Eye Care:சமைக்க பயன்படுத்தும் உணவுப்பொருட்களை வைத்தே கண் குறைபாட்டை எளிதில் சரி செய்யலாம்!...

 

View This Image





Eye Care Tips in Tamil:டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து கொண்டு வருவதால் இன்றைய காலத்து குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை  பெரும்பாலும் கண் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். அதிகபற்றம் எதனால் இக்குறைபாடு வருகிறது என்று தெரியுமா? தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற டிஜிட்டல்  சாதனைகளை  அளவுக்கு மீறி பயன்படுத்தியது தான் காரணம்.அதிலும் மோசமான நிகழ்வு என்னவென்றால் குழந்தை பிறந்து ஒரு வயது கூட முடிந்திருக்காது அவர்கள் கையிலும் தொலைபேசியை கொடுத்து குழந்தைகளையும்  கெடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு நாள் ஆக ஆக கண் குறைபாடு சீக்கிரமாகவே வந்து விடுகிறது. அதனால் டிஜிட்டல் சாதனைகளை அளவோடு பயன்படுத்துவது கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


கவனம் தேவை:

கண் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலே சரி செய்வது சிறந்தது. இல்லையென்றால் காலப்போக்கில் இவ்வுலகத்தை பாக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளி விடும். 


கண்பார்வை குறைபாட்டினால்  ஏற்படும் அறிகுறிகள்:

1. புத்தக  எழுத்துகள்  படிக்க முடியாமை.

2. தொடர்ந்து கண்களில் சோர்வு ஏற்படும். 

3. தலைவலி பிரச்சனை வரும்.

4. கண்களில் எரிச்சல் ஏற்படும்.

5. இரவில் பார்வை குறைவு இருக்கும். 

6. கண்களை மடக்கி அல்லது இழுத்துப் பார்த்தல்.  

கண் பார்வை குறைபாடு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், சில  எளிய பழக்க வழக்கங்களில் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியும். சீரான உணவு முறை மற்றும் பரிசோதனையின் மூலம் தடுக்கும் வகையில் கவனம் செலுத்தலாம். உடலில் இருக்கும் உறுப்புகளில் சிறந்த உறுப்பான கண் உலகத்தை காண உதவும் சிறந்த உறுப்பு  என்பதால் அவற்றை பாதுகாப்பது மிகவும்  அவசியமாக இருக்கிறது.

பார்வை குறைபாடு பற்றி கீழே விரிவாகப்  பார்க்கலாம். கண் பார்வை குறைபாட்டை நான்கு வகையாகக் கூறலாம். அவை, 

1. நேர்ப்  பார்வை குறைபாடு (Myopia)

2. தூரப்  பார்வை குறைபாடு (Hyperopia)

3. அஸ்டிக்மாடிசம் (Astigmatism)

4. வயதுக்கு ஏற்ப வரும் பார்வை குறைபாடு (Presbyopia)

நேர் பார்வை குறைபாடு (Myopia):

நேர் பார்வை குறைபாடு  சாதாரணமாக பலருக்கு ஏற்படும் குறைபாடாகும் .இது பெரும்பாலும் கண்ணில் இருக்கும் பந்து நீளமாக இருப்பதாலோ அல்லது கார்னியா என்ற பகுதி சற்று வளைந்திருக்கையாலோ ஏற்படுகிறது.  பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் இக்குறைபாடு அதிகம் காணப்படுகிறது. தொடக்க நிலையில் கல்வியில் கவனக்குறைவு, கண் சோர்வு, போன்ற பல பிரச்சனைகள்  ஏற்படலாம். கண் பரிசோதனையின் மூலம் இந்த நிலையை கண்டறிந்து, குறியீட்டு (minus power) கண்ணாடிகள் அல்லது லென்ஸ்கள் மூலம் சரிசெய்யலாம். சில நேரங்களில் லேசர் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் போன்றவற்றைப் பார்ப்பது, வெளிச்சம் இல்லாத இடத்தில் வாசித்தல் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். சரியான உணவுமுறை மற்றும் கண்களுக்கு ஓய்வளிக்கும் பழக்கங்களை வளர்த்தால், நேர் பார்வை குறைபாட்டை  கட்டுப்படுத்த முடியும்.


தூர பார்வை குறைபாடு (Hyperopia):

தூர பார்வை குறைபாடு(Hyperopia)  கார்னியா மற்றும் லென்ஸ் போதிய வளைவைக் கொண்டிராத காரணத்தால் ஏற்படுகிறது. குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் வயதானவர்களிடம் இது காணப்படுகிறது. வாசிப்பதில் சிரமம், கண் சோர்வு, தலைவலி மற்றும் அதிக நேரம் அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதில் உள்ள சங்கடம் போன்றவை அறிகுறிகள் எனலாம். பரிசோதனை மூலமாக கண்டறிந்து, பிளஸ் பவர் கண்ணாடிகள் அல்லது லென்ஸ்கள் மூலம் சரிசெய்யலாம். சில உயர் சிகிச்சை  நிலைகளில் லேசர் சிகிச்சை (LASIK) பரிந்துரைக்கப்படுகிறது. கண்களுக்கு போதிய வெளிச்சம், நல்ல உணவு முறை மற்றும் சீரான பராமரிப்பு மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.


அஸ்டிக்மாடிசம் (Astigmatism):

அஸ்டிக்மாடிசம்  பார்வை குறைபாடு கார்னியா அல்லது லென்ஸ் சீரான வளைவு இல்லாமல், ஒவ்வொரு திசையிலும்  வெளிச்சத்தை சிதறச் செய்யும் விதத்தில் இருக்கும்போது ஏற்படுகிறது. அஸ்டிக்மாடிசம் மரபணு வழியாகவும், கண் காயங்கள், கண் அறுவைச் சிகிச்சையின் பின் விளைவாகவும் ஏற்படலாம். இதில் தலைவலி, கண் சோர்வு, இரட்டைப் பார்வை, வாசிக்கும் போது சங்கடம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. கண் பரிசோதனை மூலமாக இதனை கண்டறிந்து, சிலிண்டரிக்கல் பவர் கொண்ட கண்ணாடிகள், கான்டக்ட் லென்ஸ் (contact lenses) அல்லது லேசர் சிகிச்சை (LASIK) மூலம் இதனை சரி செய்யலாம். 


வயதுக்கு ஏற்ப வரும் பார்வை குறைபாடு (Presbyopia):

ப்ரெஸ்பியோபியா பொதுவாக 40 வயதிற்குப் பிறகு உண்டாகிறது. இதன் குறைபாட்டால் எழுத்துக்கள் வாசிப்பதில்  அல்லது தொலைபேசியில் செய்திகளை பார்ப்பதியில்  போன்ற செயல்களால்  கடினமாகும். இதற்கான முக்கிய காரணம் கண்களில் உள்ள லென்ஸின் நெகிழ்வுத் தன்மை குறைவதாலும், கண் தசைகள் பலவீனமடைவதாலும் நடக்கிறது. முதற் கட்டங்களில் கண்கள் சோர்வடைவதும், தலைவலி ஏற்படுவதும் இருக்கும். இந்த நிலையை ரீடிங் கிளாஸஸ்(reading glasses),பைபோஸால்(bifocal),ப்ரோக்ரேசிவ் லென்ஸ் (progressive lens) அல்லது கான்டெக்ட் லென்ஸ்(contact lens)மூலம் சரி செய்யலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் லேசர் சிகிச்சை மற்றும் லென்ஸ் இம்பிளான்ட் (Lens implant) சிகிச்சைகளும் கிடைக்கின்றன. இது இயற்கையான மாற்றம்  என்பதால், சரியான பராமரிப்பு மற்றும் நேர்மறையான அணுகுமுறையால் ப்ரெஸ்பியோபியாவை வெற்றிகரமாகக் கையாளலாம்.


கண் பார்வைக் குறைபாடுகளை சமைக்க பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். 


கேரட்(Carrot):

கேரட் கண் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான காய்கறிகளுள்  ஒன்றாகும். இதில் அதிக அளவில் பீட்டா-கெரோட்டீன்(Beta-carotene) இருப்பதால், உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. வைட்டமின் ஏ  கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதோடு, இரவில் தெளிவாகப் பார்ப்பதற்கும் உதவுகிறது. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், கண்களின் செல்களை ஒளியால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாக்கின்றன. 

இது கண்களில் உலர்ச்சி, சோர்வு மற்றும் வயதினால் ஏற்படும் பார்வை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. தினசரி உணவில் கேரட்டைச் சேர்த்தல், சாறாகவும், வேகவைத்தும் அல்லது பச்சையாகவும் எடுத்துக் கொள்ளலாம். 


முட்டை(Egg):

முட்டையில் வைட்டமின் ஏ, லூட்டீன் (Lutein), ஸீயாக்சாந்தின் (Zeaxanthin), சிங்க் போன்றவை கண்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துகள் . வைட்டமின் ஏ பார்வைத் திறனை மேம்படுத்துவதோடு இரவில் பார்வை குறையாமல் பாதுகாக்க உதவுகிறது. லூட்டீன் மற்றும் ஸீயாக்சாந்தின் ஆகியவை கண்களில் உள்ள ரெட்டினாவை ஒளி மற்றும் ஊதா கதிர்வீச்சால் ஏற்படும் சேதத்திலிருந்து காக்கின்றன. மேலும், சிங்க் கண்களில் வைட்டமின் ஏ செயல்பாட்டை ஊக்குவித்து கண்களின் ஒளிப்பரிவு தன்மையை மேம்படுத்துகிறது.குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கரு (yolk)  கண்ணின் பாதுகாப்பிற்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டுள்ளது. 

வயதானவர்களுக்கு ஏற்படும் கண் நோய்கள், குறிப்பாக மாகுலார் டெஜெனரேஷன் (macular degeneration) மற்றும் கண்ணுற்ற மேகங்கள் (cataracts) போன்றவற்றைத் தடுக்க முட்டை நேரடியாக உதவுகிறது. முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் கண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு காரணமாக, முட்டை அற்புதமான கண் பாதுகாப்பு உணவாக கருதப்படுகிறது.


வெள்ளரிக்காய்(Cucumber):

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து  நிறைந்த சிறந்த காய்யாகும். இதில் அதிக அளவில் நீர், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் பல சத்துக்கள் நிறைந்து இருப்பதால் வெள்ளரிக்காய் கண்களுக்கு  இயற்கையான ஈரப்பதத்தை வழங்கி, கண் உலர்ச்சி மற்றும் சோர்வைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக, வைட்டமின் ஏ  இரவுப் பார்வையை மேம்படுத்தி, பார்வை குறைபாடுகளைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 

வெள்ளரிக்காயை சாலட், ஜூஸ் அல்லது பச்சையாக தினசரி உணவில் சேர்ப்பது கண்களுக்கு பாதுகாப்பாகவும், பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், சூடான காலங்களில் வெள்ளரிக்காய் கண்களுக்கு குளிர்ச்சி தரும் என்பது குறிப்பிடத்தக்கது. 


நெய்(Ghee): 

நெய் பாரம்பரிய மருத்துவ முறைகளில், குறிப்பாக ஆயுர்வேதத்தில், நெய் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது. ஆவின் நெய் அல்லது தேங்காய் நெய் இரண்டும் கண்களுக்கு நன்மை தரக்கூடியவை. கண்களை  சுற்றிய பகுதிகளில் மெல்லிய மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை தூண்டும் மற்றும் இருண்ட வளையங்களை குறைக்கும். நீண்ட நேரம் கணிப்பொறி பயன்படுத்தும் நபர்களுக்கு கண்கள் சோர்வடையாமல் இருக்க நெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 


நெய் இயற்கையான கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளதால், கண்களில் ஏற்படும் உலர்ச்சி மற்றும் எரிச்சலை குறைக்கிறது. மேலும், நெய் உடலின் உள் வெப்பத்தை சமநிலைப்படுத்துவதால், கண்களில் ஏற்படும் சிவப்பினைத் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு சிறிதளவு நெய் கொடுப்பது கண் பார்வையை மேம்படுத்தும் என்பதும் நம்மைச் சுற்றியுள்ள அனுபவங்களால் அறியப்படுகிறது. தூங்கும் நேரத்தில் கண்கள் சுற்றிய பகுதியில் நெய் தடவுவது சிறந்த பலன் கொடுக்கும்.


 கீரை வகைகள்(Spinach):

கண் ஆரோக்கியத்திற்கு முக்கிய ஊட்டச்சத்துகளை வழங்கும் கீரை வகைகள் பல உள்ளன. குறிப்பாக, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தென்னங் குறுந்தி கீரை போன்றவை கண்பார்வைக்கு அதிகமாக உதவுகின்றன. இக்கீரைகளில் வைட்டமின் ஏ, லைக்கோபீன், லூட்டீன், ஜீசான்தின் போன்ற கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. 

இவை கண்களில் ஏற்படும் மஞ்சள் புள்ளி குறைபாடு (Macular Degeneration), கண்ணீர் உற்பத்தி குறைபாடு போன்றவற்றைத் தடுக்கும்  திறன் கொண்டது. தினசரி உணவில் கீரை வகைகளைச் சேர்ப்பது கண்பார்வையை பாதுகாப்பதோடு, இயற்கையான சரும நலன்களையும் அளிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.


பச்சை மிளகாய்(Green Chilli):

பச்சை மிளகாயில்  அதிக அளவில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் பீட்டா-கெரோட்டீன் போன்றவை  உள்ளனர். இவை கண்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருப்பதால்   கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் பணியைச் சரிவரச்  செய்கிறது. வைட்டமின் சி கண்களில் உள்ள நரம்புகள் மற்றும் திசுக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. 


பச்சை மிளகாயை உணவில் தொடர்ந்து சேர்ப்பது, கண்கள் சீராக செயல்படவும் பார்வை நீடிக்கவும் உதவுகிறது. பச்சை மிளகாயை  சமையலில், சாலட், சட்னி அல்லது காரசார உணவுகளில் பயன்படுத்தலாம்.


பூசணிக்காய்(Pumpkin):

பூசணிக்காயில் பீட்டா-கெரோட்டீன்,வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகமாக இருப்பதால் பீட்டா-கெரோட்டீன் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. இது இரவுப் பார்வை குறைபாடு, கண் உலர்ச்சி, மற்றும் மஞ்சள் புள்ளி குறைபாடு (macular degeneration) போன்ற நிலைகளிலிருந்து பாதுகாக்கிறது. 


மேலும், பூசணிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் கண்களில் செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. இதனை கூட்டு, பருப்பு, கூழ், அல்லது சாறாகவும் எடுத்துக்கொள்ளலாம். பூசணிக்காயை வாரம் மூன்று முறையாவது உணவில் சேர்ப்பது கண்பார்வை மேம்பாட்டுக்க  மிகவும் நல்லது.


ப்ரோக்கோலி(Broccoli):

ப்ரோக்கோலி கண்களின் ஆரோக்கியத்திற்கும் உதவும் சத்தான காய்கறி வகைகளுள் ஒன்றாகும். இதில் வைட்டமின் ஏ, சி, மற்றும் இ, லைகோபீன், லூட்டீன், ஜீசான்தின் போன்றவை இருப்பதால்  கண்களின் செல்களை ஒளி மற்றும் வயதுசார்ந்த சேதங்களில் இருந்து பாதுகாக்க செய்கிறது. 


ப்ரோக்கோலி கண்களில் ஏற்படும் மஞ்சள் புள்ளி குறைபாடு (Macular degeneration)  மற்றும் முத்திரைப்பார்வை (Cataract) போன்ற பார்வை குறைபாடுகளைத் தடுக்கும் திறனுடையது. மேலும், வைட்டமின் சி  கண்களின் நரம்புகள் மற்றும் திசுக்களின் பாதுகாப்புக்கு உதவுகிறது. ப்ரோக்கோலியை வேகவைத்து அல்லது சலாட், சூப், கிரேவி வடிவில் சமைத்து உணவில் சேர்த்தால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. வாரத்தில் 2–3 முறை ப்ரோக்கோலி எடுத்துக்கொள்ளுதல் கண்பார்வையை நீடித்து பாதுகாக்க செய்யும். 


சுரைக்காய்(Bottle gourd):

சுரைக்காய் உடலில் உள்ள தீய எண்ணெய்கள் மற்றும் கழிவுகளை நீக்கி, கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் கொண்டுள்ளது.வாரம் பல முறை சுரைக்காயை உணவில் எடுத்துக்கொள்வது கண்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் மற்றும் பார்வையை சீராக வைத்திருக்க உதவுகிறது.


 முள்ளங்கி(Radish):

முள்ளங்கி கண் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்  தாவரச் சார்ந்த உணவுப் பொருள்.இதில் வளர்ச்சிக்கான வைட்டமின் ஏ, சி, மற்றும் பீட்டா-கெரோட்டீன் போன்ற கண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்துகள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் செல்கள் சேதத்தை தடுப்பதில் உதவியாக இருக்கிறது. 


மேலும், இது இரத்த சுத்திகரிப்பு மூலம் கண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முள்ளங்கியை கூட்டு, சாம்பார், பருப்பு மற்றும் சப்பாத்தி சைட் டிஷாக பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரு முறை முள்ளங்கியை உணவில் சேர்ப்பது கண்களுக்கு பாதுகாப்பாகவும், பார்வை என்றும் நிலைத்திருக்கவும் உதவியாக இருக்கும்.


கண்களின் ஆரோக்கியத்தை பேணுவதும், தேவையான பராமரிப்புகளை மேற்கொள்வதும் நமது பொறுப்பாகும். சத்தான உணவுகள், நீர்சத்து நிறைந்த காய்கறிகள், கண்களுக்கு ஓய்வு, பாதுகாப்பான நடைமுறைகள் மற்றும் நேர்மையான பரிசோதனைகள் ஆகியவை கண்களின் நீடித்த பார்வைக்குத் தேவையானவையாகும். 

கண்களில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும் தவிர்க்காமல் கண் மருத்துவரை அணுக வேண்டும். கண்கள் ஒருமுறை சேதமடைந்தால், இயல்பு நிலைக்கு திரும்பவே முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும். கண்களை நேசியுங்கள்!!!  உங்கள் உலகமே அதில் தான் தெரிகிறது!!!