Palmyra root tuber:நாவை சுவையால் நடனமாட வைக்கும் பனங்கிழங்கு ரெசிபி!...

 

View This Image


பனங்கிழங்கு ரெசிபி 


பனங்கிழங்கு (Root Panangkizhangu):பனம் பழங்களை முளைக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் முளைத்தண்டே பனங்கிழங்கு. இக்கிழங்கு அதிகப்பற்றமாக தென் இந்திய பகுதிகளில்  காணப்படுகிறது. மலிவான விலையில் சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கும் இந்த கிழங்கை கிராமப்புறங்களில் இக்கிழங்கை  ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுகிறார்கள்.வேகவைக்கப்பட்டு  தீயில் சுடப்பட்ட கிழங்கானது சித்த மருத்துவத்தில் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.முதிர்ச்சியடைந்த விதைகள் எவ்வித பயனைத் தராத போதிலும் அவற்றை முளைக்க வைத்து மாவுச்சத்து மிகுந்த முதல் இலையுடன் கூடிய தரை கீழ் தண்டான பனங்கிழங்குகளை பல விதங்களில் சுவையான முறையில் சாப்பிடுவதற்கு பயன்படுத்தலாம்.


பனங்கிழங்கை வைத்து நாவை நாட்டியம் ஆட வைக்கும் சுவையான ரெசிபி வகைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம்.


View This Image

1.பனங்கிழங்கு லட்டு 


தேவையானப் பொருட்கள்:


  • பனங்கிழங்கு - 100 கிராம் 
  • பாசிப்பருப்பு - 100 கிராம் 
  • நெய் - 50 கிராம் 
  • சர்க்கரை - 200 கிராம் 
  • பால் - 50 மில்லி லிட்டர் 


செய்முறை:

பாசிப்பருப்பை கடாயில் போட்டு நன்றாக வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன், மாவாக்கப்பட்ட சர்க்கரையையும் வறுக்கப்பட்ட பனங்கிழங்கு மாவு இளஞ்சூடாக இருக்கும்போது கலந்து கொள்ளவும். நெய் மற்றும் பாலை இதனுடன் கலந்து கைப்பதத்துடன் நன்றாக பிணைந்து உருண்டை உருண்டையாய் உருட்டி எடுத்தால் லட்டு தயார்.


2.பனங்கிழங்கு கேசரி


தேவையானப் பொருட்கள்:


  • பனங்கிழங்கு - 150 கிராம் 
  • சர்க்கரை - 300 கிராம் 
  • முந்திரி மற்றும் உலர் திராட்சை - 10 கிராம் 
  • நெய் - 40 கிராம் 
  • கேசரி பவுடர் (ஆரஞ்சு நிறம்) - சிறிதளவு  


செய்முறை:

பனங்கிழங்கு மாவை முதலில் கடாயில் தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வேறு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி மற்றும் உலர் திராட்சையை நன்றாக வறுத்து அதனுடன் வறுத்து வைத்துள்ள பனங்கிழங்கு மாவை சேர்த்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து மெதுவாக அதே நேரம் தொடர்ச்சியாக அடியில் பிடிக்காத அளவு கிண்டவும். கலவை நன்றாக கலந்த உடன் ஆரஞ்சு நிறமியையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு நன்கு பதமாக வந்தவுடன் இறக்கவும்.இப்பொது பனங்கிழங்கு கேசரி தயார். 


3.பனங்கிழங்கு பாயாசம்


தேவையானப் பொருட்கள்:


  • பனங்கிழங்கு மாவு - 100 கிராம் 
  • பால் - 200 மில்லி லிட்டர் 
  • சர்க்கரை - 200 கிராம் 
  • உலர் திராட்சை  மற்றும் முந்திரி - 15 கிராம்
  • நெய் - 15 கிராம் 
  • ஏலக்காய் - 2 கிராம் 


செய்முறை:

முதலில் பனங்கிழங்கு மாவை கடாயில் இட்டு பொன்னிறமாக  வறுத்து இதனுடன் கொதிநீர் சேர்த்து மிருதுவாக வேகவைத்துக் கொள்ளவும். அடுத்து சர்க்கரை மற்றும் பாலை இதனுடன் சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவைத்து ஏலக்காய், நெய், முந்திரி, திராட்சை எல்லாம் போட்டு நன்கு கலக்கியவுடவும். அவ்வளவுதான் பனங்கிழங்கு பாயாசம் ரெடி. 


4.பனங்கிழங்கு உப்புமா


தேவையானப் பொருட்கள்:


  • பனங்கிழங்கு மாவு - 100 கிராம் 
  • வெங்காயம் - 25 கிராம் 
  • மிளகாய் - 5 கிராம் 
  • கடுகு - தேவையான அளவு 
  • உளுந்து மாவு - 3 கிராம் 
  • எண்ணெய் - 25 கிராம் 
  • கருவேப்பிலை  மற்றும் உப்பு - தேவையான அளவு 


செய்யும்முறை:

முதலில் பனங்கிழங்கு மாவை இரண்டு நிமிடம் கடாயில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கி மூன்று டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கடைசியாக வறுத்து வைத்த பனங்கிழங்கு ரவையை சேர்த்து சரியான பதத்தில் கிளறி இறக்கினால் பனங்கிழங்கு உப்புமா ரெடி.

 

5. பனங்கிழங்கு சோயா லட்டு 


தேவையான பொருட்கள்:


  • பனங்கிழங்கு - 100 கிராம் 
  • சோயா மாவு - 100 கிராம் 
  • நிலக்கடலை - 60 கிராம் 
  • வெல்லம் - 150 கிராம் 
  • நெய் - 50 கிராம் 
  • ஏலக்காய் பொடி - 1 கிராம் 


செய்முறை:

பனங்கிழங்கு மாவையும் சோயா மாவையும் நெய் விட்டு நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் சர்க்கரையை பாகாக கம்பிப் பதத்தில் வரும்படி காய்ச்சி அதில் ஏலக்காய் பொடி, நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து வைத்த மாவையும் இதனுடன் சேர்த்து கைப்பதமாக வந்தவுடன் உருண்டைகளாக உருட்டி  வைக்கவும். சுவையான பனங்கிழங்கு சோயா லட்டு ரெடி.


6.பனங்கிழங்கு மாவு பக்கோடா


தேவையானப் பொருட்கள்:


  • பனங்கிழங்கு மாவு - 100 கிராம் 
  • கொண்டக்கிடலை மாவு - 100 கிராம் 
  • வெங்காயம் - 30 கிராம் 
  • உருளைக்கிழங்கு - 10 கிராம் 
  • கேரட் - 50 கிராம் 
  • பீன்ஸ் - 50 கிராம் 
  • மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - 200 மில்லி லிட்டர் 


செய்முறை:

முதலில், காய்கறிகளை நீளவாக்கில் சிறுதுண்டுகளாக நறுக்கி அபனங்கிழங்கு அத்துடன் பனங்கிழங்கு  மாவு, கொண்டக்கடலை மாவு,மிளகாய்த் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் அப்படியே நன்றாக பிசைந்து பக்கோடா போன்ற அமைப்பில் நன்கு வறுத்தால் பக்கோடா கிடைக்கும்.


7.பனங்கிழங்கு மாவு இட்லி


தேவையான பொருட்கள்:


  • சுத்தம் செய்யப்பட்ட கோதுமை ரவை - 50 கிராம் 
  • பனங்கிழங்கு ரவை - 50 கிராம் 
  • கொண்டக்கடலை மாவு -  10 கிராம் 
  • உளுந்து மாவு - 10 கிராம் 
  • எண்ணெய் - 10 கிராம் 
  • தயிர் - 100 கிராம் 
  • கொத்தமல்லி இலை, கருவேப்பிலை - சிறிதளவு 
  • கடுகு - 5 கிராம் 
  • உப்பு - தேவையான அளவு 


செய்முறை:

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கொண்டக்கடலை மாவு, உளுந்து மாவு, மற்றும் கருவேப்பிலை முதலியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் கோதுமை ரவை மற்றும் பனங்கிழங்கு ரவை இவற்றை சேர்த்து தொடர்ச்சியாக பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். இக்கலவையை குளிரவைத்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவிட வேண்டும். இதனை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தால் பனங்கிழங்கு மாவு இட்லி ரெடி.