Narai Mudi Karumaiyaga Tips in Tamil: நரைமுடி பிரச்சனைக்கு இதை மட்டும் பண்ணுங்க!...

 

View This Image





Permanent White Hair Solution:இளநரை (அதாவது முடி வெண்மை ஆகத் தொடங்குவது) இளம்வயதிலேயே அனைவர்க்கும் வந்துவிடுகிறது.இந்நிலை எதனால் வருகிறது என்று தெரியுமா? மரபு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இதனை முற்றிலுமாக தடுக்க முடியாது என்றாலும், சில வீட்டு முறை வைத்தியங்கள் மூலம் முடி கருமையாகும் தன்மையை பேணவும், புதிய இளநரை வருவதை தாமதப்படுத்தவும் முடியும்.

கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு முறை வைத்தியத்தை எல்லோருமே பயன்படுத்தலாம். இது தலைமுடி ஆரோக்கியமாக முடி வளர்ச்சிக்கு எளிய டிப்ஸ்(Hair Growth) இருக்க உதவி செய்யும். இளநரை பாதித்தவர்களுக்கு இதனை தொடர்ந்து செய்யும் போது கண்டிப்பாக பாதிப்பு குறையும்.(முக்கியம்:தொடர்ந்து பயன்படுத்துதல்)

நீர்ச்சத்து நிறைந்த பழக்கங்கள் மற்றும் காய்கறிகள்:

பழங்கள்:

  1. தர்பூசணிப் பழம் - 91%தண்ணீர் 
  2. தக்காளி - 94%தண்ணீர் 
  3. ஸ்ட்ராவ்பெர்ரி - 91%தண்ணீர் 
  4. கிர்னிப் பழம் - 90%தண்ணீர் 

காய்கறிகள்: 

  1. வெள்ளரிக்காய் - 96% தண்ணீர் 
  2. முட்டைகோஸ் - 96% தண்ணீர் 
  3. முருங்கைக்காய் - 95% தண்ணீர் 
  4. குடைமிளகாய் - 94%தண்ணீர் 
  5. கீரைகள் - 92%தண்ணீர் 
  6. ப்ரோக்கோலி - 90%தண்ணீர் 
  7. சிவப்பு முள்ளங்கி - 95%தண்ணீர் 
  8. சுரைக்காய் - 95%தண்ணீர் 

தினமும் குறைந்தது 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.மேலே குறிப்பிட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் அல்லது உணவிலும் சேர்த்துக்கொள்ளுங்கள்.தொடர்ந்து சாப்பிடும்போது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் தலைமுடி நரையில் இருந்து கருமை நிறத்திற்கு மாறும்.

இளநரையை குறைக்கும் வீட்டு முறை வைத்தியங்கள்:

நெல்லிக்காய், மருதாணியுடன் கடுகு எண்ணெய் பயன்படுத்துதல்:

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி சுத்தமான தேங்காய் எண்ணையில் கலந்து கொதிக்கவிட்டு இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். 

மருதாணி இலைகளை காம்பு இல்லாமல் சுத்தம் செய்து ஈரமில்லாமல் கடுகு எண்ணெயில் லேசாக சூடாக்கி இந்த எண்ணையை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணெய் வைத்தியம்:

10–15 கருவேப்பிலை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஆம்லா சாறு அல்லது அதன்  பவுடர் போன்றவற்றை சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி, குளிர்ந்த பிறகு முடியில் தடவவும்.முடி வேர் வலுப்பெற்று, வெண்மையான முடி குறையச் செய்யும்.கருவேப்பிலை முடியின் இயற்கை நிறத்தை பாதுகாக்கும் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.ஆம்லா வைட்டமின் சி நிறைந்தது என்பதால் முடி கருமையாகவும் வலுவாகவும் வளர உதவி செய்யும். தினமும் ஆம்லா ஜூஸ் குடிப்பது அல்லது ஆம்லா காய்ந்த துண்டுகளை சாப்பிடுவது முடியின் வளர்ச்சிக்கும் Silky and Straight Hair Care அதன் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

பால் வைத்தியம்:

1 கப் பால், 1 டேபிள்ஸ்பூன் எள்ளெண்ணெய்,1 டீஸ்பூன் காபி பவுடர்,2 டேபிள்ஸ்பூன் ஹென்னா ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று கலவையாக சேர்த்து கொண்டு குளிக்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தடவுங்கள் .சிறிது தண்ணீர் அல்லது தேங்காய் பாலும் சேர்க்கலாம்.

தலை முடி ஆரோக்கியமாக வளர உணவில் சேர்க்க வேண்டியவை:

இரும்பு, துத்தநாகம், செம்பு நிறைந்த உணவுகள்: 

எள்ளு, நெல்லிக்காய், பட்டாணி, வேர்க்கடலை, பசலைக்கீரை போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்.

புரதம் நிறைந்த உணவுகள்: 

முட்டை, பால்,  தயிர்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்.

வைட்டமின் B12: 

மீன், மாமிசம், பால், தயிர்


க்ரீன் ஜூஸ்(Green Juice)

வாரத்திற்கு மூன்று முறை  க்ரீன் ஜூஸ் பருகலாம். நரை முடி பஞ்சாய் பறந்து போய் விடும்.  கீழே க்ரீன் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்று விரிவாகப் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:

  • நெல்லிக்காய் - 2
  • வெள்ளரிக்காய் - 6 பிஸ் 
  • இஞ்சி - ஒரு துண்டு 
  • மிளகு - 3
  • கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு 
  • எலுமிச்சைக்காய்- பாதி 

செய்யும் முறை:

முதலில், நெல்லிக்காய்,வெள்ளரிக்காய்,கொத்தமல்லி, புதினா  மற்றும் இஞ்சியை  சிறியது சிறிதாக  வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெட்டி வைய்த்ததை மிஸ்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்ததுடன் பாதி எலுமிச்சைக் காய் மற்றும் மிளகு சேருங்கள். அவ்வளவுதான் ஆரோக்கியமான க்ரீன் ஜூஸ் ரெடி. வாரத்திற்கு மூன்று முறை இந்த க்ரீன் ஜூஸ் குடியுங்கள். ஒரு மாதத்தில் தலைமுடி அடர்த்தியாக இருப்பதுடன் கரு கருவென்று முடி மாறிவிடும்.

தலைமுடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும் செயல்களை தவிர்க்கவும்:

மனஅழுத்தம் (Stress)நீண்டகாலமாக நீடித்தால், தலைமுடியின் ஆரோக்கியத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மனஅழுத்தத்தின் போது உடலில் கார்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் அதிகரிக்கும். இது தலைமுடி மூட்டுகளின் வளர்ச்சியின் சுழற்சியை மாற்றி, தலைமுடி உதிர்வை (Hair fall) அதிகரிக்கிறது. சில நேரங்களில், இது தலைமுடியை முன்கூட்டியே நரைப்படுத்த செய்யும். குறிப்பாக ரத்த ஓட்டம் குறைந்து, தலைமுடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும்.இதனை தவிர்க்க தினமும் குறைந்தது 15–30 நிமிடங்கள் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்ய வேண்டும். போதுமான தூக்கம் (7–8 மணி நேரம்) எடுப்பது மனதிற்கும் உடலிற்கும் ஓய்வளிக்கும். சத்தான உணவு, குறிப்பாக முன்பு சொன்னது போல்  புரதம், இரும்பு, மற்றும் வைட்டமின் பி  சேர்ந்த உணவுகள் தலைமுடி பாதுகாப்பிற்கு பெரிதும் உதவும்.மது புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர், மனநிறைவு தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், மற்றும் நேர்மறையான சிந்தனை வளர்த்தல் ஆகியவை மனஅழுத்தத்தை குறைத்து தலைமுடி ஆரோக்கியத்தை ஹேர் கலரை நீக்க இதை செய்யுங்க வலுப்பெற செய்யும்.

கேமிக்கல் பொருட்களை தவிர்க்கவும்:

அதிகமான ஹேர் டை, ஹேர் ஸ்ப்ரே, ஹேர் ஜெல் போன்ற கேமிக்கல் பொருட்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து செய்யுங்கள்.

நரைமுடி ஒருவரின் அழகையோ மதிப்பையோ குறைக்கும் ஒன்றல்ல. நரையுடன் வாழ்வதற்கும் அதைக் கொண்டே அழகாகத் தோன்றுவதற்கும் நம்மிடம் தன்னம்பிக்கையும், நேர்மறையான மனப்பான்மை + இருக்க வேண்டும். நரைமுடி வந்துவிட்டதாக மனம் உடையாமல், அதை வைத்து அலங்கரிக்கவும், இயற்கையான பராமரிப்புகளை கடைபிடிக்கவும் செய்ய வேண்டும். 

பெண்களும் ஆண்களும் தங்களின் தனித்துவத்தை, தங்கள் தோற்றத்தை அன்போடு ஏற்கும் போது, நரைமுடி கூட பெருமை குறியாக தோன்றும். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நம்மை நாமே நம்புவதே உண்மையான அழகு அதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்...