Editable Template

Ad Code