Hair Care:தலை முடி குறைவாக இருக்கிறது என்று கவலையில் இருக்கிறீர்களா? இதை மட்டும் செய்து பாருங்க. முடி காடு போல் வளரும்!...


View This Image


Hair Care Tips in Tamil:பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதனால் தலை முடி கழிகிறது என்று தெரியுமா?உடல்நல குறைபாடுகள், மனஅழுத்தம், தவறான உணவுப் பழக்கம், ஹார்மோன் மாற்றங்கள், முறையற்ற தலை முடி பராமரிப்பு  போன்ற காரணங்களால் தான். இதனை சரிசெய்வது மிகவும் சுலபமான விஷயம் தான். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு இருந்தால் முடிக் கழிவதை எளிதில் வென்றுவிடலாம்.

தலைமுடி கழிவதற்கான முக்கிய காரணங்கள்:

ஹார்மோன் மாற்றங்கள் (Hormonal Imbalance):

பெண்களுக்கு கர்ப்பம், பிரசவம், ரத்தவிருப்பம் முடிவடைந்து போதல்(menopause) போன்ற நேரங்களில் ஹார்மோன் மாற்றம் வரலாம். அதனால் தலை முடி குறையலாம்.தைராய்டு (Thyroid) ஏற்படுவதாலும்  முடி உதிர்வு ஏற்படலாம்.

உணவுப் பழக்கங்கள் (Poor Nutrition):

உடலுக்குத் தேவையான புரோட்டீன், இரும்புச்சத்து (iron), சிங்க் (zinc), வைட்டமின்கள் (Vitamin D, B12) குறைவாக இருப்பதாலும்  முடி வளராது.

மன அழுத்தம் (Stress):

அதிகமான மனஅழுத்தம் கொண்டிருப்பவர்கள், கவலையால் அவதியுறுபவர்கள், துக்கம் தாங்காமல் இருப்பவர்கள் போன்றவை  கூட முடி உதிர்வை தூண்டலாம்.

மரபணு (Genetics):

குடும்பத்திலே உள்ளவர்கள் தந்தை மற்றும் தாய் முடி உதிர்வால் பாதிக்கப்பட்டிருந்தால், மரபாக அது பின்தொடரும்.அதனால் தலை முடி கழியலாம்.

தலை சரும சிக்கல்கள்:

பொடுகு,அழற்சி போன்ற தலைச்சரும நோய்கள் முடி வேரை பாதிப்பதால் தலைமுடி வளர்வதை முற்றிலுமாக தடுக்கிறது.

தலைமுடி பராமரிப்பில் தவறுகள்:

தலைமுடிக்கு அதிகமாக கேமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவது முடி கழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.தலைமுடிக்கு வெப்பம் அதிகமாக பயன்படுத்துவது (ஹேர் ட்ரையர், ஸ்டிரெய்ட்னர்) தலை முடி வளர்ச்சியை குறைக்கும்.தலைக்கு  சரியான பராமரிப்பு இல்லாமல் போவதாலும் முடி கழியலாம் .

தலைமுடிக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை:

வெந்தயம் (Fenugreek):

வெந்தயம், முடி உதிர்தலைத் தடுக்கும் சக்திவாய்ந்த  மருந்தாக இருக்கிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து, புரோட்டீன், நிகோட்டினிக் ஆசிட் மற்றும் லெசிதின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால்  இவை தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி வேர்களை வலுப்படுத்தவும் செய்கிறது. வெந்தயம் வறண்ட தலைமுடியை ஈரமாக வைத்து முடி உதிர்வை குறைக்கவும் செய்கிறது. 

முடிக்கு வெந்தய எண்ணெயும் வெந்தயக் குழம்பை சாப்பிடும் இவை இரண்டையும்  வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்துவது உடலுக்கும் தலைமுடிக்கும் மிக நல்லதாக உள்ளது. வெந்தயத்தில் உள்ள தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் தலையிலுள்ள தோலை சுத்தமாக வைத்து, பூஞ்சை தொற்றுகளை தடுப்பதோடு, புதிய முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து பின் காலையில் எழுந்து வெந்தயத்தை வாயில் மென்று சாப்பிடுவது சிறந்தது.இயற்கையான முறையில் முடி உதிர்தலை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் (Coconut Oil):


தேங்காய் எண்ணெய், தலை முடியை அடர்த்தியாகவும், கருமையாகவும் வைத்துக்கொள்வதில் சிறந்ததாக இருக்கிறதுஇதில் இருக்கும் லாரிக் ஆசிட், வைட்டமின் இ, மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு ஊட்டச்சத்து வழங்கி, முடி வேர்களை பலப்படுத்தி தலைமுடி உதிர்வதை தடுக்கும். 
தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து பின் சூடு குறைந்ததும்   வாரத்தில் 2–3 முறை தலை முடியில் நன்கு மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். மேலும், இது தலை தோலில் ஏற்படும் உலர்ச்சி, டேன்ட்ரஃப் மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும். இரவில் தேய்த்து மறுநாள் கழுவுவது சிறந்த பலனை தரும். இயற்கையான மற்றும் ரசாயனமற்ற தேங்காய் எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது, முடி பாதுகாப்பாக செயல்பட்டு, நீண்டகாலத்தில் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும்.

சின்ன வெங்காயம்(Shallots Onion):


சின்ன வெங்காயம், முடி உதிர்தலை குறைப்பதில் சிறந்ததாகும். வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் (Sulfur) உள்ளதால், முடி வேர்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வெங்காயச் சாறை  தலைமுடிக்கு மசாஜ் செய்தால், தலையில் இருக்கும்  தோலின் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. அதேசமயம், வெங்காயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் தன்மைகள், தலை தோலில் ஏற்படும் தொற்று, கொப்பளிப்புகளை  குறைக்கும். 

கருவேப்பிலை(Curry leaf):


கருவேப்பிலையில் இருக்கும்  வைட்டமின் ஏ, பி, சி, இ  மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள்  முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை தடுக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. கருவேப்பிலையை எண்ணெயில் கொதிக்க வைத்து அதை தலைமுடிக்கு தேய்த்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடி வளர்ச்சி ஊக்குவிக்கும். 
மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் தலை தோலில் உள்ள தொற்று மற்றும் கொப்பளிப்புகளை நீக்க உதவுகின்றன.மேலும் இது தலைமுடிக்கு ஈரப்பதம் வழங்கி, வறட்சியை குறைக்கும். வாரத்தில் இரண்டு  முறை கருவேப்பிலை பவுடரையை  தலை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் கட்டுப்படும் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். 

தயிர் (Curd):


தயிர், தலை முடியை மென்மையாக() வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், முடி உதிர்தலைத் தடுக்கும் ஒரு சிறந்த பொருளாகவும் இருக்கிறது.தயிர் உள்ள புரோட்டீன், கால்சியம், வைட்டமின் பி5 மற்றும் பாக்டீரியாக்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, வேர்களை வலுப்படுத்தும்.
மேலும், தலைமுடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து உலர்ச்சி மற்றும் கொப்பளிப்பை குறைக்கும். இதனால் தலைமுடி ஆரோக்கியமாக இருந்து, முடி உதிர்தல் குறைகிறது. வாரத்தில் 1 அல்லது 2 முறை தயிர் ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தினால், முடி மென்மையாகவும், வலுவாகவும் மாறும். தயிர்  இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.

வேப்பிலை (Neem Leaves): 


வேப்பிலையில் இருக்கும்  ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மைகள் தலைமுடியில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன. வேப்பிலை தலை தோலை சுத்தமாக வைத்துவிட்டு, முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வை குறைத்து, புதிய முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. 
வேப்பிலையை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை தலைமுடிக்கு குளிக்கவும் பயன்படுத்தலாம். வேப்பிலை விழுதாகவும், பவுடர் ஆகவும்  பயன்படுத்தலாம். இது கொப்பளிப்பை குறைத்து, தலை தோலில் ஈரப்பதம் தரும். வாரத்தில் 1–2 முறை இதைப் பயன்படுத்துவதால் முடி உதிர்வு கட்டுப்பட்டு, தலைமுடி ஆரோக்கியமாக வளரும். வேப்பிலை போன்ற இயற்கையான மருந்துகள் ரசாயனமின்றி பாதுகாப்பாக செயல்படுவதால், நீடித்த முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாகும். 

கத்தாழை (Aloe Vera):


கத்தாழை  உள்ள வைட்டமின்கள் ஏ, சி, இ  மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் தலைமுடி தோலை சுத்தமாக வைத்துக் கொள்கின்றன மற்றும் முடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. 
கத்தாழை ஜெல்லை நேரடியாக தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்; இது இரத்த ஓட்டத்தை தூண்டி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது. மேலும், இது கொப்பளிப்பு, உலர்ச்சி, மற்றும் அரிப்பை குறைத்து தலைமுடிக்கு ஈரப்பதம் வழங்குகிறது. வாரத்தில் 2 முறை கத்தாழை ஜெல் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையாக முடி பராமரிக்க விரும்பும் நபர்களுக்கு கத்தாழை சிறந்த தேர்வாகும்.

நீடித்த வளர்ச்சிக்கு என்றுமே வீட்டு முறை வைத்தியம் தான் சிறந்தது. இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால்  பாதுகாப்பானதாகவும் செலவு குறைவாகவும் இருக்கும். கீழே வீட்டு முறை மசாஜ் ஆயில் தயாரிப்பது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:


  • வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன் 
  • கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு 
  • செம்பருத்திப்பூ - 2
  • கருஞ்சீரகம்- 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம், கருவேப்பிலை, கருஞ்சீரகம் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பின் அதில் சுத்தமான தேங்காய் எண்ணெயை  ஊற்றி எண்ணெய் சூடாகும் வரை காத்திருக்கவும். பின் அதில் அரைத்து வைத்திருந்த வெந்தயம், கருவேப்பிலை, கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொண்டு அதனுடன் செம்பருத்திப்பூ சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். ஹேர் மசாஜ் ஆயில் தயார்.  தயாரான எண்ணையை ஒரு காற்று புகாத டப்பா அல்லது பாத்திரத்தில் ஊற்றி எண்ணெயை பயன்படுத்தவும். எண்ணெயை காய்த்த பிறகு செம்பருத்திப்பூவை எடுத்துவிடவும்.இந்த ஆயிலை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் முடி வளர்வதுடன் மட்டும்மில்லாமல் முடி  சில்கியாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வெந்தயம்,கருஞ்சீரகம், கருவேப்பிலை அரைத்து வைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கொடுக்கும்.