Aloe Vera: கற்றாழையை பற்றிய சில முக்கியமான தகவல்கள்...கட்டாயம் பார்க்கவும்!...


View This Image




கற்றாழை(Aloe Vera)

Aloe Vera Benefits in Tamil:ஆலிவேரா செடி மருத்துவ குணமுடைய சிறந்த செடியாகும். இதன் இலைகளில் உள்ள ஜெல் பல விதமான ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளை தரக்கூடியது. தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், பிம்பிள்ஸ்  மற்றும் சிரங்குகளை குறைக்கவும் ஆலிவேரா தண்டு பெரிதும் உதவியாக இருக்கிறது. சூரியகதிர்விற்றால்  ஏற்படும் வெப்பத்தை தணிக்கவும்,உடலில் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும் சிறந்ததாக இருக்கிறது.மேலும், தலை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், முடி உதிர்தலையும் தடுக்கவும் செய்கிறது. குறிப்பாக ஆலிவேராச்  சாறு செரிமானத்தை மேம்படுத்தி குடலை சுத்தம் செய்யவதுடன் உடலில் உள்ள அழற்சியை குறைக்கும் இயற்கை மருந்தாகவும் செயல்படுகிறது.  

காலை நேரத்தில் கற்றாழையை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

  1. காலையில் எழுந்ததும் கற்றாழையில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.இது கொழுப்பு மற்றும் கலோரியை எரிப்பதில் சிறந்தது. 
  2. உடலினுள் ஏற்படும் வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும்.
  3. குடல் மற்றும் கல்லீரலில் நச்சுக்களை நீக்குவது மட்டும் இல்லாமல் வயிற்றை சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
  4. சருமம் பளபளப்பாகவும் தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.
  5. தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழையை சாப்பிடுவதும் முடிக்கு பயன்படுத்துவதும் நல்ல பலன் கொடுக்கும்.


உடலின் உட்புற பாதுகாப்பில் கற்றாழை

மாதவிடாய் கால ஹார்மோன் சமநிலை:

மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஹார்மோன் சமநிலையில் இருக்காது. இந்த நேரத்தில்  ஹார்மோன்கள் கணிசமாக அதிகரிக்கும் அல்லது திடீரென குறையத் தொடங்கும்.இதனை தவிர்ப்பதற்காக கற்றாழையை சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கின்றனர்.

சீரான இரத்த சர்க்கரை அளவு:

உடலில் சாதாரண இரத்த சர்க்கரை அளவு குறைந்தபட்சம் 80 மி.கி  வேண்டும். அதிகபட்சம் 110 மி.கி இருக்கலாம்.இது பலருக்கு பெரும்பாலும் சமநிலையற்றதாக இருக்கும். இதை சரிசெய்ய  கற்றாழை சாற்றை சாப்பிட்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

கற்றாழையில்  ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் உடலின் நோய்யெதிர்ப்பு சக்தியை  மேம்படுத்துகின்றனர். தொடர்ந்து கற்றாழையை சாப்பிட்டு வந்தால் உடலினுள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

முகம் வறண்டு இருப்பவர்களுக்கான குறிப்பு தான் இது. முகத்தை பொலிவாகவும், வறட்டு தன்மையை நீக்குவதற்கும் ஆலிவேரா ஜெல் பெரிதும் உதவியாக இருக்கிறது.ஆலிவேரா ஜெல் கடைகளிலும் வாங்கலாம்.அதைவிட வீட்டில் செய்து பயன்படுத்தினால் இன்னும் நல்ல பலன் கொடுக்கும். ஆலிவேரா ஜெல்  எளிய முறையில் வீட்டிலே தயார் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • ஆலிவேரா தண்டு - 2
  • எலுமிச்சை சாறு - 1/2
  • வெள்ளரிக்காய் - 5
  • விட்டமின் இ கப்சுயூல்(Vitamin E Capsule)- 3 

செய்யும் முறை:

தாவரத்தில் இருந்து எடுத்த ஆலிவேரா தண்டை எடுத்து வரும்போது நொடித்த பகுதியில் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றம் அடிக்கும். துர்நாற்றத்தை போக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடத்திற்கு ஆலிவேரா தண்டை வையுங்கள். 30 நிமிடம் கழித்து ஆலிவேரா தண்டை எடுத்து தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.  பின், மிக்சி ஜாரில் தனியாக எடுத்துவைத்த ஆலிவேரா ஜெல்லையும், வெள்ளரித்துண்டையும் போட்டு மென்மையாக அரைத்து விடுங்கள். அரைத்ததை வெள்ளை நிறத்துணியில் போட்டு நன்கு பிழிந்துக் கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சை சாறு, விட்டமின் இ கப்சுயூல்(Vitamin E Capsule) அனைத்தையும் சேர்த்து ஸ்பூனால்() நன்கு  கிண்டி விடுங்கள். அவ்வளவுதான்  வீட்டுமுறை ஆலிவேரா ஜெல் தயார். இந்த ஜெல்லை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 5 நாட்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். 

விலையுயர்ந்த கெமிக்கல் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை ஆலிவேரா ஜெல்லை பயன்படுத்துவது முகத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகவும், இயற்கையான பொலிவோடும் இருக்கும்.


ஆலிவேரா ஜெல்லின் பயன்பாடு:

  • ஆலிவேரா ஜெல்லை சருமத்தில் மற்றும் தலை முடியில் நேரடியாகப் பயன்படுத்தலாம்.
  • குளிக்க செல்வதற்கு முன் தலை முடி மற்றும் முகத்திற்கு இந்த ஆலோவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். முடி வளர்ச்சி மற்றும் முடி சுத்தத்திற்கு ஹேர் மாஸ்காகவும் பயன்படுத்தலாம்.தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.

கவனத்தில் கொள்ளுங்கள்:

  1. முகத்தில் ஆலிவேரா ஜெல்லை பயன்படுத்தும் போது, ஒரு சிறிய பகுதியில் தடவி ஒருமுறை சோதனை செய்து கொள்ளுங்கள். பின் முகப் பகுதியில் தடவுங்கள். ஏனென்றால் முகத்தில் பயன்படுத்தும் போது சில சருமத்தின் வகைக்கு பொருந்தாது இருக்கும். 
  2. சர்க்கரை  நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய்க்கான மருந்து சாப்பிட்டதும் கற்றாழை சாப்பிடக் கூடாது. கற்றாழை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் அவர்களுக்குச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துபோக வாய்ப்புள்ளது.
  3. சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் போன்றவற்றிற்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கற்றாழையை எடுத்துக்கொள்ள வேண்டாம். கற்றாழை ரத்தம் உறைதலைத் தடுக்கும் திறன் கொண்டதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது. அதனால் மருத்துவரை ஆலோசித்த பிறகு கற்றாழையை சாப்பிடுவது சிறந்தது.
  4. நோய்களுக்கு மருந்து மாத்திரைகள்  எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், ஒவ்வாமை பிரச்னை உடையவர்கள் கற்றாழை சாப்பிட வேண்டாம்.

ஒருவரின் ஆரோக்கியமான  உடல்நிலையைப் பொறுத்து 1 - 6 வாரங்கள் வரை கற்றாழை சாப்பிடலாம். பிறகு ஓரிரு மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் தொடரலாம்.