Daily Juice: வாரத்தில் ஏழு நாட்களுக்கும் ஏழு விதமான சத்தான ஜூஸ் வகைகள்!...


View This Image





Fruit Juice:பெரும்பாலும் சந்தைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விலைமலிவாக கிடைக்கும். ஆனால் பல பேர் இதனை பொருட்டாக எண்ணாமல் வாங்காமல் இருக்கின்றனர். சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை விட்டு விட்டு துரித உணவுகளான பிட்சா,பர்கர், சன்விச், ரோல் போன்றவைகளுக்கு அடிமை ஆகுகிறோம். ஆசைக்காக எப்போதாவது சாப்பிடலாம்.ஆனால் அதையே பழக்கமாகி கொள்வது உடலுக்கு நல்லது கிடையாது. இது உடல் பருமனை அதிகரிக்க செய்வது மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீர்குலைத்து விடும். ஆதலால், என்றும் ஆரோக்கியமாக இருக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். நாம் உயிர் வாழ  சாப்பாடு எவ்வளவு முக்கியமோ அதைப்போல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பழங்களும் காய்கறிகளும் மிகவும் முக்கியம். 

பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதற்கு சில பேருக்கு பிடிக்காமல் இருக்கும். நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். சுவையாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். ஜூஸ் எவ்வாறு செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். வாரத்தின் ஏழு நாட்களுக்கும் தேவையான ஜூஸ் ரெசிபி பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.


ஞாயிற்றுக் கிழமை(Sunday)  

1)ABC Juice (ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் ஜூஸ்)


தேவையான பொருட்கள்:


  • ஆப்பிள் - 1
  • பீட்ரூட் -1
  • கேரட் -2
  • இஞ்சி - ஒரு தூண்டு 
  • சுத்தமான கருப்பட்டி -தேவையான அளவு(கருப்பட்டி இல்லையென்றால் காய்ச்சப் பால் அல்லது தேங்காய்ப் பால் செய்துக்கொள்ளுங்கள்.சுவை அதிகமாக இருக்கும்.)
  • தண்ணீர்-தேவையான அளவு

செய்யும் முறை:


ஆப்பிள், பீட்ரூட், கேரட்,இஞ்சி  ஆகியவற்றை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். பின், ஒரு மிக்ஸி ஜாரில் வெட்டி வைத்ததை போட்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இறுதியாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை வடிகட்டி ஒரு கிளாசில் ஊற்றுங்கள்.அவ்வளவுதான் சுவையான ABC ஜூஸ் தயார். 


திங்கள்கிழமை(Monday)

2) மாதுளை ஜூஸ்(Pomegranate Juice)


தேவையானப் பொருட்கள்:

  • மாதுளைப் பழம் - 1
  • நெல்லிக்காய் - 1
  • இஞ்சி -1/2 இஞ்ச் 
  • எலுமிச்சைப் பழம் - 1/2
  • தண்ணீர் - தேவையான அளவு 

செய்யும் முறை:


மாதுளைப் பழம், நெல்லிக்காய், இஞ்சி ஆகியவற்றை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.  வெட்டியதை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொண்டு அதனுடன், எலுமிச்சைப் பழத்தை பிழிந்துக் கொள்ளுங்கள். பின் மிக்ஸி ஜாரில் போட்ட அனைத்தையும் மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து திரும்பவும் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து வடிகட்டி சாறை மட்டும் ஒரு கிளாசில் ஊற்றுங்கள்.சுவையான மாதுளை ஜூஸ் ரெடி.

செவ்வாய்க்கிழமை(Tuesday)

3)க்ரீன்(Green) ஜூஸ்

தேவையானப் பொருட்கள்:

  • அன்னாசிப்பழம் - நான்கு பெரிய தூண்டு 
  • வெள்ளரிக்காய் - பாதி 
  • இஞ்சி -1/2 இன்ச்
  • கொத்தமல்லி இலை - தேவையான அளவு 
  • தண்ணீர் - தேவையான அளவு 

செய்யும் முறை:


அன்னாச்சிப்பழம், வெள்ளரிக்காய், இஞ்சி, கொத்தமல்லி இலை போன்றவற்றை சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். வெட்டியதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை வடிக்கட்டி ஒரு கிளாசில் ஊற்றுங்கள். க்ரீன் ஜூஸ் தயார்.

புதன்க்கிழமை(Wednesday)


4)ஆரஞ்சுப் ஜூஸ்(Orange Juice) 


தேவையானப் பொருட்கள்:

  • ஆரஞ்சுப் பழம் - 1
  • மாம்பழம் - 1
  • வெள்ளரிக்காய் - பாதி 
  • தண்ணீர் - தேவையான அளவு 


செய்யும் முறை:


ஆரஞ்சுப் பழம், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வெட்டி மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததுடன், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை வடிகட்டி ஒரு கிளாசில் ஊற்றுங்கள். சுவை அதிகமாக வேண்டும் என்றால் நட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

வியாழக்கிழமை(Thursday)

5)கருவேப்பிலை ஜூஸ்(Curry Leaf Juice)


தேவையானப் பொருட்கள்:

  • கருவேப்பிலை இலை - ஒரு கைப்பிடி 
  • துருவியத் தேங்காய் - ஒரு கைப்பிடி 
  • இஞ்சி - 1/2 இஞ்ச் 
  • தண்ணீர் - தேவையான அளவு 
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்யும் முறை:


வெட்டி வைத்த கருவேப்பிலை இலை, துருவியத் தேங்காய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அரைத்ததை வடித்து ஒரு கிளாசில் ஊற்றி தேன் சேர்த்துக் கொள்ளவும். ஆரோக்கியமான கருவேப்பிலை ஜூஸ் தயார்.


வெள்ளிக்கிழமை(Friday)


ஸ்ட்ராவ்பெர்ரி ஜூஸ்(Strawberry Juice)


தேவையானப் பொருட்கள்:

  • ஸ்ட்ராவ்பெர்ரி - 3
  • தர்பூசணி பழம் - 8 தூண்டு 
  • துருவிய தேங்காய் - 1/2 மூடி 
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன் 
  • தண்ணீர் - தேவையான அளவு 

செய்யும் முறை:


ஸ்ட்ராவ்பெர்ரி மற்றும் தர்பூசணி பழம் இரண்டையும்  சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்து கொள்ளுங்கள். பின், அதனுடன் தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை வடிகட்டி ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றுங்கள். பிறகு அதில் துருவிய தேங்காய் மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையான ஸ்ட்ராவ்பெர்ரி ஜூஸ் தயார்.

சனிக்கிழமை(Saturday)

பப்பாளி ஜூஸ்(Papaya Juice)


தேவையானப் பொருட்கள்:

  • பப்பாளிப் பழம் - ஒரு கப் 
  • காய்ச்சப் பால் - 1 கிளாஸ் 
  • முந்திரி - 5
  • பேரிச்சம்பழம் - 2
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்யும் முறை:


பப்பாளிப்பழத்தை சிறிது சிறிதாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் காய்ச்சப் பால் மற்றும் பேரிச்சம்பழம்  சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை ஒரு கிளாசில் ஊற்றி அதில்  தேன் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கி கொள்ளுங்கள். இறுதியாக முந்திரியை பொடித்தாகி அதை ஜூஸ் மேல் தூவி விட்டுக் கொள்ளுங்கள். சுவையான பப்பாளி ஜூஸ் தயார்.