கர்ப்பப்பை புற்றுநோய்
உலகளவில் புற்றுநோய் ஆண்களை விட பெண்களுக்குத்தான் வருகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்(WHO) இத்தகைய பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் அதிகமாக வருவது செர்விக்ஸ் கேன்சர்தான்.
அதென்ன செர்விக்ஸ் கேன்சர்?
பெண்களின் கருப்பை நுழைவாசலில் வருகிற ஒரு ஆபத்துதான் செர்விக்ஸ் கேன்சர். பெண்களின் தொப்புகளுக்குச் சற்றே மேலிருக்கும் பெல்விஸ் பகுதியில்தான் இந்த உறுப்பு இருக்கிறது.
பெண்ணின் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் எல்லாம் இந்த செர்விக்ஸில்தான் நடைந்தேறுகின்றன. ஆம். இனிமையான தாம்பத்ய உறவுக்குப் பின்னால் கர்ப்பமடைதல். அவ்வாறு கருவில் உருவான அவளின் இன்னோரு உயிர் வெளி உலகத்திற்கு வந்து உதிப்பதும் அந்த செர்விக்ஸ் வழியாகத்தான். இது மட்டும்மல்ல. மாதவிலக்கு வெளியேறும் வழியான வஜினாவையும், கருப்பையையும் இணைக்கும் பாலமாகவும் செர்விக்ஸ்தான் செயல்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்தான் இன்று ஏராளமான பெண்களுக்குப் புற்றுநோய் வருகிறது.
செர்விக்ஸ் கேன்சர் வர காரணங்கள் என்ன?
ஆண், பெண் இருவருமே சுத்தமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பெண்களுக்கு மாதவிலக்கு என்கின்ற இயற்கை அம்சம் இருப்பதால் பெண் கூடுதலாகச் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமின்மைதான் பெண்ணிற்கு, இந்த புற்றுநோய் வர முதல் காரணம் ஆகும்.
டாய்லெட்டுக்களைச் சுத்தமாகப் பேணி பாதுகாப்பது அவசியம். சுகாதாரமற்ற கழிப்பறைகள் பெண்ணிற்க்குத்தான் அதிகம் தொந்தரவாக அமைகின்றன. பெண்களின் உறுப்பு இயற்கையாகவே எளிதில் கிருமி தொற்றும் வாய்ப்புடன் இருப்பதனால் அவர்கள் பாத்ரூம், டாய்லெட் சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். என்று வலியுறுத்தப்படுகிறது.
மாதவிலக்கு நாட்களில் பிரத்தேயேகமான நாப்கின்களை பயன்படுத்தாமல், பழைய புடவை துணிகளை பயன்படுத்துவதை அறவே ஒழிக்க வேண்டும். மறுபடியும் மறுபடியும் ஒரே துணியை பயன்படுத்துவதனால் தான் இது போன்ற கிருமித் தொற்றுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. புதிதாக துணிகளை வாங்கி நீங்களாகவே கூட நாப்கின் தயாரித்து பயன்படுத்தலாம்.
மிகவும் இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளுதல். தாம்பத்ய உறவுக்குப் பின்பு சுத்தத்தைக் கடைப்பிடிக்காமை போன்ற காரணங்கள் கூட செர்விக்ஸ் கேன்சர் வர காரணங்களாக உள்ளன. சரி, இந்த செர்விக்ஸ் பாதிப்பு இருப்பதை பெண்கள் சுய பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாமா?
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவு திருப்தியாக அமையாது. வலி இருக்கும். உடல் உறவுக்கு பின்னர் பெண்ணுக்குப் பீரியட்ஸ் சமயம் போல் ரத்தம் படலாம். தொடர்ந்து வெள்ளைப்படுதல், தூர்நாற்றத்துடன் பீரியட்ஸ் வெளியேறுதல், முதுகின் கீழ் தொடர்ச்சியாக வலி இருக்கும். இத்தகைய அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். மருத்துவரை அணுகினால் அவர் பாப்ஸ்மியர் மற்றும் பயாப்சி டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து உறுதி செய்வார். இந்த செர்விக்ஸ் கேன்ஸருக்கு இன்று நல்ல நவீன சிகிச்சைகள் வந்து விட்டன. வந்த பின்னர் அவதிப்படுவதற்குப் பதில் வரும் முன்னர் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா?


0 Comments