Sugar diet: சர்க்கரையை உணவில் தவிர்ப்பதால் உடலுக்குள் ஏற்படும் மேஜிக்!...


View This Image






Sugar Cut Benefits:இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலரும் செயற்கை இனிப்புகள் மற்றும் அதிக சக்கரை உள்ள உணவுகளுக்கு அடிமையாகியுள்ளனர்.இந்தத் தவறான உணவுப் பழக்கம் காலப்போக்கில் உடலுக்குள் பல நோய்களை உண்டாக்குகின்றனர்.அவை, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் பாதிப்பு, ஹார்மோன் கோளாறு, தோல் பிரச்சனைகள் மற்றும் பல உடலில் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த நிலையை மாற்ற உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதே. சர்க்கரையை தவிர்த்து  இயற்கையான உணவுகள், பழங்கள், முழுமையான தானியங்கள் போன்றவற்றை அன்றாட வாழ்க்கையில் சேர்ப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.


சர்க்கரையை தவிர்த்தால் அதற்கு பதில் வேறு என்ன சேர்ப்பது? என்ற கேள்வி உங்களிடம் எழலாம். இதற்கு மாற்றாக, சுத்தமான கருப்பட்டியை பொடியாக்கி இனிப்பு தேவையான உணவுகளில் சேர்க்கலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளி சர்க்கரை இனிப்புக்கு பதில்  கருப்பட்டி சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். 


சர்க்கரையை உணவில் இருந்து தவிர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

உடலுக்கு சக்தி மற்றும் உற்சாகம் கிடைக்கும்:

உடலில் மிகுந்த சக்தி மற்றும் உற்சாகம் ஏற்படுவதற்கு சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருப்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது . காரணம், அதிக சர்க்கரை உடலை வேகமாக சோர்வடையச் செய்யும்; அதனால் எளிதில் தூக்கம், சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்பட  வாய்ப்பு  உள்ளது. இதற்கு மாற்றாக சர்க்கரையை தவிர்த்து இயற்கை உணவுகளை உண்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்.இதனால் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கி உடலில் பலத்தை அதிகரிக்கின்றனர். அதே நேரத்தில், போதுமான தூக்கத்தின் நிலை மேம்பட்டு, மூளை தெளிவாகச் செயல்படத் தொடங்கும். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சிடனும், உற்சாகத்துடனும் செயல்பட முடியும்.

மனநிலையை சமநிலையாக்கும்:

மனிதனின் மனநிலையை போக்குவதற்கு அதிக சக்கரை உட்கொள்வது தற்காலிக மகிழ்ச்சியைத் தரும் போதிலும், சர்க்கரை சேர்த்த உணவுகளை உட்கொண்ட பிறகு மனநிலை தாறு மாறாக மாறும்.அதாவது, மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். மூளையின் ரசாயன சமநிலையும் (chemical balance) கட்டுப்பாட்டில் இருந்து, சிந்தனைகள் தெளிவாகவும், உணர்வுகள் அமைதியாகவும் மாறும். இதனால் மனநிலை சமநிலையுடன், மனச்சாந்தியும் பெருகும்.

தோலை இளமையாக்கும் வலிமை:

இயற்கையான தோல்  அழகை மீண்டும் பெறத்  சர்க்கரையை தவிர்ப்பது ஒரு நல்ல வழியாக இருக்கும். ஏனென்றால், அதிகமான சர்க்கரை உட்கொள்வது தோலில் அழுக்குகளை ஏற்படுத்தி, பிம்பிகள், கருப்புக் கறைகள், மற்றும் சுருக்கங்களை அதிகரிக்கக் கூடும். ஆனால் சர்க்கரையை தவிர்த்ததும், இரத்தம் சுத்தமாகி, உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும். இதன் விளைவாக, தோல் பளிச்சென்று  பிரகாசமாக  மாறும். மேலும், கொலாஜன் உற்பத்தி மேம்பட்டு, இளமை தோற்றத்தை நீடித்து இருக்க உதவி செய்யும். 

உடல் எடை குறையும்:

சர்க்கரை அதிகமான கலோரிகளை கொண்டிருக்கிறது, ஆனால் அது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்காது. மேலும், சர்க்கரை அதிகமாக உட்கொள்ளும் போது இன்சுலின் அளவு அதிகரித்து உடலில் கொழுப்பு சேமிக்கப்படும். இதுவே நீண்டகாலத்தில் உடல் பருமனாக மாறும். சர்க்கரை தவிர்த்தால், உடல் அவசியமற்ற கலோரி சேமிப்பைத் தவிர்க்கும். இதனால் உடலில் உள்ள சதைப்பகுதி மெதுவாக கரையத் தொடங்கும். எடையும் குறைய ஆரம்பிக்கும்.

ஹார்மோன் சமநிலையாகும்:

சர்க்கரை அதிகம் உட்கொள்வது உடலில் இன்சுலின் மற்றும் கார்டிசோல் என்ற ஹார்மோன்களின் அளவை  பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளனர். அதாவது, இன்சுலின் அதிகரித்தால் மார்புப் புடைப்பு, மாதவிடாய் கோளாறுகள் போன்றவை ஏற்படும். குறிப்பாக, PCOS (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) போன்ற ஹார்மோன் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். சர்க்கரையை  தவிர்ப்பதால்  இன்சுலின் சென்சிடிவிட்டி மேம்பட்டு ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும். மேலும், கார்டிசோல் ஹார்மோனின் கட்டுப்பாட்டால் மன அழுத்தமும் குறையும்.

சிறுநீரக செயல்பாடு மேம்படும்:

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது, சிறுநீரகத்தின் இரத்த நாளங்கள் (blood vessels) மற்றும் வடிகட்டி அலகுகள் (filtering units)  சேதமடைகின்றன. இதனால் சிறுநீரகம் ரத்தத்தை சுத்தம் செய்யும் வலிமையை இழக்கிறது.இதனை  நீரிழிவு நெஃப்ரோபதி (diabetic nephropathy) என்பார்கள்.

அதிக சுர்க்கரை உட்கொள்ளும் போது உடலில் இன்சுலின் எதிர்ப்பு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும் போது  சிறுநீரகத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை உட்கொள்வதை குறைக்கும் போது இரத்த அழுத்தம் கட்டுப்படுவதுடன், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக செயல்படும். சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பும்  குறையும். பின் சிறுநீரகம் இயல்பாக தன்னுடைய பணிகளை செய்யும்.

மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்:

சர்க்கரையை சாப்பிடுவதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து,  இரத்தக்குழாய்களில் கொழுப்பு வருவதால்  இரத்த ஓட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதுடன்  ரத்தவோட்டம் செல்வதையே தடை செய்கின்றனர். இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவை  இருந்தால், மாரடைப்பு வருவது உறுதி.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்காமல் இருந்தால், இதய நரம்புகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும்.  சர்க்கரையின்  அளவையும், இதய ஆரோக்கியத்தையும் கவனித்து சர்க்கரையை தவிர்ப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகுகிறது.

நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

உடலில் சர்க்கரையின் அளவு  அதிகமாக இருந்தால், உடலினுள் செயல்பட கூடிய  இம்யூனிட்டி செல்கள் பாதிக்கப்பட்டு  பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற பூச்சிகளின் பாதிப்பை தடுக்க முடியாமல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளனர். எனவே, சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் கெட்ட செல்களை உள்ளிருந்து அடித்து விரட்டலாம்.


சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருப்பது சவாலாக தோன்றலாம், ஆனால் அதனை கடைப்பிடித்தால் கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாதவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சர்க்கரையை அன்றாட வாழ்க்கையில் தவிர்ப்பதன் மூலம்  உங்கள் உடல், மனம், தோல், தூக்கம் என ஒவ்வொன்றிலும் ஆரோக்கியம் பிறக்கும். இன்று ஒரு சிறிய முடிவை எடுத்தாலே, நாளை ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் காணலாம்.

“நான் சர்க்கரையை தவிர்க்க முடியும், என் உடல்நலத்தை மேம்படுத்த முடியும்” என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் ஒவ்வொரு சிறிய முயற்சியும், நீண்டகால ஆரோக்கியத்தின் பாதையில் உங்களை முன்னேறச் செய்யும். மாற்றத்தை இன்றிருந்து தொடங்குங்கள். அது உங்கள் ஆரோக்யத்தையே  மாற்றும்.