Young Age to Old Age Maintaining youthfulness: டீனேஜ் முதல் முதிர்வு வயதுவரை இளமையை தக்கவைக்க இதை மட்டும் செய்தால் போதும்!...


View This Image



Self-care routine:இளமையாக இருக்கும் போதே உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பாதி வயது கடந்த போது அதனுடைய சுயரூபத்தை  காட்ட ஆரம்பிக்கும்.இயற்கையான உணவு முறை, இயற்கையான சரும பராமரிப்பு, உடற்பயிற்சி,நடைப்பயிற்சி மற்றும் முச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் தோலை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளலாம். தோலை மட்டும் இல்லாமல் உடலின் உட்புறமும் பாதுகாப்பாக இருக்கும்.

சருமம் நம் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. டீன் ஏஜில் ஒரு மாதிரியும், அதைக் கடந்தது வேறு மாதிரியும் நடுத்தர வயதில் வேறு மாதிரியும் இருக்கும். அந்தந்த வயதிற்கேற்ப சருமத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். 

சருமத்தை இளம் வயது முதல் முதிர்வு வயது வரை பராமரிக்கும் வழிமுறைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம்.

டீன் ஏஜில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை:

காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் முகத்தை சுத்தமாகக் கழுவவும்.சூரிய கதிரின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாக்க  பகல் வேளைகளில் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். சருமத்திற்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ்பேக் உபயோகிப்பது நல்லது.கடலை மாவு, பாசிப்பயிறு பவுடர் முகத்திற்கு பேஸ்வாஸ் ஆக பயன்படுத்தலாம். பருக்கள் இருந்தால் ஆரம்பத்திலேயே தோல்  மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம், எண்ணெய்ப்  உணவுகளை ஒதுக்கிவிட்டு, பச்சை காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிடவும்.

இருபது வயதிற்கு மேல் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை:

மெல்லிய கோடுகளோ, சுருக்கங்களோ முகத்தில் தென்படுகின்றனவா எனப் பாருங்கள். வழக்கமான சருமப் பராமரிப்பைத் தொடரவும். அதாவது முன்பு சொன்னது போல் குறைந்தது மூன்று முறையாவது முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முகத்திற்கும் உடலின் உட்புற பாதுகாப்பிற்கும் இயற்கையானவைகளை பயன்படுத்துங்கள். குறிப்பாக, பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது, சாப்பாடு வீட்டில் செய்த சாப்பாட்டை சாப்பிடுவது போன்றவற்றை செய்ய வேண்டும். முகத்திற்கு வீட்டுமுறை பேஸ்பேக் மற்றும் கடலை மாவு, பாசிப்பயிறு போற்றவற்றை பேஸ் வாஸ் ஆக பயன்படுத்துங்கள். தூங்கச் செல்வதற்கு முன் முகத்திலுள்ள மேக்கப்பை நீக்கி சருமம் சுவாசிக்க வழி செய்யவும். அப்போதுதான் சருமம் சுத்தமாக இருக்கும். அழகு நிலையத்திற்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.செயற்கை அழகு முறை சீக்கிரமாக பலன் தரும். ஆனால் காலம் செல்ல செல்ல முகம் மோசமான நிலையில் காணப்படலாம். உடல் உபாதைகளால் கஷ்டப்படுவீர்கள். ஆனால் இயற்கை குறிப்பு முறை அப்படி அல்ல. நிறைய காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் நல்ல பலனைக் கொடுக்கும்.

முப்பது வயதிற்கு மேல் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை:

இந்த வயதில் முன்பை விட அதிகப் பராமரிப்பு சருமத்திற்கு முக்கியம். முக்கியமாக வெயிலின் பாதிப்பு சருமத்தைத் தாக்காமல் காக்க வேண்டும். அதிக வெப்பம் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி, முதுமையை உண்டாக்கும். வெளியில் இருந்து வந்ததும் குளித்து விடுவது நல்லது. இவ்வாறு செய்யும் போது உடம்பில்  மற்றும் முகத்தில் தங்கியிருக்கும் மாசுக்கள் நீங்கிவிடும்.பின் காய்ச்ச பாலை ஒரு காட்டன் பஞ்சில் துடைத்து முகத்தை துடைக்க வேண்டும்.இது முகத்தில் தேவையற்று இருக்கும் கிருமிகளை நீக்கி முகத்தை பொலிவாக வைத்திருக்கும். அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் முகத்திற்கு ஊற்றி நன்கு  ஸ்க்ரப் செய்யுங்கள். தினமும் காலை மற்றும் இரவு(தாமதமாக குளிக்க கூடாது. சளி தொற்றிக்கொள்ளும்) முன்பாக குளிக்க வேண்டும்.புத்துணர்ச்சி கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை ஃபேஷியல் செய்து கொள்ளவும். இது சருமம் தொய்வடையாமல் காத்து, சருமத்தின் ஆழத்தில் படிந்துள்ள  அழுக்குகளை அகற்றும். தினசரி இரவில் நைட் கிரீம் உபயோகிக்கவும். சருமத்தை வறண்டு போகவிட வேண்டாம். எப்போதும் மாயிச்சரைசர் தடவியபடி இருக்கவும். முகத்திற்கும், சாப்பிடுவதற்கும் இயற்கையானவைகளை பின்பற்றுங்கள்.

ஐம்பது வயதிற்கு மேல் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை: 

சருமம் அதிக மாறுதல்களை அடைவது இந்தப் பருவத்தில் தான். எண்ணெய்ப் பசையான சருமம் வறண்டுப் போகக் கூடும். மெனோபாஸ் காலமும் நெருங்குவதால் சருமப் பிரச்சனைகள் நிறைய வரும். அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முறையாக கவனிக்காவிட்டால் சுருக்கங்களும், கோடுகளும் முக அழகையே கெடுத்து விடும். பாலாடையால் மசாஜ் செய்வதும், தினசரி, இரவில் கிரீம் தடவுவதும் முதுமைத் தோற்றத்தைச் சற்றே தள்ளிப் போட உதவும். உடலின் வெளித்தோற்றத்திற்கு, உட்புற தோற்றத்திற்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை அறிந்து சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.இதனால் என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.


மேலும், பல அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகளைத் தெரிந்து கொள்ள இந்த வலைத்தளத்திற்கு செல்லவும் - BH Boss Tamil