Recent Posts

🎨 The Ultimate Coloring Book Bundle || Offer Today Only

700+ Coloring Pages || ₹400 || Affordable Price & High Quality

Download Now

Knee Pain:மூட்டு வலினால ரொம்ப கஷ்டப்படுறீங்களா???இந்த பதிவு உங்களுக்கு தான்!...


View This Image




Health Care Tips:வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாரையும் பாதிக்கிற இந்த முதுகுவலி எதிர்பாராத நேரத்தில் வருகிற திடீர் விருந்தாளி மாதிரி எப்போது வேண்டுமானாலும் வரும். இதனை சரியான முறையில் கையாண்டால் முதுகு வலியை துரத்தி விட்டு விடலாம்.கீழே அதற்க்கான தெளிவான விளக்கங்களை பார்க்கலாம். வாருங்கள்!...

வலிக்கான காரணங்கள்:


முதல் காரணம் உட்கார்கிற, நிற்கிற நிலை, எப்போதுமே முதுகு வளையக் கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய வேலை என்றால் உங்கள் இருக்கை. முதுகுக்கு சப்போட்டாக இருக்க வேண்டும். அடி முதுகை ஒட்டினாற் போல ஒரு குஷன் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கொரு முறை ஓய்வு அவசியம். 

அடிக்கடி டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள்? அதுகூட முதுகு வலியை உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மன உளைச்சல் முதுகு மற்றும் கழுத்துத் தசைகளின் ஒருவிதப் பிடிப்பை உண்டாக்கி, முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முதுகெலும்பு தசைகளில் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. விளைவு? லேசாக குனிந்தால் கூட உயிர் போகிற அளவுக்கு முதுகுவலி! தீர்வு என்ன? தியானம் செய்யுங்கள். யோகாவும் பலன் தரும். எடுத்த எடுப்பிற்கெல்லாம் டென்ஷனாவதைத் தவிர்த்து, ரிலாக்ஸ்டாக  இருங்கள்.

நாம் செய்கிற எல்லாம் வேலைகளுக்கும் நிமிடத்துக்கொரு முறை முதுகைப் பயன்படுத்துகிறோம். நம்மையும் அறியாமல் ரொம்பவும் குனிந்து எடுக்கிற மாதிரியோ அல்லது மேலே எம்.பி எடுக்கிற மாதிரியோ உங்கள் சமையலறையில் எதையும் வைக்காதீர்கள். சமைக்கிற, பாத்திரம் தேய்க்கிற மேடைகள் சரியான உயரத்தில் இருக்கட்டும். படுக்கையில் படுத்திருக்கிற நிலையில், ஒரு பக்கத்திலிருந்து அடுத்து பக்கத்திலிருக்கும் பொருளை எடுக்க உடம்பை வளைக்காதீர்கள். படுக்கையில் விழும் முன்பாக, சில நொடிகள் நடக்கலாம். முதுகு வலியோடு படுக்கைக்குப் போவதை இது சரிபடுத்தும். 

முதுகு வலி அதிகமானால் முழு ஓய்வு அவசியம் என்பது பரவலான கருத்து, ஆனால் இது மிகவும் தவறானது என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள். வலியின் தீவிரம் குறைகிற வரை படுத்து ஓய்வெடுக்கலாமே தவிர, நாட்கணக்கில் ஓய்வென்பது எதிர்மறையான பலன்களையே தரும்.  முதுகு தசைகள் இறுகி, பலவீனமும் அதிகரிக்கும். முதுகுப் பகுதியானது எப்போதும் இயக்கத்தில் இருக்க வேண்டியது. சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு வலி சீக்கிரமே குணமடைகிறது.

அதிக எடையைத் தூக்குவது கூட முதுகு வலியை ஏற்படுத்தும். அதே மாதிரி மலச்சிக்கல். மலம் கழிக்கும் போது கீழ் முதுகின் தசைகள் அதிகம் அலை கழிக்கப்படுவதே காரணம்.

கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களுக்குமே முதுகு வழி இருக்கும். வயிற்றில் வளரும் கருவின் எடை கூட கூட, அது முதுகுக்கு அதிக அழுத்தம் உண்டாக்குவதே காரணம். முதுகெலும்பை சுற்றியுள்ள தசைகள் பலவீனமாக இருக்கிற போது  வலி தீவிரமடைகிறது. மாதவிலக்கு நாட்களிலும் சிலருக்கு இப்படிப்பட்ட வலி சாதாரணம். ஹார்மோன் மாறுதல்களும் உடம்பில் சேர்கிற தண்ணீருமே இதற்க்குக் காரணம் என்கிறார்கள்.

ரொம்பவும் மென்மையான படுக்கை அல்லது ரொம்பவும் அழுத்தமான படுக்கை இரண்டுமே உங்கள் முதுகைப் பதம் பார்த்துவிடும்.  முதுகுக்கு இதமான படுக்கையும் கழுத்துக்கு இதமான தலையணையும் மிக முக்கியம்.


இறுக்கிப்  பிடிக்கும் ஜீன்சும், ஹை ஹீல்ஸ் செருப்பும் அணிபவரா நீங்கள்? உடலின் நார்மலான இயக்கத்தை முடக்கும் டைட் ஜீன்சும், தோற்றத்தை அழகாகக் காட்டுகிறேன். பேர்வழி என உங்கள் உடலின் எடையை முன்னுக்குத் தள்ளும் ஹை ஹில்சும் முதுகு வலிக்கு கியாரண்டி.

காய்கறிக் கூடையோ, குழந்தையோ எதையும் தூக்குகிற விதத்தில் தூக்க வேண்டும். முதுகை வளைத்து, இடுப்பைப் பின்னுக்குத் தள்ளித் தூக்கினால் முதுகு அம்பேல்! எப்போதுமே எந்த உடையுமே உங்கள் இரண்டு பக்கங்களிலும் சரி சமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்  கீழே விழுந்த பொருளை எடுக்க அப்படியே வில்லாக வளையாதீர்கள்.  கீழே உட்கார்ந்து எடுத்து பிறகு எழுந்திருங்கள். 

View This Image




கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடிக் குப்புறப்படுக்கவும். இது வலிக்கிற முதுகுக்கு இதமளிக்கும்.

வெந்நீர் மற்றும் ஐஸ் வாட்டர் இரண்டையும் வைத்துக்கொள்ளவும். இரண்டிலும் மாற்றி மாற்றி டவலை நனைத்து முதுகுக்கு ஒத்தடம் கொடுக்கச் சொல்லுங்கள். இருபது நிமிடங்கள் செய்யவும். 

வலி தீவிரமாகும் போது உடனடியாக இரண்டு பெரிய டம்ளர் நிறைய தண்ணீர் குடியுங்கள். 

மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வலி நீக்கும் மாத்திரைகள் அல்லது ஆயின்மென்ட்டும் உபயோகிக்கலாம். 

இரண்டு டீஸ்பூன் தேனில், அரை டீஸ்பூன் பூண்டு விழுது கலந்து தினம் இருவேளை சாப்பிட்டால் முதுகுவலிக்கு நல்ல பலன் தரும். 
  

Post a Comment

0 Comments