Headache:தீராத தலைவலியில் இருந்து விடுபட எளிய வைத்தியம்

 

View This Image






Headache Reason & Solution in Tamil:தலை யாருக்கெல்லாம்  இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக அடிக்கடி தலைவலி வருவதுண்டு. வேலைப்பாடுகள் இருப்பதால் அதிகம் பேர் இதனை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. ஆனால் அது எதனால் வருகிறது என்று தெரியாமல் தவிப்பவர்கள், தலைவலிக்குத் தற்காலிக நிவாரணம் காண்பவர்கள் தான் அதிகமானவர்கள்.சரி;உண்மை என்ன?தலைவலி ஒரு வியாதியா...?அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா...?என்ன தலையை வலிக்கிறதா...?பதில் தெரிந்தால் இன்னும் அதிகமாக தலை வலிக்கும்.

தலைவலி வருவதற்கான காரணங்கள்:

  1. அதிதீவிரமான மன உளைச்சலால் ஏற்படும் தலைவலி 
  2. பாக்கு, புகையிலை, போதை, என்று மிதப்பவர்கள், காலையில் தலைவலியோடு தான் எழுந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனவே இவர்களுக்கும் தலைவலி வரும்.
  3. இரத்த கொதிப்பு(Blood Pressure)நோய்க்கு உட்பட்டவர்களுக்குத் தலைவலி வரலாம்.
  4. தீவிரமான சிந்தனை, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, உணவுப்பொருட்களின் ஒவ்வாமை இவற்றால் மைக்கிரேன்(Migraine)எனப்படும் தலைவலி வரலாம்.
  5. உடல் எடையை குறைப்பதற்காக மற்றும் வேறு காரணங்களுக்காக சாப்பிடாமல் பசியோடு இருந்தால் தலைவலி வரும்.
  6. மல சிக்கல் நோய் இருந்தால் கண்டிப்பாக தலைவலி வரும்.
  7. சிறுநீரகத்தில் கல், பித்தப்பையில் கல், அஜீரணக்கோளாறு போன்ற நோய்யாலும் தலைவலி வரும்.
  8. முறையாக மாதவிடாய் வராத பெண்களுக்கும் தலைவலி வரும். 
  9. நரம்பு வியாதிகளாலும் தலைவலி வரும்.
  10. காரணமே இல்லாமல் தலைவலி வரும்.

தலைவலி...சில ஒற்றட மருந்துகள்:

  • நெற்றியில் இதமாய்த் தேய்த்து விடுவதும்,தலையின் உச்சியில், சிறிது அழுத்தி விடுவதும், கழுத்தின் பின்பகுதியில் வருடி விடுவதும், காதுகளின் பின்னால் இதமாய்த் தேய்த்து விடுவதும், உடனடியாகத் தலைவலியின் தீவிரத்தைக் குறைத்து விடும். நீங்கள் விருப்பப்படும் நபர் உங்களுக்கு உதவி செய்கையில் தலைவலி மருந்தே இல்லாமல் மலையேறிவிடும்.
  • நீலகிரித் தைலத்தை நெற்றியில் தேய்த்து, பின்னர் தலை உச்சி, காதுகளின் பின்புறம், கழுத்தின் பின்புறம் தேய்க்கவும். ஒரு துணியில் சிறிது மஞ்சள் தூளைப் பந்துபோல் கட்டி, சட்டியில் இட்டு சூடு செய்து, இதமான சூட்டியில் தைலம் தேய்த்த இடங்களில் ஒற்றமிடத் தலைவலி பஞ்சாய்ப் பறந்து போகும்.
  • பறங்கி சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து, வெற்றிலையுடன் சேர்த்து விழுதாய் அரைத்து நெற்றியில் பற்றிட, தலைவலி தீரும்.
  • தைவேளை என்னும் மூலிகையின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை இவற்றைச் சம அளவு எடுத்து(மொத்தம் 12 கிராம்), 20 கிராம் பனைவெல்லம் சேர்த்து விழுதாய் அரைத்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிட, வருடக்கணக்காய் தொடரும் அனைத்துவகை தலைவலியும் குணமாகும்.

தலைவலியால் தவிப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  • அடிக்கடி தலைவலி அவஸ்தைக்கு உட்படுபவர்கள் கீழ்க்காணும் உணவுக்கட்டுப்பாடுகளைக் கையாண்டால் தலைவலியை அடித்து விரட்டலாம்.  
  • புளிப்பு உணவுகளான எலுமிச்சை,தக்காளி, புளி ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  • மந்த உணவுகளான தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு, வாழைக்காய்  பொரியல்,வடை, போண்டா போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள் ஆகியவற்றை உடனே நீக்க வேண்டும். 
  • உப்பில் ஊறிய பண்டங்களான ஊறுகாய், வற்றல், வடாம் போன்றவற்றை கண்டிப்பாய் நீக்குங்கள்.
  • இரவு வேளை உணவைச் சீக்கிரமாய் எடுத்துக் கொள்ளுங்கள். உணவு நன்கு செரித்த பின் படுக்கைக்கு செல்லுங்கள். 
  • இரவு உணவில் மலத்தைக் கட்டும் மாவுப்பொருட்கள், எண்ணெய் பதார்த்தங்கள், வாழைப்பூ, குருமா வகைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • மது, புகை, போதைக்கு அடிமையாதல்,இவற்றை அடியோடு விட்டாலொழிய தலைவலியில் இருந்து முழுவதுமாய்த் தப்ப முடியாது.
  • அடிக்கடி பசி காண்பவர்கள், அதனால் ஏற்படும் தலைவலிக்கு உடலுக்கு ஊட்டமான உணவுகளை எடுத்தாலே தலைவலி குணமாகிவிடும்.
  • மாதவிடைக்கோளாறினால் உண்டாகும் தலைவலிக்கு, மணத்தக்காளி, முருங்கைக்கீரை, பொன்னாகண்ணிக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் தேவையான அளவில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மிளகாய், வற்றல் சேர்த்து கொதிக்க வைத்து, சூப்பராகச்  சாப்பிட, தொடர்ந்து வரும். தலைவலிக்கு முடிவுரை எழுத இயலும்.

இங்கு சொல்லப்பட்ட மருந்துகள் அனைத்தும் தலைவலியை முற்றிலும் குணப்படுத்தும் மூல மருந்துகளாகும். ஒரு வேளையில் பலன் தெரியாது. தொடர்ந்து கடைபிடிக்க நற்பலன் நாடி வரும். 


மேலும் வாசிக்க:BH Boss Tamil-அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த தமிழ் வழிகாட்டி