Healthy and Clear Skin Smoothie Recipe: அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளிக்கொடுக்கும் சுவையான ஸ்மூத்தி ரெசிபி!...


View This Image



Smoothie Recipe in Tamil:தினசரி வாழ்க்கையில் வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையில் மட்டுமே குறிக்கோளாக இருந்து முகத்தையும் உடலையும் பேணுவதில் அக்கறை செலுத்தாமல் விட்டுவிடுகின்றனர். இதில் அவர்கள் மேல் தவறு சொல்ல முடியாது அவர்களின் சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டது. அன்றாட வாழ்க்கையில் வெளியே செல்லும் போதோ அல்லது வேலைக்கு செல்லும்போதோ தூசி, வெயில், மாசு போன்றவை முகத்தின் இயற்கை அழகை பாதித்து விடுகின்றனர். அதனால் சரியான பராமரிப்பு, சுத்தம், மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் முகத்தை பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாக உள்ளனர். சில பேர் அழகு நிலையத்திற்க்கோ அல்லது சிகிச்சை மூலமாகவோ அழகுபடுத்தி கொள்கின்றனர். அதற்க்கு நிறைய பணமும் செலவிடுகின்றனர். இவ்வகையான அழகுபடுத்தும் முறை பலனளித்தாலும் நாட்கள் செல்ல செல்ல பின்விளைவுகளை தருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இயற்கையாக இருந்த அழகை விட மோசமான நிலைக்கு தள்ளிவிடவும் வாய்ப்புகள் உள்ளது. சில அழகுபடுத்தும் முறைகள் பயனளிக்கலாம் ஆனால் சில அழகுபடுத்தும் முறைகள் பயனளிக்காமல் சென்றுவிடும். இதனை கவனமாக வையாளவேண்டும். இல்லை என்றால் பின்விளைவுகள் மோசமாகி விடும். 


அழகு பராமரிப்பும், ஆரோக்கிய பராமரிப்பும் மிக மிக அவசியம். இரண்டுமே நலனோடு இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அழகு என்பது வெள்ளை நிறத்தை மட்டும் குறிப்பதல்ல. நான் பிறக்கும் போது எப்படி இருந்தோமோ அதைவிட அழகு வேறொன்றும் கிடையாது. அந்த அழகை பாதுகாப்பது மிகவும் அவசியம். அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க நான் சொல்லும் இந்த ஒரு ஸ்மூத்தியையும் காலையில் குடித்து பாருங்கள். இந்த ஸ்மூத்தி சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாகவும், முகத்தை இயற்கையாக பொலிவாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றனர்.முகத்தில் இருக்கும் கன்னம் பிங்க் ஆகவும் இருப்பதற்கு நான் சொல்லும் இந்த ஸ்மூத்தி ரெசிபியை தினமும் காலையில் சாப்பிட்டு பாருங்கள். முகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். முகத்திற்கு மட்டும் இல்லாமல் உடலின் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது. 

இயற்கையான அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக்கொடுக்கும் சுவையான ஸ்மூத்தி  தயாரிப்பது எப்படி என்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.

பீட்ருட் &  ஸ்ட்ராவ்பெர்ரி ஸ்மூத்தி

தேவையானப் பொருட்கள்:

  • பீட்ருட் - 1
  • ஸ்ட்ராவ்பெர்ரி -2
  • துருவிய தேங்காய் - ஒரு கை பிடி 
  • பாதாம் - தேவையான அளவு 
  • சுத்தமான நாட்டு கருப்பட்டி பவுடர் - தேவையான அளவு  

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். அரைத்துவைத்ததை ஒரு கிளாசில் ஊற்றி பருகுங்கள். உங்களிடம் நட்ஸ் இருந்தால் ஸ்மூத்தி மேலே போட்டு பருகுங்கள். சுவை இன்னும் அதிகமாக இருக்கும். வாரத்திற்கு இரண்டியில் இருந்து மூன்று நாட்கள் இந்த ஸ்மூத்தியை பருகுங்கள். உடலுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும் பல மடங்கு அள்ளிக்கொடுக்கும்.