Ad Code

Responsive Advertisement

Recent Posts

Responsive Advertisement

பெண்களே!...கட்டாயம் பாருங்கள்.உங்களுக்கான பதிவுதான் இது...

View This Image



Uterine Fibroids:பெண்களுக்குக் கர்ப்பப்பை கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகம். கட்டிகள் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதுவும் இல்லை என்றாலும் குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.இதனால் பெண்களுக்கு மகப்பேறு இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சில பெண்களுக்குக் கட்டிகள் இருப்பது தெரியாமல் கர்ப்பமாக இருந்தால் அக்கட்டிகள் சிறிதாகி குழந்தை பிறந்த பின்பு சில வருடங்கள் கழித்து மீண்டும் பெரிதாக வளரும் தன்மையுடையதாக இருக்கும். ஈஸ்ட் ரோஜன் அதிகம் சுரக்கும் போது கட்டிகள் உருவாகும். 

அறிகுறிகள் என்னென்ன?

  1. அதிகம் இரத்தம் வீணாகும்.
  2. கர்ப்பப்பை மற்றும் ஒளி(ஓவரி) உள் பாகத்தில் வீக்கம். 
  3. பல இடங்களில் சிறு கட்டிகளாகக் கர்ப்பப்பையின் உள்பாகத்தில் வீக்கம்.
  4. ஒரே ஒரு பெரிய கட்டியாகவும் உருவாகும்.
  5. பாலிப் என்ற கட்டிகளும் சர்விக்ஸ் என்ற பாகத்தில் வரும் பொழுது அதிக அளவில் ரத்தப் போக்கு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

கர்ப்பப்பை கட்டிகளின் தன்மை

சில சமயங்களில் கர்ப்பப்பையே பெரிய அளவில் வளர்ந்து கட்டியாக மாறிவிடும். இதற்கு அடினோமையோசிஸ் என்று பெயர்.இந்தக் கட்டிகள் வளரும்போது பல மாற்றங்கள் தென்படும். முக்கியமாக நுண்கிருமிகள்  தாக்கும். சில கட்டிகள் இடமாறி திரும்புவதால் அப்பகுதிக்கு வரும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் அதிகவலி உண்டாவது மட்டுமல்லாது, அழுத்தம் நிலை உருவாதல், மற்ற பாகங்களில் அதாவது குடல், அடிவயிற்று பாகம், சிறுநீர்ப்பை போன்ற இடங்களில் ஒட்டிக் கொள்வதால் மாதவிடாய் இருக்கும்பொழுது அளவில்லாத வலியை உண்டாக்கும்.

கர்ப்பப்பை கட்டிகள் இருப்பதால் ஏற்படும் பிரச்சனை

  1. அதிக அளவு ரத்தப்போக்கு(மாதவிடாய்க் காலங்களில்)
  2. மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மாதவிடாய் ஆகுதல் 
  3. அடிவயிற்றுப் பாகத்தில் அதிக வலி உண்டாகும்.
  4. வயிற்றில் கட்டிகள் தென்படும் 
  5. கர்ப்பப்பை கட்டிகளால் அடிவயிற்று பாகங்களில் அளவுக்கு அதிகமான எடை உண்டாக்கும்.
  6. கர்ப்பமாக இருப்பவர்களுக்குக் கருச்சிதைவு ஏற்படும்.
  7. சுரப்பிகளில் ஈஸ்ட்ரோஜன் என்ற சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் சில சமயம் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

கட்டிகளைக் கண்டறிவது எப்படி?

மாதவிடாய் ஏற்படும்பொழுது மேலே கூறிய ஏதேனும் ஒரு அறிகுறி உண்டாகுமேயானால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். பின்னர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தால் எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சை பெறலாம். குழந்தை பெரும் வயதில் கட்டிகள் வந்தால் அதை வீடியோ லேப்ரஸ்கொபி மூலமாக அல்லது இஸ்ட்ரோஸ் கோப்பி மூலமாக எளிதில் அகற்றலாம். 

View This Image



குழந்தைகள் பெற்றபின் உண்டாகும் கர்ப்பப்பை கட்டிகளை வீடியோ லேப்ராஸ்கோபி மூலம் கர்ப்பப்பையையோ அல்லது கட்டிகளை மட்டுமோ எளிதில் அகற்றி விடலாம் மற்றும் Ultra Sound Scalpel அல்லது லேசர் முறையை உபயோகித்து துல்லியமாக அகற்றி விடலாம்.

கடந்த 15 ஆண்டுகளாக நம் நாட்டில் லேப்ராஸ்கோபி சிகிச்சை முறை கையாண்டு வரப்படுகிறது. பழமையான ஓப்பன் சர்ஜரி செய்யும் பொழுது மிகுந்த அளவில் ரத்த சேதம் ஏற்படும். பல நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அதிக வலி உண்டாகும். அதிக நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். அதனால் அன்றாட இதர வாழ்க்கை பாதிக்கும். அதனால் லேப்ராஸ்கோபி சிகிச்சை முறையில் செய்து கொள்வது பாதுகாப்பானது. இதனால் பின் விளைவுகளைத் தவிர்க்கலாம். கர்ப்பப்பை கட்டிகளை ஒரு போதும் மாத்திரையினாலோ அல்லது மூலிகையினாலோ கரைக்க முடியாது. லேப்ராஸ்கோப்பி சிகிச்சை தகுதி பெறாதவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய கட்டிகளை எலக்டிவ் யூடிரின் ஆர்டரின் எம் போலைஜேன் என்ற முறையில் கட்டிகளின் அளவை குறைத்து பின்னர் அதை எளிதில் அகற்றி விடலாம். 

       


Post a Comment

0 Comments

Women

Responsive Advertisement

Ad Code

Responsive Advertisement