Dark-Circle Removal Pack:உலகத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் என்ற இருபாலருக்கும் தன்னுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனை கெடுப்பதற்காகவே முகத்தில் கண்ணுக்கு கீழ் வருவதுதான் இந்த கருவளையம். பொதுவாக இந்த கருவளையம் கருப்புத்தன்மையோ, ஊதா நிறத்தையோ அல்லது பழுப்பு நிறத்தையோ கொண்ட வட்டமாக தோன்றும் தோலில் ஏற்படும் மாற்றமாகும். இந்த பிரச்சனை அனைத்து வயதினருக்கும் ஏற்படும். இப்பிரச்சனை பெரியதாக இல்லாவிட்டாலும், முக அழகை பாதிப்பதாலும், சோர்வான தோற்றத்தை தருவதாலும் பலர் இதனை குறைக்க விரும்புகிறார்கள்.சரியான பராமரிப்பு, இயற்கையான உணவு முறை, சரியான பழக்கவழக்கங்கள் மூலம் கருவளையங்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஆதலால்,இதை பொருட்படுத்திச் சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது அவசியமாகுகிறது.
கருவளையம் எதனால் ஏற்படுகிறது என்பதை கீழே விரிவாகப் பார்க்கலாம்.
உறக்க குறைபாடு(sleep disorder):
உறக்கமின்மை மூளையின் ஓய்வின்மையை வளர்த்துத் தூக்க குறைபாடை ஏற்படச் செய்யும்.இதனால் தோலில் உள்ள மெலனின் உற்பத்தி அதிகரித்து கருப்புத்தன்மை உருவாகுகிறது. உறங்காத நேரங்களில் கண்களை சுற்றியுள்ள தோலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும். இதன் காரணமாக தோல் மெலிந்து இரத்தக்கசிவு போலவும் தோன்றலாம். மேலும், உறக்கமின்றி உடல் மற்றும் தோலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதாலும், கண்களின் சுற்றுவட்டம் உலர்ந்து கருவளையம் போல் தோன்றும்.
மேலும், தூக்கமின்மையால் தற்காலிக கண்ணழுத்தம் உருவாகும், இது நரம்புகளை விரிவாக்கி கண்கள் கீழ்புறம் ஊதா நிறத்தில் மாறச் செய்யும். ஆகவே, தினமும் குறைந்தது 7–8 மணி நேரம் சிறந்த தூக்கத்தை உறுதி செய்தால், கருவளையங்கள் தானாகவே குறையலாம்.
தோல் கொழுப்பை இழத்தல் மற்றும் டீஹைட்ரேஷன்(Skin Fat Loss and Dehydration):
தோலில் உள்ள கொழுப்பு மென்மை மற்றும் பளிச்சை வழங்கும். ஆனால் வயதானதோடு அல்லது உடல்நிலை பாதிப்பால் இந்த கொழுப்பு அடுக்குகள் குறைவதால், கண் கீழ் பகுதி உடைந்து, இரத்தக் குழாய்கள் வெளிப்படையாக தெரிந்து கருவளையங்கள் உருவாகின்றன. இதே போல், உடலில் நீர்ச்சத்து குறைவதும் (டீஹைட்ரேஷன்) கண் கீழ் தோலை உலரச் செய்து, மெலிந்த தோலாக மாற்றி கருவளையம் ஏற்படுகிறது.இதனைத் தவிர்க்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது,இயற்கையான கிரீம்கள் பயன்படுத்துவது, மற்றும் சத்தான உணவுகள் சாப்பிடுவது போன்றவை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
வயதாவதால் ஏற்படும் கருவளையப் பிரச்சனை:
வயதானதைத் தொடர்ந்து தோலில் ஏற்படும் மாற்றங்கள் கருவளையங்களை உருவாக்கும் முக்கியக் காரணமாக அமைகிறது. வயது முதிர்வின் போது, தோலில் உள்ள கொலாஜன் (Collagen) மற்றும் எலாஸ்டின் (Elastin) குறைகிறது. குறிப்பாக கண்களின் கீழ் பகுதி மிகவும் மெலிதாக இருப்பதால், இங்கு வயது முதிர்வு அதிகம் காட்டுகிறது. இதனால், கண்ணுக்கு கீழ் இருக்கும் தோல் பலவீனமடைந்து, உள்ளிருக்கும் இரத்தக் குழாய்கள் வெளிப்படையாக தெரிந்து கருவாலயங்களாக மாறுகின்றனர்.
வயதினால் கண் சுற்றி உள்ள கொழுப்பு அடுக்குகள் சுருங்கி அந்த பகுதியில் மங்கி போய் இருக்கும். இதுவும் கருவளையங்களை அதிகமாக பிரதிபலிக்கிறது. எனவே, வயதுக்கு ஏற்ப தோலை பாதுகாக்க ஹைட்ரேஷன், கொலாஜன் அதிகரிக்கும் உணவுகள் மற்றும் சிறப்பான கண் பராமரிப்பு முக்கியம்.
மடிக்கணினி அல்லது மொபைல் அதிக பயன்பாடு:
நீண்ட நேரம் ஸ்கிரீன் முன்னால் இருப்பதால் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இது கண் சுற்றிய பகுதியை சோர்வடையச் செய்கிறது. ஸ்கிரீன் கதிர்வீச்சு (blue light) கண் தோலின் நுண்ணிய பகுதிக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இதைத் தவிர்க்க, வேலை நேரங்களில் இடைவெளிகள் எடுத்தல், கண்களை வளைத்துப் பார்ப்பது, கண் பாதுகாப்பு கண்ணாடிகள் பயன்படுத்துதல், மற்றும் கண்களுக்கு ஓய்வளிக்க சிறிது நேரம் அருகில் அல்லது தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்த்துக்கொண்டு இருத்தல் கண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கும்.குறிப்பாக, கண்களில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறாததால், கண் கீழ் பகுதி கருவளையம் ஏற்படுகிறது.
மரபியல் காரணம்(Genealogical reason):
குடும்பத்திலேயே ஒருவருக்கு அல்லது பலருக்கு கண்களின் கீழ் கருமை இருப்பது சாதாரணமாக இருக்கலாம். இது மரபாக எதிர்ப்பார்க்கப்படும் தோல் அமைப்பு, இரத்தக் குழாய்களின் அமைப்பு மற்றும் மெலிந்த கண் கீழ் தோல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. மரபியல் காரணமாக ஏற்படும் கருவளையங்கள், அதிக உறக்கம், சரியான உணவு, சர்க்குலேஷன் கூடினாலும் முழுமையாக நீங்காது.
இது வாழ்க்கை முறையை மாற்றுவதால் சிறிதளவு மட்டுமே குறையும். மரபியலால் உருவாகும் கருவளையங்களை மறைக்க கண் கீழ் கிரீம்கள், ஃபிலர்ஸ் போன்ற முறைகள் பயனளிக்கலாம்.
கருவளையத்தை போக்க சில பேர் செயற்கை முறைகளை பயன்படுத்துவது உண்டு.ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது. பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறைந்த செலவில் வீட்டிலே எளிய முறையில் கண்ணிலுள்ள கருவளையத்தை போக்கிடலாம். அதற்கு கீழே கொடுக்கும் குறிப்பு முறையை தொடர்ந்து செய்வதன் மூலம் எளிதில் கருவளையத்தை நீக்கிவிடலாம்.
கருவளையத்தை போக்கும் இயற்கையான பேக்
தேவையானப் பொருட்கள்:
- அரிசி கழுவியத் தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
- காய்ச்சப் பால் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள்த் தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
- பாசிப்பயிறு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
- காபி பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி கழுவியத் தண்ணீர், காய்ச்சப் பால், மஞ்சள்த் தூள், பாசிப்பயிறு பவுடர், காபி பவுடர் போன்ற அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேருமாறு கலக்கி கொள்ளுங்கள்.முதலில் கண்ணை சுற்றியுள்ள பகுதியை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு காட்டன் பஞ்சில் காய்ச்ச பாலை எடுத்து கருவளையம் இருக்கும் பகுதியில் நன்கு துடைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் தயாரித்த பேக்யை கண்களை சுற்றி இருக்கும் கருவலயப் பகுதியில் தேய்த்து சிறிது நிமிடம் மசாஜ் செய்யுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் செய்யுங்கள். கண்ணை சுற்றியுள்ள கருவளையம் மறைந்து போய்விடும்.

Social Plugin